ஓசூர் மேக்னம்
அரிமா சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில்
பாலாஜி நகர் (ஆர்.சி சர்ச் அருகில்),
நகர்ப்புற துணை நலவாழ்வு மையம்
மூலமாக
550 குழந்தைகளுக்கு
போலியோ சொட்டு மருந்து
வழங்கப்பட்டது.
ஒசூர். ஜுன். 28. –
போலியோ சொட்டு
மருந்து முகாம்
ஒசூர் மாநகராட்சியில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில்
நகர்ப்புற துணை நலவாழ்வு
மையம் மூலமாக
550 குழந்தைகளுக்கு போலியோ
சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சியில்
மேக்னம் அரிமா சங்கம்
இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் சார்பில்,
அரசுப்பள்ளி,
அரசு மருத்துவமனைகளுக்கு
தேவையான உபகரணங்களை வழங்குவது,
ரத்த தானம் முகாம்கள்,
இலவச கண் சிகிச்சை
மருத்துவ முகாம்கள் நடத்துவது,
உள்ளிட்ட பல்வேறு சமூகசேவை
உதவிகள் செய்யும் பணியில்
சிறப்பாக சேவையாற்றி
வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக
ஓசூர் மாநகராட்சியில்
ஜுன் 28-ம் தேதியன்று
பாலாஜி நகர் (ஆர்.சி சர்ச் அருகில்) உள்ள
நகர்ப்புற துணை நலவாழ்வு மையத்தில்
போலியோ சொட்டு மருந்து முகாம்
நடைபெற்றது.
இந்த முகாமில்
காலை 7 மணி முதல்
மாலை 5 மணி வரை
5 வயதுக்குட்பட்ட 550 குழந்தைகளுக்கு
போலியோ சொட்டு மருந்து
வழங்கப்பட்டது.
இந்த முகாமில்
ஒசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா. வினோத்குமார்.
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா. சிவநேசன்.
சேவை திட்ட செயலாளர்
அரிமா. சரவணன்.
பொருளாளர்
அரிமா. ரவீந்திரன்.
ஒருங்கிணைப்பாளர்
அரிமா. R. ரவிசங்கர்,
ஆகியோர் பங்கேற்றனர்.
-------------------------------------------.