ஓசூர் மரபுச் சந்தை
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஒசூர் மரபுச்சந்தையின்
3-ம் ஆண்டு மரபு உணவு திருவிழா
மரபு உணவுப்பொருட்களை வாங்கிச்செல்ல
குடும்பத்துடன் குவிந்த மக்கள்
ஒசூர் மேயர்
திரு. S.A.சத்யா
அவர்கள்
லேபர் கோர்ட் நீதிபதி
திருமதி.L. கலைவாணி
அவர்கள் ஆகியோர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி. ஜுன். 29. –
மரபு உணவு திருவிழா
ஒசூர் மாநகராட்சியில்
ஒசூர் மரபுச்சந்தை அமைப்பின்
3-ம் ஆண்டு மரபு உணவு திருவிழா -
இரண்டு நாள்(ஜுன்-27, 28) கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.
ஒசூர் ரயில் நிலைய சாலையில் உள்ள
மீரா மஹால் மண்டபத்தில் நடந்த
இந்த மரபு உணவு திருவிழா
தொடக்க நிகழ்வில்
ஒசூர் மரபுச்சந்தை இயக்குநர்
திரு. ஏங்கல்ஸ் JK
வரவேற்புரையாற்றினார்.
லேபர் கோர்ட் நீதிபதி
திருமதி.L. கலைவாணி
குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மரபு உணவு திருவிழாவுக்கு
ஒசூர் மேயர்
திரு. S.A.சத்யா
அவர்கள்
வருகை தந்து பார்வையிட்டார்.
இந்த மரபு உணவு திருவிழாவில்
சென்னை, கோவை, சேலம்,
தருமபுரி, திருச்சி, தஞ்சாவூர்,
ஈரோடு, நாமக்கல், திருப்பூர்,
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை,
திருப்பத்தூர்
உட்பட தமிழ்நாடு முழுவதிலும் உள்ள
120-க்கும் மேற்பட்ட
மரபு உணவுப்பொருட்கள்
உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள்
விற்பனையகங்களை அமைத்திருந்தனர்.
இதில்
100-க்கும் மேற்பட்ட
மரபு உணவுப் பொருட்கள்
திண்பண்டங்கள் மற்றும்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரபு சார்ந்த
நல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த மரபுச்சந்தையில் ...
இயற்கை முறையில் விளைவித்த
பாரம்பரிய அரிசி வகைகள்,
சிறுதானிய வகைகள்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
சிறுதானிய வகைகள் -
சாமை,
வரகு,
தினை,
குதிரைவாலி,
பனிவரகு
ஆகிய சிறுதானிய வகைகளும்.
பாராம்பரிய அரிசி வகைகள் –
கருப்பு கவுணி,
மாப்பிள்ளை சம்பா,
இலுப்பைபூ சம்பா,
காட்டுயாணம்,
ரத்தசாலி,
கருங்குறுவை,
பூங்கார்,
கருடண் சம்பா,
குள்ளக்கார்,
கருத்தகார்,
நவரா,
குடவாழை
ஆகிய பாராம்பரிய அரிசி வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
செக்கு எண்ணெய் வகைகள் -
கடலைஎண்ணெய்,
நல்லெண்ணை,
தேங்காய் எண்ணெய்,
விளக்கெண்ணை
ஆகிய செக்கு எண்ணெய் வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதேபோல
மருத்துவ குணமுள்ள
எள் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட
ஊறுகாய் வகைகள் மற்றும்
தொக்கு வகைகள் விற்பனைக்கு
வைக்கப்பட்டிருந்தது.
ஊறுகாய் வகைகள் –
ஆவாரம்பூ ஊறுகாய்,
முருங்கை பூ ஊறுகாய்,
நெல்லிக்காய் ஊறுகாய்,
பாவக்காய் ஊறுகாய்
ஆகிய ஊறுகாய் வகைகள்.
தொக்கு வகைகள் –
பிரண்டை தொக்கு,
வல்லாரை தொக்கு,
கருவேப்பிலை தொக்கு,
வாழைப்பூ தொக்கு,
பூண்டு தொக்கு,
முடக்கத்தான் தொக்கு
ஆகிய தொக்கு வகைகள்
மற்றும்
கொம்புத்தேன்,
காங்கேயம் பசு நெய்,
மதிப்புக்கூட்டப்பட்ட
சிறுதானியங்களின்
திண்பண்டங்கள்
உள்ளிட்ட பல்வேறு வகையான
மரபு சார்ந்த, காண கிடைக்காத
பாரம்பரிய உணவு பொருட்கள்
இந்த மரபு உணவு திருவிழாவில்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த மரபு சார்ந்த உணவுப்பொருட்களுக்கு
ஒசூர் மக்களிடையே மிகுந்த வரவேற்பு
காணப்பட்டது.
மரபு உணவு திருவிழாவுக்கு
குடும்பம், குடும்பமாக வருகை தந்த
ஒசூர் வாழ் மக்கள், மரபு சார்ந்த உணவுப்பொருட்களை கண்டு களித்தது மட்டுமின்றி,
உடல் நலம் காக்கும் பாரம்பரிய உணவுப்பொருட்களை ஆர்வத்துடன்
வாங்கிச்சென்றனர்.
இதுகுறித்து
ஒசூர் மரபுச்சந்தை இயக்குநர்
திரு. ஏங்கல்ஸ் J.K. கூறியதாவது,
ஒசூர் பகுதியில் மட்டும்
40 மரபு உணவுப்பொருட்கள்
உற்பத்தி மற்றும்
விற்பனையாளர்கள் உள்ளனர்.
ஒசூர் மரபுச்சந்தை மரபு உணவு திருவிழாவில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள மரபு உணவுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் மூலமாக
120 கடைகள் அமைக்கப்பட்டு
மரபு உணவுப் பொருட்கள்
விற்பனை செய்யப்பட்டது.
இதில் 80சதவீதம் பேர் மகளிர் ஆவர்.
இந்த மரபு உணவு திருவிழாவில்
25 சதவீதம் மகளிர் முதல் முறையாக
கடைகளை வைத்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் தொடர்ந்து
கடை நடத்த ஊக்கம் கிடைத்துள்ளதாக
கூறினர்.
மரபு உணவு திருவிழாவுக்கு
ஒசூர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மரபு உணவு திருவிழா
தொடக்க நிகழ்ச்சியில்
சிறப்பு விருந்தினர்களாக
மீரா மல்டி பெஷாலிட்டி
மருத்துவமனை நிறுவனர்
டாக்டர். T.T.S. சண்முகவேல்,
மீரா மல்டி பெஷாலிட்டி மருத்துவமனை
சீப் மெடிக்கல் டைரக்டர்
Dr. T.T.S. பாரி,
நிர்வாக இயக்குநர்
Dr.B. அம்பிகா பாரி,
சீனியர் மேனேஜர்
P. கோபாலகிருஷ்ணன்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-------------------------------------.