ஜெபமாலை
சிறப்பு திருப்பலி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மத்திகிரியில்
வரலாற்று சிறப்பு வாய்ந்த
நூற்றாண்டு பாரம்பரியமிக்க
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
மாதத்தின் முதல் சனிக்கிழமை
ஜெபமாலை
சிறப்பு திருப்பலி
நற்கருணை ஆசீர்வாதம்
அருட்பணி ஜேம்ஸ் SDB
வழிநடத்தினார்.
ஓசூர். ஜுலை. 04. -
மாதத்தின் முதல் சனிக்கிழமை
ஜெபமாலை
சிறப்பு திருப்பலி
நற்கருணை ஆசீர்வாதம்.
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரி குதிரைபாளையத்தில் உள்ள
புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயத்தில்
மாதத்தின் முதல் சனிக்கிழமை
ஜெபமாலை
சிறப்பு திருப்பலி
நற்கருணை ஆசீர்வாதம்
நடைபெற்றது.
பாரம்பரிய ஆலயம்
மத்திகிரி குதிரைப்பாளையத்தில்
நூற்றாண்டுகள் பழமையான
பாரம்பரிய புனித ஆரோக்கிய
அன்னை ஆலயம்
மற்றும்
மத்திகிரி நேதாஜி நகரில்
புதிய புனித ஆரோக்கிய
அன்னை ஆலயம்
ஆகிய இரு ஆலயங்கள்
அமைந்துள்ளது.
இதில் நூற்றாண்டுகளாக மத்திகிரி மற்றும்
அதைச்சுற்றியுள்ள மக்களுக்கு
அருள்பாலித்து, அற்புதங்கள் நிகழ்த்தி வரும்
புனித ஆரோக்கிய அன்னையின் பாரம்பரிய ஆலயத்தில்
ஜுலை. 4-ம் தேதி சனிக்கிழமை அன்று
மாதத்தின் முதல் சனிக்கிழமை
ஜெபமாலை
சிறப்பு திருப்பலி
நற்கருணை ஆசீர்வாதம்
நடைபெற்றது.
ஜெபமாலை பவனி
சிறப்பு திருப்பலி
தொடங்குவதற்கு முன்னதாக
ஜெபமாலை பவனி நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபமாலை சொல்லியபடி
புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயத்தை சுற்றி பவனி வந்து
திருப்பலியில் பங்கேற்றனர்.
இந்த சிறப்பு திருப்பலியில்
அருட்பணி ஜேம்ஸ்.
SDB
அவர்கள்
தலைமையில்
திருப்பாடல்களுடன்,
சிறப்பு திருப்பலி,
சிறப்பு மறையுரை மற்றும்
நற்கருணை ஆராதனை
ஆகிய சிறப்பு ஜெப வழிபாடுகள்
நடைபெற்றது.
இந்த சிறப்பு திருப்பலியில்
மத்திகிரி புனித ஆரோக்கிய
அன்னை ஆலய பங்கு தந்தை
அருட்பணி
போஸ்கோ
மதலை முத்து.
அவர்கள்
உதவி பங்கு தந்தை,
அருட்சகோதரிகள்,
பங்கு குழுவினர், நூற்றுக்கணக்கான
பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
அறுசுவை உணவு
அனைவருக்கும் அறுசுவை உணவு
வழங்கப்பட்டது.
மாதத்தின் முதல் சனிக்கிழமை
ஜெபமாலை
சிறப்பு திருப்பலி முன்னிட்டு
புனித ஆரோக்கிய அன்னை
பாரம்பரிய ஆலயம்
வண்ணவிளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
----------------------------------------.
குறிப்பு ---
மத்திகிரி பாரம்பரிய ஆலயத்தில்...
ஒவ்வொரு மாதமும்...
மாதத்தின் முதல் சனிக்கிழமை
மாலை 6 மணிக்கு
ஜெபமாலை
சிறப்பு திருப்பலி
நடைபெறும் என்று
பங்கு தந்தை
அருட்பணி
போஸ்கோ மதலை முத்து
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------.