போலியோ சொட்டு மருந்து
முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
5 வயதிற்குட்பட்ட
1,39,738 குழந்தைகளுக்கு
28.06.2026 அன்று
போலியோ சொட்டு மருந்து
வழங்கப்பட உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன். 23. –
கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக,
28.06.2026 அன்று மாவட்டத்தில் உள்ள
5 வயதுக்குட்டபட்ட குழந்தைகளுக்கு
போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுவதையொட்டி,
முன்னேற்பாடு பணிகள் குறித்த
ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
(22.06.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுங்கச்சாவடிகள் போன்ற இடங்களில் 28.06.2026 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு, 5 வயதுக்குட்டபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இம்முகாம்கள் மூலம் மாவட்டத்திலுள்ள
1,39,738 குழந்தைகளுக்கு
போலியோ சொட்டு மருந்து வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிக்காக கிராமப்பகுதியில் 927 முகாம்கள் நகராட்சி பகுதியில் 80 முகாம்கள் என மொத்தம் 1,007 முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.
இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4,108 நபர்கள் முகாமிற்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் தங்களது 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து செலுத்தி பயனடைய வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
உதவி ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய்சைதன்யா ஜாதவ் இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.கிருஷ்ணன்,
தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
திருமதி.அபிநயா,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
திரு.சிவக்குமார்,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (நிலம்)
திரு.தர்மராஜ்,
மாவட்ட சுகாதார அலுவலர் (பொ)
மரு.அஜிதா,
இணை இயக்குநர் (நலப்பணிகள்) (பொ)
மரு.மது,
துணை ஆட்சியர் (பயிற்சி)
செல்வி.சௌமியா,
வட்டார மருத்துவ அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
-----------------------------------.