வருவாய் தீர்வாயம்
(ஜமாபந்தி)
நான்காவது நாள்
142 மனுக்கள் பெறப்பட்டது.
பாகலூர் உள்வட்டத்திற்குட்பட்ட
11 கிராமங்களுக்கான
1435 ஆம் பசலி ஆண்டுக்கான
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு
ஒசூர். ஜுன். 18. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,
பாகலூர் உள்வட்டத்திற்குட்பட்ட
11 கிராமங்களுக்கான
1435 ஆம் பசலி ஆண்டுக்கான
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
நான்காவது நாள் நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
(18.06.2026) நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
12.06.2026 முதல் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில்
இன்று நான்காவது நாள் நிகழ்ச்சியில்,
பாகலூர் உள்வட்டத்திற்குட்பட்ட
கொளதாசபுரம், நந்திமங்கலம்,
பலவனப்பள்ளி, அடவனப்பள்ளி,
சூடுகொண்டப்பள்ளி, அளேநத்தம்,
நாரிகானபுரம், ஆலூர்
ஆகிய 8 வருவாய் கிராமங்களுக்கும்
மற்றும்
மத்திகிரி உள்வட்டத்தில்
மத்திகிரி,
ஒன்னல்வாடி,
தொரப்பள்ளி அக்ரஹாரம்
ஆகிய 3 வருவாய் கிராமங்கள் என
மொத்தம் 11 வருவாய்
கிராமங்களுக்குட்பட்ட
பொதுமக்களிடமிருந்து,
முதியோர் உதவித்தொகை,
சாதிச்சான்றிதழ்,
பட்டா மாற்றம்,
உட்பிரிவு பட்டா மாற்றம்,
வீட்டுமனை பட்டா,
பட்டா ரத்து,
ஆக்கிரமிப்பு அகற்றுதல்,
நில அபகரிப்பு,
புதிய குடும்ப அட்டை,
கிராம கணக்கில் மாற்றம்,
இதர துறை மனுக்கள்
என மொத்தம் 142 மனுக்களை
பெற்றுக்கொண்ட
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
தகுதியான மனுக்கள் மீது உடனடியாக
நடவடிக்கை மேற்கொள்ள
அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
மேற்குறிப்பிட்ட 11 கிராமங்களை சேர்ந்த
கிராம கணக்கு பதிவேடுகளான
அ - பதிவேடு,
எப்.எம்.பி. பதிவேடு,
அடங்கல்,
1 ஏ உள்ளடக்கம்,
பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு,
தனிபட்டா,
சிட்டா மற்றும் அடங்கல்,
பண வரவு பதிவேடு
உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தலைமையில்,
நிறைவு நாள் 19.06.2026
(வெள்ளிக்கிழமை) அன்று,
மத்திகிரி உள்வட்டத்தில்
நாகொண்டப்பள்ளி,
எஸ்.முதுகானப்பள்ளி,
பஞ்சாட்சிபுரம்,
முகளூர்,
கோபனப்பள்ளி,
அச்செட்டிப்பள்ளி,
நாலிகபெட்ட அக்ரஹாரம்,
மொத்தம் அக்ரஹாரம்,
கொத்த கொண்டப்பள்ளி
பூனப்பள்ளி
ஆகிய 10 கிராமங்களுக்கான
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும்
தங்களது கோரிக்கை
மனுக்களை வழங்கலாம்.
தகுதியான மனுக்கள் மீது
உரிய நடவடிக்கை மேற்கொண்டு
உடனடி தீர்வு காணப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
பேரண்டப்பள்ளி, ஆலூர் கிராமத்தைச் சேர்ந்த
திரு.தம்மப்பா
த/பெ.முனியப்பா
என்பவர் தனது மகன் விஸ்வதேஜாஸ் -க்கு
வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில்
தந்தை பெயர் தவறுதலாக
பதிவு செய்திருந்த நிலையில்,
தந்தை பெயர் தம்மப்பா என மாற்றி தர
மனு அளித்ததன்பேரில்
உடனடி நடவடிக்கையாக
புதிய பிறப்பு சான்றிதழ்
வழங்கினார்.
மேலும்,
ஓசூர் வட்டம், புக்கசாகரம் ஊராட்சி,
ஆபிரி கிராமத்தைச் சேர்ந்த
திரு. முனிராஜ் அவர்கள் தனது ஆளூர் கிராம நத்தம் சர்வே எண்.632/34 -ல் குடியிருந்து வரும் நிலையில், தனது தந்தையின் பெயரில் உள்ள கிராம நத்த பட்டாவை தனது பெயருக்கு மாற்றி தர கோரி மனு அளித்ததன்பேரில்,
உடனடி நடவடிக்கையாக
பட்டா மாற்றத்திற்கான
ஆணை வழங்கினார்.
தொடர்ந்து,
ஒசூர் வட்டம், சிந்தல்பட்டி தரப்பு,
திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த
திரு. முனியப்பா
த/பெ.நாராயணசாமி என்பவர், தனது தந்தை மரணமடைந்தையொட்டி,
தனக்கு வாரிசு சான்றிதழ் கோரி
மனு அளித்ததையடுத்து,
உடனடி நடவடிக்கையாக
வாரிசு சான்றிதழை
வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,
தனி மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.ராஜா (உதவி நிலவரித்திட்டம்),
மாவட்ட ஆட்சியர்
அலுவலக மேலாளர் (பொது)
திரு.குருநாதன்,
ஓசூர் வட்டாட்சியர்
திரு.ஜெகதீஸ்குமார்,
தனி வட்டாட்சியர்கள்
திரு.சண்முகம்,
திரு.சுப்ரமணி
மற்றும் வருவாய் துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மைத்துறை, தாட்கோ, மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
--------------------------------------------.