ஒசூரில் உயர்கல்வி வழிகாட்டி
விழிப்புணர்வு மற்றும்
நேரடி சேர்க்கை சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் ஏசியன் கிறிஸ்டியன் பள்ளியில்
மாவட்ட நிர்வாகம் மற்றும்
பள்ளி கல்வி துறை சார்பாக
உயர்கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு மற்றும்
நேரடி சேர்க்கை சிறப்பு முகாம்
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள் 19.06.2026 அன்று துவக்கி வைத்து
மாணவ மாணவியர்களுக்கு
உயர் கல்வி சேர்க்கைகான
ஆணைகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி. ஜுன். 20. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் ஏசியன் கிறிஸ்டியன் பள்ளியில்
மாவட்ட நிர்வாகம் மற்றும்
பள்ளி கல்வி துறை சார்பாக
உயர்கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு
மற்றும்
நேரடி சேர்க்கை சிறப்பு முகாமை
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள்
19.06.2026 அன்று துவக்கி வைத்து
மாணவ மாணவியர்களுக்கு
உயர் கல்வி சேர்க்கைகான
ஆணைகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் உரையாற்றும் போது:
கிருஷ்ணகிரி,
காவேரிப்பட்டினம்,
பர்கூர்,
வேப்பனப்பள்ளி,
ஒசூர்,
மற்றும்
சூளகிரி
ஒன்றியங்களைச் சேர்ந்த
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள்
தேர்ச்சி பெற்று மற்றும் தேர்ச்சி பெறாத
மாணவர்களுக்கு உயர் கல்வியில்
சேர்வதற்கான சிறப்பு முகாம்
நடைபெற்றது.
முகாமில் ஆறு ஒன்றியங்களைச் சார்ந்த
392 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
இம்முகாமில் கலந்துக்கொண்ட
மாணவர்களில்
58 மாணவர்களுக்கு
உடனடியாக உயர்கல்வி சேர்க்கைகான
ஆணைகள் வழங்கப்பட்டது.
மீதம் உள்ள மாணவர்கள் வரும் நாட்களில் சேர்க்கைகாக ஆய்த்தப்படுத்தப்பட்டார்கள்.
மேலும் உயர்கல்வி சேரவுள்ள மாணவ மாணவியர்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் விண்ணப்பிக்கும் பட்டசத்தில்
24 மணி நேரத்திற்குள் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
நமது மாவட்டத்தில்
தளியில் தோட்டகலை துறை சார்பாக
டிப்ளோமோ 3 ஆண்டுகள்
பயிலும் வகையில்
வாழை,
மூங்கில்.
போன்ற திசு வளர்ப்பு படிப்புகள் உள்ளன.
திசு வளர்ப்பு படிப்பின் மூலம்
பெருநிறுவனங்களில்
நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.
நமது மாவட்டம் தோட்டக்கலை சார்ந்த
காய்கறிகள்,
மலர்,
உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.
ஆகையால் தோட்டகலை சார்ந்த படிப்புகள் மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
மேலும்
ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் போன்ற தொழில் கல்வி பயிலுவதின் மூலம்
எதிர் காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளை
பெற முடியும்.
12 வகுப்பு முடித்த மாணவர்கள்
உயர் கல்வி சேருவதை
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட கல்வி அலுவலர்கள்
தொடர் கண்காணிப்பின் மூலம்
உறுதி செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை
12-ம் வகுப்பு வரை படிக்க
வைப்பது மட்டும் அல்லாமல்
உயர் கல்வி பயில வைக்க வேண்டும்.
உயர் கல்வி பயின்றால் தான்
தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வது
மூலம் வேலைவாய்ப்புகளுக்கு செல்லலாம்.
எனவே இந்த வாய்ப்பை
பயன்படுத்திக்கொண்டு
தங்களுக்கு பிடித்த பாடதிட்டங்களை
தேர்வு செய்து உயர்கல்வி
பயில வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இம் முகாமில்
அரசு மகளிர் கலைக்கல்லூரி கிருஷ்ணகிரி,
பருகூர் மற்றும் அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிருஷ்ணகிரி,
அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு தொழில் பயிற்சி நிறுவனம் கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி கல்லூரியைச் சார்ந்தவர்கள் அரங்கம் அமைத்து மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
துணை ஆட்சியர் (பயிற்சி)
செல்வி.சௌமியா,
முதன்மை கல்வி அலுவலர்
இரா.மதன்குமார்,
மாவட்ட கல்வி அலுவலர்
திருமதி.டீ.கவுசர்,
மாவட்ட கல்வி அலுவலர் (பொ)
T.கிருஷ்ணன்,
திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர்
திரு.பன்னீர்செல்வம்,
மாவட்ட உதவி திட்ட அலுவலர்
திரு. ம.மகேந்திரன்,
மாவட்ட ஆட்சி நேர்முக உதவியாளர் (கல்வி)
திரு.சர்தார்
ஆகியோர்
உயர்கல்வி வழிகாட்டி குறித்து
மாணவர்களுக்கு அறிவுரைகளை
வழங்கினார்கள்.
----------------------------------------------------.