குழந்தைத் தொழிலாளர் முறை
எதிர்ப்பு தினம்
ஜூன் 12- ம் நாளையொட்டி
"குழந்தை தொழிலாளர் ஒழிப்பும்
சமூக வளர்ச்சியும்"
என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு
பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி. ஜுன். 16. –
தொழிலாளர் நலத்துறை சார்பாக,
குழந்தைத் தொழிலாளர் முறை
எதிர்ப்பு தினம்
கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
தொழிலாளர் நலத்துறை சார்பாக,
குழந்தைத் தொழிலாளர் முறை
எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
"குழந்தை தொழிலாளர் ஒழிப்பும்
சமூக வளர்ச்சியும்"
என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு
பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் 15.06.2026 அன்று வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
ஆண்டுதோறும், ஜூன் 12 -ம் நாள்
குழந்தை தொழிலாளர் முறை
எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் (12.06.2026) அன்று
குழந்தைத் தொழிலாளர் முறை
எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு,
விழிப்புணர்வு பேரணி,
கையெழுத்து இயக்கம்
துவக்கி வைக்கப்பட்டு,
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
குழந்தைத் தொழிலாளர்களை
வேலைக்கு அமர்த்தினால்
சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது
கடுமையான மற்றும் சட்டபூர்வமான
நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்,
அதிகபட்ச அபராதம் ரூ.50,000 மற்றும்
இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும்.
குழந்தைத் தொழிலாளர்களை
பணியில் இருந்து விடுவித்து அவர்களை
அருகில் உள்ள பள்ளிகளில்
சேர்க்க வேண்டும்.
அதனடிப்படையில்
பள்ளி மாணவ, மாணவியர்களிடையே
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
"குழந்தை தொழிலாளர் ஒழிப்பும்
சமூக வளர்ச்சியும்"
என்ற தலைப்பில்
பேச்சுப்போட்டி,
கட்டுரைப்போட்டி
ஒவியப்போட்டி
நடத்தப்பட்டது.
இப்போட்டியில் 50 க்கும் மேற்பட்ட
மாணவியர்கள் ஆர்வமுடன்
கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் கலந்துக்கொண்டு
முதல் இடம்,
இரண்டாம் இடம்,
மூன்றாம் இடம்
பிடித்த 9 மாணவியர்களுக்கு
பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்
வழங்கப்பட்டது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
தொழிலாளர் நலத்துறை
உதவி ஆணையர்கள்
திரு.ராஜசேகரன் (அமலாக்கம்),
தொழிலாளர் துணை ஆய்வாளர்
திரு.மாயவன்,
முத்திரை ஆய்வாளர்
திருமதி.அன்னபூரனி,
முதுகலை ஆசிரியர்
திருமதி.மஞ்சுளா,
மற்றும் மாணவியர்கள்
கலந்துக்கொண்டனர்.
---------------------------------------------.