கிருஷ்ணகிரி மாவட்டம்
ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள்
எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு
போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து,
விழிப்புணர்வு பேரணி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் மற்றும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருமதி.கோ.சி.அனிதா
ஆகியோர் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி. ஜுன். 26. -
சர்வதேச போதைப்பொருள்
எதிர்ப்பு தினம்
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில்,
ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள்
எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை
சார்பாக,
போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த
விழிப்புணர்வு பேரணியை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் மற்றும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.கோ.சி.அனிதா
ஆகியோர் இன்று (26.06.2026)
கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இப்பேரணி...
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி,
லண்டன் பேட்டை வழியாக,
ராயக்கோட்டை மேம்பாலம்,
ராயக்கோட்டை ரோடு வழியாக
அரசு மகளிர் கலைக்கல்லூரியில்
முடிவுற்றது.
இப்பேரணியில்
மாணவ, மாணவிகள் போதைப்பொருள்
தடுப்பு வாசகங்கள் அடங்கிய
பதாகைகளை கைகளில் ஏந்தி
பொதுமக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தினர்.
இப்பேரணியில்,
அரசு மகளிர் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி மாணவியர்கள்,
அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி
மாணவர்கள்,
ஜாகீர் வெங்கடாபுரம் அரசு பள்ளி
மாணவர்கள்,
நாளந்தா மெட்ரிக் பள்ளி மாணவர்கள்,
வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி
மாணவர்கள்,
என்.சி.சி மாணவர்கள்,
என்.எஸ்.எஸ் மாணவர்கள்
அரசு துறை அலுவலர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள்,
தன்னார்வலர்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போதை பொருளுக்கு
எதிரான விழிப்புணர்வு
உறுதி மொழியினை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் வாசித்தார்.
உறுதிமொழியானது:
போதைப் பழக்கத்தால் ஏற்படும்
தீய விளைவுகளை
நான் முழுமையாக அறிவேன்,
நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்,
மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும், போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு
அறிவுரைகளை வழங்குவேன்.
போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து,
அவர்களை நல்வழிப்படுத்த
எனது பங்களிப்பை
முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி,
நுகர்வு,
பயன்பாடு
ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு
நடவடிக்கைகளின் மூலம்
போதைப் பொருட்களை
தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு,
துணை நிற்பேன்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன்
பங்காற்றுவேன் என்று உளமாற
உறுதி கூறுகிறேன் என
மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இப்பேரணியில்,
உதவி ஆணையர் (ஆயம்)
திரு.மு.பழனி,
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்
மரு.செந்தில்குமார்,
துணை காவல் கண்காணிப்பாளர்
திரு.ராமசந்திரன்,
துணை காவல் கண்காணிப்பாளர்
(மதுவிலக்கு)
திரு.கோவிந்தசாமி,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
கோட்ட ஆய அலுவலர்கள்
திரு.பிரதாப்,
திரு.கோவிந்தராஜ்,
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,
கல்லுாரி பேராசிரியர்கள்,
கல்லூரி மாணவ மாணவியர்கள்
தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
-----------------------------------------.