ஒசூரில் மூன்றாவது நாள்
வருவாய்த் தீர்வாயம்
(ஜமாபந்தி)
பாகலூர் உள்வட்டத்திற்குட்பட்ட
32 கிராமங்களுக்கான
1435 ஆம் பசலி ஆண்டுக்கான
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி. ஜுன். 17. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,
பாகலூர் உள்வட்டத்திற்குட்பட்ட
32 கிராமங்களுக்கான
1435 ஆம் பசலி ஆண்டுக்கான
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
மூன்றாவது நாள் நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் இன்று (17.06.2026) நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
12.06.2026 முதல் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்று
மூன்றாவது நாள் நிகழ்ச்சியில்,
பாகலூர் உள்வட்டத்திற்குட்பட்ட
பாகலூர் உள்வட்டத்தில்,
பாகலூர் ரூரல், ஒட்டபள்ளிதின்னா,
ஜி.மங்கலம், மூர்த்திகானதின்னா,
பௌத்தூர், சிங்கசாதனப்பள்ளி,
தின்னப்பள்ளி, பொப்பளாபுரம்,
பட்டவாரப்பள்ளி, வத்திரிப்பள்ளி,
ஒட்டப்பள்ளி, அலசப்பள்ளி,
பிச்சுகொண்டப்பள்ளி, முதுகானப்பள்ளி,
கதிரகானதின்னா, ஜோகிகலசாமனப்பள்ளி,
மல்லசந்திரம், தும்மனப்பள்ளி,
முகுளப்பள்ளி, படதேப்பள்ளி,
கனிமங்கலம், அட்டூர்,
நஞ்சாபுரம், கெம்பசந்திரம்,
பாலிகானப்பள்ளி, தேவீரப்பள்ளி,
இடிபள்ளி, புரம்,
ஆலூர், காளஹஸ்திபுரம்,
எலுவப்பள்ளி மற்றும் விஸ்வாதபுரம்
ஆகிய 32 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து,
முதியோர் உதவித்தொகை,
சாதிச்சான்றிதழ்,
பட்டா மாற்றம்,
உட்பிரிவு பட்டா மாற்றம்,
வீட்டுமனை பட்டா,
பட்டா ரத்து,
ஆக்கிரமிப்பு அகற்றுதல்,
நில அபகரிப்பு,
புதிய குடும்ப அட்டை,
கிராம கணக்கில் மாற்றம்,
இதர துறை மனுக்கள்
என மொத்தம் 136 மனுக்களை
பெற்றுக்கொண்ட
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள், தகுதியான மனுக்கள் மீது
உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் மேற்குறிப்பிட்ட
32 கிராமங்களை சேர்ந்த கிராம கணக்கு பதிவேடுகளான
அ - பதிவேடு,
எப்.எம்.பி. பதிவேடு,
அடங்கல்,
1 எ உள்ளடக்கம்,
பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு,
தனிபட்டா, சிட்டா மற்றும் அடங்கல்,
பண வரவு பதிவேடு
உள்ளிட்ட பதிவேடுகளை
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தலைமையில்,
நான்காவது நாள் 18.06.2026
(வியாழக் கிழமை) அன்று,
பாகலூர் உள்வட்டத்தில்
கொளதாசபுரம், நந்திமங்கலம்,
பலவனப்பள்ளி, அடவனப்பள்ளி,
சூடுகொண்டப்பள்ளி, அளேநத்தம்,
நாரிகானபுரம், ஆலூர்
ஆகிய 8 வருவாய் கிராமங்களுக்கும்
மற்றும்
மத்திகிரி உள்வட்டத்தில்
மத்திகிரி,
ஒன்னல்வாடி,
தொரப்பள்ளி அக்ரஹாரம்
ஆகிய 3 வருவாய் கிராமங்கள் என
மொத்தம் 11 கிராமங்களுக்கான
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும்
தங்களது கோரிக்கை மனுக்களை
வழங்கலாம்.
தகுதியான மனுக்கள் மீது
உரிய நடவடிக்கை மேற்கொண்டு
உடனடி தீர்வு காணப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
சிக்கதிருப்பதியைச் சேர்ந்த
திருமதி.கலாவதி
க/பெ.சிவசங்கரப்பா அவர்கள்
பாகலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில்,
விற்பனை கிரயம் மூலம்
பாலிகானப்பள்ளி கிராமத்தில்
1.92 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதையடுத்து,
தனிப்பட்டா வழங்க கோரி
விண்ணப்பித்ததன்பேரில்,
உடனடி நடவடிக்கையாக
பாலிகானப்பள்ளி சர்வே எண் 40/1A -ல்
உள்ள 1.92 ஏக்கர் நிலத்திற்கான
தனிப்பட்டாவிற்கான
ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,
தனி மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.ராஜா (உதவி நிலவரித்திட்டம்),
மாவட்ட ஆட்சியர்
அலுவலக மேலாளர் (பொது)
திரு.குருநாதன்,
ஒசூர் வட்டாட்சியர்
திரு.ஜெகதீஸ்வரன்,
தனி வட்டாட்சியர்கள்
திரு.சண்முகம்,
திரு.சுப்ரமணி.
மற்றும் வருவாய் துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மைத்துறை, தாட்கோ, மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------------------.