வள பயிற்றுநர்கள்
பணியிடங்களுக்கு
தகுதியுள்ள பெண்கள்
விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
மாநில, மாவட்ட மற்றும் வட்டார
வள பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு
தகுதியும், விருப்பமும் உள்ள பெண்கள்
29.06.2026-க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன். 15. –
மாநில, மாவட்ட மற்றும் வட்டார
வள பயிற்றுநர்கள் பணிக்கு
விண்ணப்பம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
மாநில, மாவட்ட மற்றும் வட்டார
வள பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு
தகுதியும், விருப்பமும் உள்ள பெண்கள்
29.06.2026-க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மாநில ஊரக
வாழ்வாதார இயக்கத்தின் சார்பில்,
உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள் மற்றும்
சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை முழுமையாக்கும் திட்டப் பணியின்
இரண்டாம் கட்ட செயல்பாடுகள்
மேலும் 15 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதற்கென
மாநில, மாவட்ட மற்றும் வட்டார
வள பயிற்றுநர்கள்
தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாநில வள பயிற்றுநர்
1. பெண்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை
2. கல்வித்தகுதி: சமூக கல்வி / சமூக அறிவியல் / ஊரக வளர்ச்சி / பெண்கள் கல்வி
அல்லது பணியிடங்கள் ஏதேனும் ஒரு முதுகலைப்பட்டம்.
3. வயது: 01.06.2026 அன்று 30-45 -க்குள்
4. அனுபவம்: 10 ஆண்டுகள், சுய உதவிக்குழு / கூட்டமைப்பில் பணியற்றிய அனுபவம் / பயிற்றுநர் / சமூக பணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் ஊரக பணிகளில் பணியாற்றி இருத்தல்.
மாவட்ட வள பயிற்றுநர்.
1. பாலினம்: பெண்கள் (சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை)
2. வயது: 30-45 (01.06.2026 அன்றுள்ளபடி)
3. தகுதி: ஏதேனும் முழு நேரக்கல்வி முறையில் முதுகலை படிப்பில் ஒரு பட்டப்படிப்பு
4. அனுபவம்: 4 வருடங்கள்.
வட்டார வள பயிற்றுநர்.
1. பாலினம்: பெண்கள் (சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை)
2. வயது: 25-45 (01.06.2026 அன்றுள்ளபடி)
3. கல்வி தகுதி: ஏதேனும் முழு நேரக்கல்வி முறையில் ஒரு பட்டப்படிப்பு
4. அனுபவம்: 3 வருடங்கள்.
மேலும்
மாநில, மாவட்ட மற்றும் வட்டார
வள பயிற்றுநர்களுக்கான
கூடுதல் தகுதிகள்
பின்வருவாறு:
1. மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத,
பேச தெரிந்திருத்தல்.
2. திறன்: தகவல் பரிமாற்றத்தில் தகுந்த திறன், ஒருங்கிணைப்பு, மனித உறவுகளை பேணுவதில் ஆற்றல், கைபேசி செயலிகளை கையாள்வது, கணினியில் Word, Excel இணைய பயன்படுத்துதலில், போதிய அறிவு பெற்றிருத்தல் அவசியம்.
இப்பதவிக்கான தகுதி மற்றும்
விருப்பமுள்ளவர்கள்
கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ,
நேரில் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ
விண்ணப்பங்களை 29.06.2026 -க்குள்
தகுதி குறித்த சுய சான்றிட்ட நகல்களுடன்
விண்ணப்பிக்குமாறு
தெரிவிக்கப்படுகிறது.
இப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடங்கள் இத்திட்டத்திற்கான 24 மாத கால வரையறை கொண்ட தற்காலிக பணியிடங்களாகும்.
மேலும் விபரங்களுக்கு,
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக
வாழ்வாதார இயக்கம்,
(மகளிர் திட்டம்)
அறை எண்: 11,
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சி துறை அலுவலக வளாகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கிருஷ்ணகிரி -635 115.
என்ற முகவரியிலும்,
https://tncdw.org
என்ற இணையதள முகவரியிலும்
அணுகலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------.