வருவாய்த் தீர்வாயம்
(ஜமாபந்தி)
நிறைவுநாள்.
1,461 மனுக்கள் பெறப்பட்டு
253 மனுக்களுக்கு உடனடி தீர்வு
ஓசூர் வட்டம்,
மத்திகிரி உள்வட்டத்திற்குட்பட்ட
10 கிராமங்களுக்கான
1435 ஆம் பசலி ஆண்டுக்கான
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் (19.06.2026) பங்கேற்பு.
கிருஷ்ணகிரி. ஜுன். 19. -
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)
நிறைவுநாள் நிகழ்ச்சியில்,
65 பயனாளிகளுக்கு
ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 100 மதிப்பில்
நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார்.
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,
12.06.2026 முதல் 19.06.2026 வரை
நடைபெற்ற
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
நிகழ்ச்சிகளில்
1,461 மனுக்கள் பெறப்பட்டு
253 மனுக்களுக்கு உடனடி தீர்வு
காணப்பட்டுள்ளது.
மீதமுள்ள மனுக்களுக்கு
உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட
துறை அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,
மத்திகிரி உள்வட்டத்திற்குட்பட்ட
10 கிராமங்களுக்கான
1435 ஆம் பசலி ஆண்டுக்கான
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
நிறைவு நாள் நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
12.06.2026 முதல் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்று நிறைவு நாள் நிகழ்ச்சியில்,
மத்திகிரி உள்வட்டத்திற்குட்பட்ட
நாகொண்டப்பள்ளி,
எஸ்.முதுகானப்பள்ளி,
பஞ்சாட்சிபுரம்,
முகளூர்,
கோபனப்பள்ளி,
அச்செட்டிப்பள்ளி,
நாலிகபெட்ட அக்ரஹாரம்,
மொத்தம் அக்ரஹாரம்,
கொத்த கொண்டப்பள்ளி
பூனப்பள்ளி
ஆகிய 10 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து,
முதியோர் உதவித்தொகை,
சாதிச்சான்றிதழ்,
பட்டா மாற்றம்,
உட்பிரிவு பட்டா மாற்றம்,
வீட்டுமனை பட்டா,
பட்டா ரத்து,
ஆக்கிரமிப்பு அகற்றுதல்,
நில அபகரிப்பு,
புதிய குடும்ப அட்டை,
கிராம கணக்கில் மாற்றம்,
இதர துறை மனுக்கள்
என மொத்தம் 672 மனுக்கள் பெறப்பட்டது.
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,
12.06.2026 முதல் 19.06.2026 வரை நடைபெற்ற
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
நிகழ்ச்சிகளில்
1,461 மனுக்கள் பெறப்பட்டு
253 (வாரிசு, சாதி சான்றிதழ்கள், தனிப்பட்டா, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, குடும்ப அட்டையில் பெயர் மாற்றத்திற்கான ஆணை)
மனுக்களுக்கு உடனடி தீர்வு
காணப்பட்டுள்ளது.
மீதமுள்ள மனுக்கள் மீது
உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
மேற்குறிப்பிட்ட 10 கிராமங்களை சேர்ந்த
கிராம கணக்கு பதிவேடுகளான
அ பதிவேடு,
எப்.எம்.பி. பதிவேடு,
அடங்கல்,
1 ஏ உள்ளடக்கம்,
பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு,
தனிபட்டா,
சிட்டா மற்றும் அடங்கல்,
பண வரவு பதிவேடு
உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
சமூக பாதுகாப்பு திட்டம் சார்பாக,
6 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து
2 ஆயிரத்து 500 மதிப்பில்
விபத்து மற்றும் இயற்கை மரண நிவாரணத்தொகைக்கான காசோலைகள்
மாவட்ட வழங்கல் துறை சார்பாக,
25 பயனாளிகளுக்கு
புதிய குடும்ப அட்டைகளும்,
வேளாண்மைத்துறை சார்பாக,
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், 4 பயனாளிகளுக்கு மானியம் ரூ.5,600 மதிப்பில் தக்கைப்பூண்டு விதை தொகுப்புகள்,
மாநகராட்சி சார்பாக,
4 பயனாளிகளுக்கு புதிய சொத்துவரி செலுத்தியதற்கான ஆணைகள்,
வருவாய் துறை சார்பாக,
5 பயனாளிகளுக்கு வாரிசு மற்றும் சாதிச் சான்றிதழ்கள்,
13 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகள்,
9 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கான ஆணைகள்
என மொத்தம் 65 பயனாளிகளுக்கு
ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,
தனி மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.ராஜா (உதவி நிலவரித்திட்டம்),
துணை ஆட்சியர் (பயிற்சி)
செல்வி.சௌமியா,
மாவட்ட ஆட்சியர்
அலுவலக மேலாளர் (பொது)
திரு.குருநாதன்,
ஒசூர் வட்டாட்சியர்
திரு.ஜெகதீஸ்குமார்,
தனி வட்டாட்சியர்கள்
திரு.சண்முகம்,
திரு.சுப்ரமணி,
திரு.பரிமேலழகன்,
திருமதி.வளர்மதி,
திருமதி.காமாட்சி.
மற்றும்
துணை வட்டாட்சியர்கள், மண்டல வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை, வேளாண்மைத்துறை, மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------------.