கிருஷ்ணகிரி மாவட்டம்
விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய
மின்மோட்டார் பம்ப் செட்டுகள்
வழங்கும் திட்டத்தின் கீழ்,
பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்கு
மாற்று மோட்டார் மற்றும்
புதிய மின் இணைப்புக்கு
மின்மோட்டார் பெற
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன்.18. -
விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய
மின்மோட்டார் பம்ப் செட்டுகள்
வழங்கும் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
விவசாயிகள் மானியத்துடன் கூடிய
மின்மோட்டார் பம்ப் செட்டுகள்
வழங்கும் திட்டத்தின் கீழ்,
பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்கு
மாற்று மோட்டார் மற்றும்
புதிய மின் இணைப்புக்கு
மின்மோட்டார் பெற
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
விவசாயிகளின் நிலத்தடி நீர் பாசனத்திற்கு
உதவும் வகையில்
சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு
பழைய திறனற்ற
மின் மோட்டார்களுக்கு பதில்
புதிய மின்மோட்டார்
பம்புசெட்டு வாங்குவதற்கு
"மானியத்துடன் கூடிய
மின்மோட்டார் பம்ப் செட்டுகள்
வழங்கும் திட்டம்"
செயல்படுத்த அரசாணை
பெறப்பட்டுள்ளது.
1. ஏற்கனவே EB இணைப்பு பெற்றுள்ள
பழைய திறனற்ற பம்ப் செட்டுகளை
மாற்ற விரும்புபவர்கள்,
2. தற்போதுள்ள டீசல் பம்ப் செட்டுகளை
மின் மோட்டார் பம்ப் செட்டுக்கு மாற்ற
விரும்புபவர்கள் (EB இணைப்புகள் பெற்றுள்ளவர்களுக்கு மட்டும்)
3. மின் இணைப்பு பெற்ற விவசாயிகளால்
புதிய ஆழ்துளை கிணறு /
திறந்த வெளி கிணறு /
அமைத்து புதிய மின் இணைப்புக்கு
மின்மோட்டார் பெற விரும்பும்
விவசாயிகள் ஆவர்.
இத்திட்டத்தில்
மின்மோட்டார்களை பெற,
சென்னை தலைமைப் பொறியாளரால்
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து
மட்டுமே மோட்டார் வாங்க வேண்டும்.
இதற்கு 50 சதவீதம் அல்லது
அதிகபட்சமாக ரூ.15,000/-(ரூபாய் பதினைந்தாயிரம்)
இதில் எது குறைவோ,
அந்த தொகை பின்னேற்பு மானியமாக
விவசாயியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
2026-27ஆம் நிதியாண்டிற்கு, பொது பிரிவு விவசாயிகளுக்கு 30 எண்களும் இந்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 10 எண்களும் ஆக மொத்தம் 40 எண்கள் / ரூ.6.00 இலட்சம் மானியத்தில் வழங்கிட இலக்கு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும்
விவசாயிகள் விண்ணப்பத்துடன்
சிட்டா,
அடங்கல்,
நிலவரைபடம்,
சிறு விவசாயிகளுக்கான சான்று,
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,
விவசாயிகளின் வங்கி கணக்கு எண்
மற்றும்
மின் இணைப்பு அட்டை,
விவசாயி பதிவேட்டால் உருவாக்கப்பட்ட
விவசாயி அடையாள எண்,
சாதி சான்று (SC/STஆக இருப்பின்) மற்றும்
தாங்கள் பெற விரும்பும் மின் மோட்டார் நிறுவனத்தின் விலைப்புள்ளி,
ஆதார் அட்டை
ஆகிய விவரங்களுடன்
வட்டார ஒருங்கினைந்த வேளாண்
விரிவாக்க மையத்தில் உள்ள
வேளாண் பொறியாளர் (வே.பொ) அல்லது
உதவி செயற்பொறியாளர் (வே.பொ),
வேளாண்மை பொறியியல் துறை,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
கிருஷ்ணகிரி. (04343-292405).
மற்றும்
உதவி செயற்பொறியாளர் (வே.பொ),
வேளாண்மை பொறியியல் துறை,
சென்னத்தூர் அஞ்சல் சாணசந்திரம்,
இராயக்கோட்டை ரோடு,
ஒசூர், போன்: 04344-292256
ஆகிய அலுவலகங்களை
தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும்,
விண்ணப்பிக்கும் விவசாயிகள்
பிரதான மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா
திட்டத்தின் கீழ்,
நுண்ணீர் பாசனம் அமைத்திருக்க வேண்டும்
அல்லது
அமைக்க விண்ணப்பித்திருக்க வேண்டும்
எனவும் குறைந்தபட்சம்
4 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்ட
பம்ப் செட்டுகள்
வாங்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------.