ஒசூர் மலைக்கோயில் வளாகத்தில்
சீரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா
டெலஸ் கோப் ஹவுஸ்
மற்றும்
நல்லுாரில் அமீகா அறக்கட்டளை நிறுவனம்
டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவன
சமூகப்பொறுப்பு நிதி
ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள
அங்கன்வாடிமைய கட்டிடம் ஆகியவற்றை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் திறந்து வைத்தார்.
ஒசூர். ஜுன். 12. –
சீரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா
டெலஸ் கோப் ஹவுஸ்
அங்கன்வாடி கட்டிடம்
திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி,
சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில்
வளாகத்தில்,
டெலஸ்கோப் ஹவுஸ் மற்றும்
சிறுவர் பூங்கா முழுமையாக
மறு சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் 12.06.2026 அன்று
திறந்து வைத்து
மரக்கன்றுகளை நடவு செய்தார்.
தொடர்ந்து
நல்லுர் அங்கன்வாடி மையத்தில்
சமூக பொறுப்பு நிதியின் கீழ்
கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை
கட்டடிடத்தை திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்தாவது:
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
அருள்மிகு சந்திரசூடேஸ்வரர்
மலைக்கோயில் வளாகத்தில்,
1993-ம் ஆண்டில் மாவட்ட நிர்வாகம்
மற்றும்
தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன்
சிறுவர் பூங்கா
மற்றும்
டெலஸ்கோப் மையம்
உருவாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக
பராமரிப்பு இல்லாத நிலையில்
தற்போது பொதுமக்கள் மற்றும்
கோவிலுக்கு வரும் பக்தர்களின்
கோரிக்கையேற்று
ஒசூர் மாநகராட்சி மற்றும்
கிரெடாய் அமைப்பின் சார்பாக
ரூ.10 லட்சம் மதிப்பில் டெலஸ்கோப் மற்றும்
சிறுவர் பூங்கா மறு சீராமைப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டது.
இந்த பூங்காவில் புதியதாக
பாதுகாப்பு வேலிகள்,
பசுமை வளர்ப்பு,
நடைபாதைகள்,
அமர்வு வசதிகள்,
குழந்தைகளுக்கான
விளையாட்டு உபகரணங்கள்,
டெலஸ்கோப் டோம் சீரமைப்பு
புதிய வானியல் தொலைநோக்கி
ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வரும் கிரெடாய் அமைப்பு
பொதுமக்களுக்கு தேவையான
அடிப்படை வசதிகளை
செய்து கொடுத்தல்,
பசுமை வளர்ப்பு
மற்றும்
மரக்கன்றுகள் நடுதல்
உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் பூங்காவை
சுத்தமாகவும்
சுகாதாரமாகவும் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.
அதேப்போல இன்று ஓசூர் நல்லூரில்
அமீகா அறக்கட்டளை
Amyga Foundation
நிறுவனம்
மற்றும்
டைட்டன் கம்பெனி லிமிடெட்
(Titan Company Limited)
நிறுவன சமூகப்பொறுப்பு நிதியின்(CSR) கீழ் அங்கன்வாடி மையத்தில்
ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளன.
அமீகா அறக்கட்டளை
(Amyga Foundation)
ஆரம்பக் காலகல்வித்துறையில்
முக்கிய பங்களிப்புகளை செய்து வருகிறது.
நல்லூர் அங்கன்வாடி மையத்தில்,
அமீகா அறக்கட்டளை ஆரம்பக்கால
குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும்
கல்வி (ECCE) பாடத்திட்டத்துடன்
இணங்கும் வகையில்
இலவச மாண்டிசோரி (Montessori)
முறையிலான ஆங்கில வழிக்கல்வியை
வழங்கி வருகிறது.
தற்போது ஆண்டு தோறும்
சுமார் 650 குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருவதுடன்,
இதுவரை 3,000க்கும் மேற்பட்ட
குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
எனவே பெற்றோர் இந்த வாய்ப்பை
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
துணை ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய் சைதன்யா ஜாதவ் இ.ஆ.ப.,
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி
மாவட்ட திட்ட அலுவலர்
திருமதி சுமதி,
ஊரக வளர்ச்சித்துறை
உதவி திட்ட அலுவலர்
திருமதி.சாந்தி,
இந்து சமய அறநிலையத்துறை
செயல் அலுவலர்
திருமதி.சித்ரா,
ஓசூர் மாநகராட்சி துணை மேயர்
திரு.ஆனந்தையா,
வட்டாட்சியர்
திரு.ஜெகதீஸ்வரன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.வெங்கடேசன்,
திரு.சிராஜுதீன்,
கிரெடாய் சங்க தலைவர்
திரு.குருநாதன்,
செயலாளர்
திரு.வெங்டாசலம்,
சமூக ஆர்வலர்
திரு.லட்சுமணன்,
திரு.நாகேஷ்
அமீகாஅறக்கட்டளை அறங்காவலர்கள்
திருமதி.லட்சுமிராமமூர்த்தி,
திருஎம். ஆர். தர்மராஜன்,
டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின்
சமூகப் பொறுப்பு நிதி மேலாளர்
திரு. வைரவேல்
உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
---------------------------------------------.