கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மத்திகிரியில்
வரலாற்று சிறப்பு வாய்ந்த
நூற்றாண்டு பாரம்பரியமிக்க
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
அருள்மிகு சலேத்மாதா அன்பியம்
முதலாமாண்டு நிறைவு
சிறப்பு திருப்பலியில்
கொடி பவனியுடன் பங்கேற்ற இறைமக்கள்
ஓசூர். ஜுன். 28. -
புனித ஆரோக்கிய
அன்னை ஆலயம்
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரி நேதாஜி நகரில் உள்ள
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
அருள்மிகு சலேத் மாதா அன்பியம்
முதலாமாண்டு நிறைவு
சிறப்பு திருப்பலி
கொடி பவனியுடன் நடைபெற்றது.
பாரம்பரிய ஆலயம்
மத்திகிரி குதிரைப்பாளையத்தில்
நூற்றாண்டுகள் பழமையான
பாரம்பரிய புனித ஆரோக்கிய
அன்னை ஆலயம்
மற்றும்
மத்திகிரி நேதாஜி நகரில்
புதிய புனித ஆரோக்கிய
அன்னை ஆலயம்
ஆகிய இரு ஆலயங்கள்
அமைந்துள்ளது.
இதில் நேதாஜிநகர் ஆலயத்தில்
ஜுன். 28-ம் தேதி ஞாயிறு அன்று
அருள்மிகு சலேத் மாதா அன்பியத்தின்
முதலாமாண்டு நிறைவு விழா
சிறப்பு திருப்பலி
நடைபெற்றது.
கொடி பவனி
இந்த சிறப்பு திருப்பலி தொடங்குவதற்கு முன்னதாக
அருள்மிகு சலேத் மாதா கொடி பவனி நடைபெற்றது.
இந்த கொடிபவனியில்
பங்கு தந்தை
அருட்பணி
போஸ்கோ மதலை முத்து
அவர்கள் தலைமையில்
அருள்மிகு சலேத் மாதா அன்பியத்தின்
இறைமக்கள் கைகளில் கொடி ஏந்தி
பவனியாக வந்து திருப்பலியில்
பங்கேற்றனர்.
இந்த சிறப்பு திருப்பலியில்
மத்திகிரி புனித ஆரோக்கிய
அன்னை ஆலய பங்கு தந்தை
அருட்பணி
போஸ்கோ மதலை முத்து
அவர்கள் தலைமையில்
திருப்பாடல்களுடன்,
சிறப்பு திருப்பலி,
சிறப்பு மறையுரை மற்றும்
நற்கருணை ஆராதனை
ஆகிய சிறப்பு ஜெப வழிபாடுகள்
நடைபெற்றது.
அருள்மிகு சலேத் மாதா
அன்பியத்தைச் சேர்ந்த இறைமக்களுக்கு
சலேத் மாதாவின் திருஉருவப்படம்
வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு திருப்பலியில்
மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னை ஆலய
உதவி பங்கு தந்தை, அருட்சகோதரிகள்,
பங்கு குழுவினர், நூற்றுக்கனக்கான
பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
----------------------------------------.