டீல் நிறுவனத்தின்
சமூக பொறுப்பு நிதியின் கீழ்,
அரசுப்பள்ளிக்கு
புதிய வகுப்பறைகள்
கெலமங்கலம் ஒன்றியம்
நெல்லூர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில்,
டீல் நிறுவனத்தின்
சமூக பொறுப்பு நிதியின் கீழ்,
ரூ.37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள
2 வகுப்பறைகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி. ஜுன். 19. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,
தொட்டதும்மனஹள்ளி ஊராட்சி,
நெல்லூர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில்,
டீல் நிறுவனத்தின்
சமூக பொறுப்பு நிதியின் கீழ்,
ரூ.37 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள
2 வகுப்பறைகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (19.06.2026) திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தொட்டதும்மனஹள்ளி ஊராட்சி, நெல்லூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 180 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இவர்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் ஏழை மாணவ, மாணவியர் ஆவார். இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது.
இந்தப் பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், கூடுதல் வகுப்பறைகள் கட்டி தர இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.பிரேமலதா அவர்கள்
டீல் நிறுவனத்திற்கு வேண்டுகோள்
வைத்தார்.
அதனைத்தொடர்ந்து,
இப்பள்ளிக்கு டீல் நிறுவன பெருநிறுவனம்,
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன்,
சமூக பொறுப்புணர்வு நிதி மூலம்
ரூ.37.00 லட்சம் மதிப்பில்
1,350 சதுர அடியில்,
இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்ட
கடந்த நவம்பர் -2025 மாதம்
அடிக்கல் நாட்டப்பட்டது.
தொடர்ந்து,
பணிகள் முடிவடைந்த நிலையில்
இன்று (19.06.2026) இரண்டு வகுப்பறைகள்
மாணவர்களின் பயன்பாட்டிற்காக
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்பறைகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்பறைகளை நல்ல முறையில் பராமரித்து, மாணவர்களுக்கு பயன்படுத்துவதை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
டீல் நிறுவனம், பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து
ரூ.8 கோடி மதிப்பில்,
இரண்டு ஆரம்ப சுகாதார நிலையம்,
மூன்று அரசு பள்ளிகளுக்கு
கூடுதலாக 10 வகுப்பறைகள்,
4 பள்ளிகளுக்கு கழிவறை மற்றும்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை
செயல்படுத்தி உள்ளது.
டீல் நிறுவனம் சமூக பொறுப்பு நிதியின்
மூலம் கட்டப்பட்ட உனிசெட்டி
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,
தனியார் மருத்துவமனைக்கு
நிகராக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு
சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதேப்போல்
முகலூரில் இரண்டு பள்ளிகள் சிறப்பாக அமைத்து தந்துள்ளனர்.
மேலும்,
ஒசூர் ஆர்.வி.அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில்
கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.
டீல் நிறுவனம்
பல்வேறு சமூக பொறுப்புணர்வு
திட்டங்களை தொடர்ந்து
நிறைவேற்றி வருகிறது.
மாவட்டத்திற்கு தேவையான நல்ல தரமான, திட்டங்களை தேர்ந்தெடுத்து முழு நிதியும் மாவட்டத்திற்கு உபயோகப்படுத்துகிறது.
மாவட்டத்தில் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிலம், அனுமதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்துகொடுக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு பெருமளவு வேலைவாய்ப்பு கொடுத்து அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த டீல் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தங்கள் நிறுவனம் பலமடங்கு லாபம் ஈட்டி அவற்றை சமுதாயத்திற்கு திருப்பி செலுத்த வேண்டும்.
நன்றி
பொதுமக்களின் நலனுக்காக
தரமான திட்டங்களை
செயல்படுத்தி வரும்
டீல் நிறுவனத்திற்கு
மாவட்ட நிர்வாகம் மூலம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
டீல் நிறுவன நிர்வாக மேலாளர்
திரு.என்.பி.ஸ்ரீதர்,
பெருநிறுவன சமூக
பொறுப்புணர்வு திட்ட தலைவர்
திரு.பாஸ்கர்,
திட்ட அலுவலர்
திரு.பிரபு,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (கல்வி)
திரு.சர்தார்,
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
திரு.நரசிம்மன்,
வட்டார கல்வி அலுவலர்
திரு.லோகேஷ்,
தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர்
திரு.வேலு,
கெலமங்கலம்
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.ராஜேஷ்,
டீல் நிறுவன பொது மேலாளர்கள்
திரு.ஹரிஹர சுப்பிரமணியம்,
திரு.ஹரிஹரன்,
திரு.சிவராஜா சேகர்,
திரு.மாணிக்கம்,
சமூக மேம்பாட்டு குழு உறுப்பினர்கள்
திருமதி.கௌசல்யா,
திரு.பிரபாகரன்,
திரு.பலராமன்,
திரு.மாதேஷ்,
திரு.பூபதி,
பள்ளி தலைமையாசிரியர்
திருமதி.பிரேமலதா.
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள்
கலந்துகொண்டனர்.
----------------------------------------------.