போலியோ சொட்டு மருந்து
முகாம்
ஓசூர் மாநகராட்சி பகுதியில்
5 வயதுக்குட்பட்ட அனைத்து
குழந்தைகளுக்கும்
போலியோ சொட்டு மருந்து
முகாம் தொடக்க நிகழ்ச்சியை
ஒசூர் மேயர்
திரு. S.A.சத்யா.
அவர்கள்
தொடங்கி வைத்தார்.
ஒசூர் . ஜுன். 28. –
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில்
சுகாதாரத்துறை சார்பில்
அமைக்கப்படிருந்த போலியோ சொட்டு
மருத்து முகாம்களில்
5 வயதுக்குட்பட்ட அனைத்து
குழந்தைகளுக்கும்
போலியோ சொட்டு மருந்து
வழங்கும் பணிகள் இன்று (28.06.2026)
சிறப்பாக நடைபெற்றது.
ஓசூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில்
நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து
முகாம் தொடக்க நிகழ்ச்சியில்,
ஒசூர் மேயர்
திரு. S.A.சத்யா.
அவர்கள்
தலைமை வகித்து முகாமை
தொடங்கி வைத்து,
குழந்தைகளுக்கு போலியோ
சொட்டு மருந்து வழங்கினர்.
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
பேருந்து நிலையம்,
ரயில்வே சந்திப்பு,
அங்கன்வாடி மையங்கள்,
நகர்ப்புற ஆரம்ப சுகாதார
நிலையங்கள் (UPHC),
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்,
சிறப்பு முகாம் மையங்கள்
மற்றும்
நடமாடும் (Mobile) குழுக்கள்
மூலம் குழந்தைகளுக்கு போலியோ
சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில்
அமைக்கப்பட்ட அனைத்து
போலியோ முகாம் மையங்களிலும்
சுகாதார பணியாளர்கள்,
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும்
நடமாடும் குழுக்கள் மூலம்
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து
வழங்கப்பட்டது.
பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள
போலியோ முகாம் மையங்களுக்கு அழைத்து
வந்து பயன்பெற்றனர்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை
பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி மற்றும்
சுகாதாரத்துறை சார்பில்
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில்
மாநகர நல அலுவலர் டாக்டர். அஜிதா
திரு. C. ஆனந்தைய்யா, பொது சுகாதாரக் குழுத் தலைவர் திரு.N.S.மாதேஸ்வரன், மண்டலக் குழுத் தலைவர் திரு.ரவி, மாமன்ற உறுப்பினர் திருமதி. மல்லிகா தேவராஜ் மற்றும் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
--------------------------------------------