ஜமாபந்தி
(வருவாய்த் தீர்வாயம்)
ஒசூர் உள்வட்டத்திற்குட்பட்ட
13 கிராமங்களுக்கான
1435 ஆம் பசலி ஆண்டுக்கான
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)
முதல் நாளில் 259 மனுக்கள்
பெற்றுக்கொண்ட
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
தலைமை ஏற்று நடத்தினார்.
கிருஷ்ணகிரி. ஜுன். 12. –
ஒசூரில்
வருவாய் தீர்வாயம்
(ஜமாபந்தி)
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,
ஓசூர் உள்வட்டத்திற்குட்பட்ட
13 கிராமங்களுக்கான
1435 ஆம் பசலி ஆண்டுக்கான
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
தலைமையில் (12.06.2026)
நடைபெற்றது.
13 வருவாய் கிராமங்கள்
259 மனுக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
முதல் நாள் நிகழ்ச்சியில்
ஒசூர் உள்வட்டத்திற்குட்பட்ட
ஒசூர் நகர்ப்புறம்,
ஒசூர் கிராமப்புறம்,
ரங்கோபண்டித அக்ரஹாரம்,
சென்னத்தூர் (வடக்குப்பகுதி),
சென்னத்தூர் (தெற்கு),
ஆவலப்பள்ளி,
நல்லூர்,
பேகேப்பள்ளி,
கோவிந்த அக்ரஹாரம்,
ஜுஜுவாடி,
சாந்தபுரம் அக்ரஹாரம்,
அனுமேப்பள்ளி,
மூக்கொண்டப்பள்ளி
ஆகிய 13 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து,
முதியோர் உதவித்தொகை,
சாதிச்சான்றிதழ்,
பட்டா மாற்றம்,
உட்பிரிவு பட்டா மாற்றம்,
வீட்டுமனை பட்டா,
பட்டா ரத்து,
ஆக்கிரமிப்பு அகற்றுதல்,
நில அபகரிப்பு,
புதிய குடும்ப அட்டை,
கிராம கணக்கில் மாற்றம்,
இதர துறை மனுக்கள்
என மொத்தம் 259 மனுக்களை
பெற்றுக்கொண்ட
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தகுதியான மனுக்கள் மீது
உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் மேற்குறிப்பிட்ட
13 கிராமங்களை சேர்ந்த
கிராம கணக்கு பதிவேடுகளான
அ-பதிவேடு,
எப்.எம்.பி. பதிவேடு,
அடங்கல்,
1-ஏ உள்ளடக்கம்,
பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு,
தனிபட்டா,
சிட்டா மற்றும் அடங்கல்,
பண வரவு பதிவேடு
உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தலைமையில்,
இரண்டாவது நாள் 16.06.2026
(செவ்வாய் கிழமை) அன்று
ஓசூர் உள்வட்டத்திற்குட்பட்ட
ஈச்சாங்கூர், சொக்கநாதபுரம்,
கூஸ்தனப்பள்ளி, கள்ளி அக்ரஹாரம்,
சேவகானப்பள்ளி, கக்கனூர்,
கொடியாளம், சொக்கரசனப்பள்ளி,
கொத்தப்பள்ளி, சென்னசந்திரம்,
கெலவரப்பள்ளி, கள்ளிபுரம்,
புனுகன் தொட்டி, பெத்தகுள்ளு,
சின்னகுள்ளு, சித்தனப்பள்ளி,
கரிபசவனபுரம், முத்தாளி,
தட்டிகானப்பள்ளி, காருபள்ளி,
பாத்தமுத்தாளி, அட்டூர்,
தாசேபள்ளி, மோர்னப்பள்ளி
ஆகிய 25 கிராமங்களுக்கும்,
பாகலூர் உள்வட்டத்திற்குட்பட்ட
பாகலூர்,
லிங்காபுரம்
ஆகிய 2 கிராமங்கள் என மொத்தம்
27 கிராமங்களுக்கான
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும்
தங்களது கோரிக்கை மனுக்களை
வழங்கலாம்.
தகுதியான மனுக்கள் மீது
உரிய நடவடிக்கை மேற்கொண்டு
உடனடி தீர்வு காணப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
டெல்லியைச் சேர்ந்த
திருமதி.சுனிதா குமாரி (வயது 30)
அவர்கள் புற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டு,
ஓசூர் வட்டம், அண்ணாமலை நகரில்
வசித்து வரும் தனது அக்காவான
திருமதி.இந்துதேவி அவர்கள்
வீட்டில் வசித்து காஞ்சிபுரத்தில் உள்ள
அண்ணா மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்த நிலையில்,
தற்போது மேல்சிகிச்சை பெற
மருத்துவ காப்பீட்டு அட்டை பெற வேண்டியுள்ளதால்,
அவரின் அக்காவின் குடும்ப அட்டையில்
பெயர் சேர்க்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில்,
உடனடி நடவடிக்கையாக
குடும்ப அட்டையில்
பெயர் சேர்க்கப்பட்டதற்கான ஆணை வழங்கினார்.
தொடர்ந்து, அவருக்கு இன்றே
முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை
வழங்க நடவடிக்கை மேற்கொள்ள
உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில்,
துணை ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய் சைதன்யா ஜாதவ் இ.ஆ.ப.,
தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள்
திருமதி.கயல்செல்வி
(தேசிய நெடுஞ்சாலைகள்),
திரு.ராஜா
(உதவி நிலவரித்திட்டம்),
உதவி இயக்குநர் (நில அளவை)
திரு.ஜெயகிருஷ்ணன்,
மாவட்ட ஆட்சியர்
அலுவலக மேலாளர் (பொது)
திரு.குருநாதன்,
ஒசூர் வட்டாட்சியர்
திரு.ஜெகதீஸ்வரன்,
தனி வட்டாட்சியர்கள்
திரு.சண்முகம்,
திரு.சுப்ரமணி,
திரு.பரிமேலழகன்
மற்றும் வருவாய் துறை,
கிராம நிர்வாக அலுவலர்கள்,
வேளாண்மைத்துறை,
தாட்கோ,
மாநகராட்சி,
ஊரக வளர்ச்சித்துறை
உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
-----------------------------------------.