கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில்
6 நாட்களில் 126 மாணவர்கள் சேர்க்கை
புதிய மாணவர்களுக்கு
எழுது பொருட்கள் வழங்கி
உற்சாக வரவேற்பு அளித்த
தலைமையாசிரியர்
திரு. பொன் நாகேஷ்.
மற்றும் ஆசிரியர்கள்.
ஒசூர். ஜுன். 15. –
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில்
6 நாட்களில் 126 மாணவர்கள் சேர்க்கை
ஓசூர் மாநகராட்சி மூன்றாவது வார்டு
பேடரப்பள்ளியில் இயங்கி வரும்
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
பயில உற்சாகத்துடன் வருகை தந்த
புதியதாக சேர்க்கை பெற்ற
126 மாணவ, மாணவிகளுக்கு
பென்சில், பேனா ஆகிய எழுது பொருட்கள்
வழங்கி சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில்
சிறந்த அரசுப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
பேடரப்பள்ளி, 3-வது வார்டில்
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
இயங்கி வருகிறது.
தரமான கல்வி
இந்தப்பள்ளியில்
1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை
810 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நல்லொழுக்கத்துடன்,
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இதனால் இந்த அரசுப்பள்ளி
மாவட்டத்தில் உள்ள
சிறந்த அரசுப்பள்ளிகளில்
ஒன்றாக திகழ்கிறது.
ஆண்டுதோறும் அதிகரிக்கும்
மாணவர் சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அரசு நடுநிலைப்பள்ளிகளில்
சிறந்த பள்ளியாக பேடரப்பள்ளி
அரசுப்பள்ளி விளங்கி வருவதால்
மாணவர்கள் சேர்க்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதனால்
இடப்பற்றாக்குறை காரணமாக
மூன்று இடங்களில் இந்த அரசுப்பள்ளி
இயங்கி வருகிறது.
இந்தப்பள்ளியில் கடந்த ஆண்டு
எட்டாம் வகுப்பு முடித்து
128 மாணவ மாணவிகள் ஒன்பதாம் வகுப்புக்கு அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
6 நாட்களில்
126 மாணவர்கள் சேர்க்கை
ஆகவே நடப்பு கல்வி ஆண்டில்
புதியதாக 200 மாணவர்களை
சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு,
பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அளித்து,
தினந்தோறும் புதிய மாணவர்கள்
சேர்க்கை பணியில்
தலைமையாசிரியர் மற்றும்
ஆசிரியர்கள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர்.
அதன்பயனாக நடப்பாண்டில்
பள்ளி தொடங்கியது முதல்
15-06-2026 வரை
126 புதிய மாணவர்கள் பள்ளியில்
சேர்க்கை பெற்றுள்ளனர்.
126 புதிய மாணவர்களில்
ஒன்றாம் வகுப்பு முதல்
ஐந்தாம் வகுப்பு வரை
81 மாணவ, மாணவிகள்
சேர்க்கை பெற்றுள்ளனர்.
இதில் 60 மாணவர்கள் மட்டும்
முதல் வகுப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை
45 மாணவ மாணவிகள்
சேர்க்கை பெற்றுள்ளனர்.
இதில் 26 பேர் ஆறாம் வகுப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜுன்15-ம் தேதி திங்கட்கிழமையன்று
பள்ளியில் நடந்த
காலை இறைவணக்க கூட்டத்தில்
உற்சாகமாக பங்கேற்ற
புதிய மாணவ, மாணவிகளுக்கு
தலைமை ஆசிரியர்
திரு. பொன் நாகேஷ்.
மற்றும் பள்ளி ஆசிரியர்கள்
பேனா, பென்சில் உள்ளிட்ட
எழுது பொருட்களை வழங்கி
அனைவரையும் பாராட்டி அறிவுரைகள் கூறி
சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
---------------------------------------.