போலியோ சொட்டு
மருந்து முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
5 வயதிற்குட்பட்ட
1,39,738 குழந்தைகளுக்கு
போலியோ சொட்டு மருந்து முகாம்
கிருஷ்ணகிரி
சட்டமன்ற உறுப்பினர்
திரு. பா. முகுந்தன்
பங்கேற்பு
கிருஷ்ணகிரி. ஜுன். 28. -
கிருஷ்ணகிரி நகராட்சி,
புதிய பேருந்து நிலையத்தில்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக,
5 வயதுக்குட்டபட்ட குழந்தைகளுக்கு
போலியோ சொட்டு மருந்து
வழங்கும் முகாமை
கிருஷ்ணகிரி
சட்டமன்ற உறுப்பினர்
திரு.பா.முகுந்தன்
அவர்கள்,
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
திரு.என்.ஷாஜகான்
ஆகியோர் இன்று (28.06.2026) துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான
பேருந்து நிலையங்கள்,
சந்தைகள்,
வழிபாட்டுத் தலங்கள்
சுங்கச்சாவடிகள்
போன்ற இடங்களில் இன்று (28.06.2026)
போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு,
5 வயதுக்குட்டபட்ட
1,39,738 குழந்தைகளுக்கு
போலியோ சொட்டு மருந்து
வழங்கப்பட்டது.
இப்பணிக்காக கிராமப்பகுதியில்
927 முகாம்கள்
நகராட்சி பகுதியில் 80 முகாம்கள் என
மொத்தம் 1,007 முகாம்கள்
அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்காக
பொது சுகாதாரத்துறை
கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும்
சுகாதார ஆய்வாளர்கள்,
ஒருங்கிணைந்த
குழந்தைகள் வளர்ச்சி திட்டம்,
பள்ளிக்கல்வித்துறை,
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை,
வருவாய்த்துறை,
ரோட்டரி சங்கம்,
மகளிர் சுய உதவிக்குழுக்கள்
தன்னார்வலர்கள்
என சுமார் 4,108 நபர்கள் முகாமிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம்
போலியோ சொட்டு மருந்து
சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள்,
நரிக்குறவர்கள்,
கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள்
மற்றும்
போக்குவரத்து வசதி இல்லாத
மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள்
பயன்பெறும் வகையில்
நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம்
போலியோ சொட்டு மருந்து
வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,
கிருஷ்ணகிரி வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
வட்டார மருத்துவ அலுவலர்
மரு.இனியள் மண்டோதரி,
மரு.மோனிஷா
மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள்,
சுகாதார செவிலியர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
--------------------------------------.