கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,
ஓசூர் உள்வட்டத்திற்குட்பட்ட
27 கிராமங்களுக்கான 1435 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
இரண்டாவது நாள் நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி.ஜுன். 16. –
ஒசூரில் இரண்டாவது நாள்
வருவாய் தீர்வாயம்( ஜமாபந்தி)
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,
ஓசூர் உள்வட்டத்திற்குட்பட்ட
27 கிராமங்களுக்கான
1435 ஆம் பசலி ஆண்டுக்கான
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
இரண்டாவது நாள் நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
இன்று (16.06.2026) நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
12.06.2026 முதல் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்று இரண்டாவது நாள் நிகழ்ச்சியில்,
ஒசூர் உள்வட்டத்திற்குட்பட்ட
ஈச்சாங்கூர், சொக்கநாதபுரம்,
கூஸ்தனப்பள்ளி, கள்ளி அக்ரஹாரம்,
சேவகானப்பள்ளி, கக்கனூர்,
கொடியாளம், சொக்கரசனப்பள்ளி,
கொத்தப்பள்ளி, சென்னசந்திரம்,
கெலவரப்பள்ளி, கள்ளிபுரம்,
புனுகன் தொட்டி, பெத்தகுள்ளு,
சின்னகுள்ளு, சித்தனப்பள்ளி,
கரிபசவனபுரம், முத்தாளி,
தட்டிகானப்பள்ளி, காருபள்ளி,
பாத்தமுத்தாளி, அட்டூர்,
தாசேபள்ளி, மோர்னப்பள்ளி
ஆகிய 25 கிராமங்களுக்கும்,
பாகலூர் உள்வட்டத்திற்குட்பட்ட
பாகலூர்,
லிங்காபுரம்
ஆகிய 2 கிராமங்கள் என மொத்தம்
27 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து,
முதியோர் உதவித்தொகை,
சாதிச்சான்றிதழ்,
பட்டா மாற்றம்,
உட்பிரிவு பட்டா மாற்றம்,
வீட்டுமனை பட்டா,
பட்டா ரத்து,
ஆக்கிரமிப்பு அகற்றுதல்,
நில அபகரிப்பு,
புதிய குடும்ப அட்டை,
கிராம கணக்கில் மாற்றம்,
இதர துறை மனுக்கள்
என மொத்தம் 233 மனுக்களை
பெற்றுக்கொண்ட
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
தனிப்பட்டா, சான்றிதழ்கள் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்
மேற்குறிப்பிட்ட 27 கிராமங்களை சேர்ந்த
கிராம கணக்கு பதிவேடுகளான
அ - பதிவேடு,
எப்.எம்.பி. பதிவேடு,
அடங்கல், 1 67 உள்ளடக்கம்,
பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு,
தனிபட்டா,
சிட்டா மற்றும் அடங்கல்,
பண வரவு பதிவேடு
உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தலைமையில்,
மூன்றாவது நாள் 17.06.2026
(புதன் கிழமை) அன்று,
பாகலூர் உள்வட்டத்தில்,
பாகலூர் ரூரல், ஒட்டபள்ளிதின்னா,
ஜி.மங்கலம், மூர்த்திகானதின்னா,
பௌத்தூர், சிங்கசாதனப்பள்ளி,
தின்னப்பள்ளி, பொப்பளாபுரம்,
பட்டவாரப்பள்ளி, வத்திரிப்பள்ளி,
ஒட்டப்பள்ளி, அலசப்பள்ளி,
பிச்சுகொண்டப்பள்ளி, முதுகானப்பள்ளி,
கதிரகானதின்னா, ஜோகிகலசாமனப்பள்ளி,
மல்லசந்திரம், தும்மனப்பள்ளி,
முகுளப்பள்ளி, படதேப்பள்ளி,
கனிமங்கலம், அட்டூர்,
நஞ்சாபுரம், கெம்பசந்திரம்,
பாலிகானப்பள்ளி, தேவீரப்பள்ளி,
இடிபள்ளி, புரம்,
ஆலூர், காளஹஸ்திபுரம்,
எலுவப்பள்ளி மற்றும் விஸ்வாதபுரம்
ஆகிய 32 கிராமங்களுக்கான
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும்
தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம்.
தகுதியான மனுக்கள் மீது
உரிய நடவடிக்கை மேற்கொண்டு
உடனடி தீர்வு காணப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
முதல் நாள் நிகழ்ச்சியில்,
திருமதி.சுனிதா குமாரி (வயது 30) அவர்கள்
முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை
கோரிய விண்ணப்பத்திற்கு
உடனடி நடவடிக்கையாக இன்று
மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கினார்.
மேலும்,
ஒசூர் ஏ.எஸ்.டி.சி.ஹட்கோ
பகுதியைச் சேர்ந்த திரு.யுவராஜன் அவர்கள்
தனது மகன் சந்தேஷ் சூர்யா JEE முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று
ஜோசா கலந்தாய்வில் பங்கேற்க
சாதிச்சான்று தேவைப்படுவதால்,
தனக்கு சாதிச்சான்று வேண்டி
மனு அளித்ததன் பேரில்
உடனடி நடவடிக்கையாக
சாதிச்சான்றிதழை
மாணவனின் தயாரிடம்
வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,
தனி மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.ராஜா (உதவி நிலவரித்திட்டம்),
மாவட்ட ஆட்சியர்
அலுவலக மேலாளர் (பொது)
திரு.குருநாதன்,
ஒசூர் வட்டாட்சியர்
திரு.ஜெகதீஸ்வரன்,
தனி வட்டாட்சியர்கள்
திரு.சண்முகம்,
திரு.சுப்ரமணி,
திரு.பரிமேலழகன்
மற்றும் வருவாய் துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மைத்துறை, தாட்கோ, மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------------------.