போதைப்பொருள் ஒழிப்பு
விழிப்புணர்வு ஓட்டம்",
"Start Run - Stop Drugs"
கிருஷ்ணகிரியில்
ஜூன் 26-சர்வதேச போதைப்பொருள்
எதிர்ப்பு நாளை முன்னிட்டு,
"Start Run Stop Drugs- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்",
26.06.2026 அன்று நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.சதினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன். 23. -
கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கிருஷ்ணகிரி சார்பாக
26.06.2026 அன்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு
Start Run Stop Drugs 2026-
விழிப்புணர்வு ஓட்டம்
நடைபெறுவது குறித்து
மாவட்ட அளவிலான
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தலைமையில்
(2206,2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய்
அவர்களின்
தொலைநோக்குப் பார்வை மிக்க
தலைமையின்கீழ்
போதைப்பொருள் இல்லாத தமிழகம்
என்ற உன்னத இலக்கை
நோக்கிய பயணத்தில் நேர்மையான
மற்றும்
அறநெறி சார்ந்த விளையாட்டுக்
கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில்
தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.
ஜூன் 26 ஆம் நாள் சர்வதேச போதைப்பொருள்
பயன்பாடு மற்றும்
சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்திட
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையம்
சார்பில்
"Start Run Stop Drugs - 2026
விழிப்புணர்வு ஓட்டம்
ஜூன் 26 ஆம் நாள் அன்று
காலை 6.30 மணி அளவில்
கிருஷ்ணகிரியில் நடத்தப்படவுள்ளது.
இந்த விழிப்புணர்வு ஓட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட
விளையாட்டரங்கத்தில் தொடங்கி
ராயக்கோட்டை மேம்பாலம்,
அண்ணா சிலை,
காந்தி சிலை,
அரசு மருத்துவமனை வழியாக
RC பாத்திமா பள்ளி.
BSNL அலுவலகம் வரை சென்று திரும்பி
மீண்டும் ராயக்கோட்டை மேம்பாலம்,
மாவட்ட விளையாட்டரங்கம்
கிருஷ்ணகிரி வந்தடையும்.
இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ள
விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக
அல்லது
dsokrish@gmailcom
என்ற மின்னஞ்சல் முகவரி மூலம்
25.06.2026 அன்று மாலை 5.00 மணிக்குள்
பதிவு செய்து கொள்ளலாம்.
14 வயதிற்கு மேற்பட்ட ஆர்வமுள்ள மாணவ /
மாணவிகள், இளைஞர்கள்
விளையாட்டு வீரர்கள் மற்றும்
பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு
ஓட்டத்திற்கு பதிவு செய்து,
கலந்துகொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருமதி.கோ.சி.அனிதா,
உதவி ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய்சைதன்யா ஜாதவ் இ.ஆ.ப.
உதவி ஆணையர் (ஆயம்)
திரு.பழனி,
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்
மரு.செந்தில் குமார்,
துணை காவல் கண்காணிப்பாளர்
(மதுவிலக்கு)
திரு.கோவிந்தசாமி
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (வேளாண்மை)
திருமதி.ஏஞ்சலின் பொன்ராணி,
மாவட்ட விளையாட்டு நல அலுவலர்
திரு. நடராஜ முருகன்,
மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்)
திரு.செங்கிஸ்கான்
மற்றும் கோட்ட ஆய அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வனத்துறை. வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
------------------------------------------.