ஒசூர் லேக் வியூ ரோட்டரி சங்கம்
20 சக்கர நாற்காலிகள்
நன்கொடை
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் மாநகராட்சி
ஒசூர் லேக் வியூ ரோட்டரி சங்கம் சார்பாக,
மாற்றுத்திறனாளிகள் நலப் பிரிவான
"விழுதுகள்" (VIZHUDHUGAL) அமைப்பிற்கு
ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான
20 சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி. ஜுன். 18. -
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,
ஒசூர் லேக் வியூ ரோட்டரி சங்கம் சார்பாக,
கிருஷ்ணகிரி சுகாதாரத் துறையின் கீழ்
செயல்படும் மாற்றுத்திறனாளிகள்
நலப் பிரிவான
"விழுதுகள்" (VIZHUDHUGAL) அமைப்பிற்கு
ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான
20 சக்கர நாற்காலிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் முன்னிலையில்,
ஓசூர் லேக் வியூ ரோட்டரி சங்கத் தலைவர்
திரு.செந்தில் குமார் அவர்கள்,
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்
திரு.முருகேசன் அவர்களிடம்
இன்று (18.06.2026) வழங்கினார்.
ஒசூர் லேக் வியூ ரோட்டரி சங்கம் சார்பில்
சுகாதாரத் துறையின்
மாற்றுத்திறனாளிகள் நலப் பிரிவான
"விழுதுகள்" அமைப்பிற்கு
தலா ரூ.6,550 வீதம் மொத்தம்
ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான
20 சக்கர நாற்காலிகளை
சேலம் ராஜேஷ் அறக்கட்டளையின்
(Rajesh Foundation)
நிறுவனர் ரோட்டேரியன்
டாக்டர்.ராஜேஷ்
அவர்களின் நிதியுதவியுடன்
வழங்கப்பட்டது.
ஓசூரில் உள்ள இந்த மையத்திற்கு
சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு
இந்த நாற்காலிகள் மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.
இந்த 20 நாற்காலிகளும்
ஒசூர்,
தளி
மற்றும்
சூளகிரி
ஆகிய வட்டாரங்களில் உள்ள
அனைத்து மையங்களுக்கும்
பகிர்ந்தளிக்கப்படும்.
நன்றி
ராஜேஷ் அறக்கட்டளை மற்றும்
ரோட்டரி சங்கத்தின்
இந்த உன்னதமான பங்களிப்பு மற்றும்
ஆதரவிற்கு "விழுதுகள்" குழுவினர்
தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
முன்னதாக,
மே 2026-ல், ஓசூர் லேக் வியூ ரோட்டரி
சங்கத்தின் ஏற்பாட்டில் இதே அமைப்பால்
ஓசூரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு
3 சக்கர நாற்காலிகள்
வழங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில்
ஓசூர் லேக் வியூ ரோட்டரி
சங்கத் தலைவர்கள்
திரு.செந்தில் குமார்,
திரு.மகேஷ்,
சங்க நிர்வாகி
திரு.காஸ்பர் ஜோசப்,
ஆலோசகர்
திரு.வெங்கட்,
விழுதுகள் மைய ஒருங்கிணைப்பாளர்
திருமதி.கனிமொழி
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
---------------------------------------------.