கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும்
உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மற்றும்
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
ஆகிய நல வாரியங்களில்
பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு
கீழ்கண்ட நலத்திட்ட உதவிகளுக்கு
விண்ணப்பித்து பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன். 24. -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள்
நல வாரியம் மற்றும்
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள்
நல வாரியம் ஆகிய நல வாரியங்களில்
பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு
கீழ்கண்ட நலத்திட்ட உதவிகளுக்கு
விண்ணப்பித்து பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள். பணியாளர்கள் நல வாரியம் மற்றும் உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியம் ஆகிய நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை
2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை
3. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை
4. கல்வி உதவித்தொகை
5. திருமண உதவித்தொகை
6. மகப்பேறு உதவித்தொகை
7. மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்
8. முதியோர் ஓய்வூதியம்
கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும்
உபதேசியார்கள் மற்றும்
பணியாளர்கள் நல வாரியம்:
மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற
1) கிறிஸ்துவ இனத்தைச் சார்ந்தவர்கள்
2) 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள்
3) கிறித்துவ உபதேசியார்கள்.
தேவாலயங்களில் பணியாற்றும் வேதியர்கள்.
சீஷப்பிள்ளைகள். பாடகர்கள், கல்லறை பணியாளர்கள். கிறிஸ்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் ஆகியோருக்கு முறையான மாதாந்திர ஊதியம் என்று இல்லாமல் உள்ளிட்ட பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.
மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இனி www.cwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள்
நல வாரியம்:
மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற
1) முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவர்கள்
2) 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள்
3) பள்ளிவாசல்கள் மற்றும்
மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள்,
பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் ஆசிரியைகள். மோதினார்கள்.
பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள்
தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள். தைக்காக்கள், ஆஷுர்கானாக் மற்றும்
முஸ்லீம் அனாதை இல்லங்கள்
ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும்
முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள்
இவ்வாரியத்தில் உறுப்பினராக
பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற
தகுதி பெறுகின்றனர்.
மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக
பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இனி www.uwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
மேலும், விவரங்கள் அறிய
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரை
தொடர்பு கொள்ளுமாறு
ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப..
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------.