15-வது ஓசூர் புத்தகத் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
இணைந்து நடத்தும்
15-வது ஓசூர் புத்தகத் திருவிழா
நடைபெறுவது குறித்து
முன்னேற்பாடு பணிகள் குறித்த
ஆய்வுக் கூட்டம்.
தலைமை -
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்.
கிருஷ்ணகிரி. ஜுலை. 16. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
இணைந்து நடத்தும்
15-வது ஓசூர் புத்தகத் திருவிழா
நடைபெறுவது குறித்து
முன்னேற்பாடு பணிகள் குறித்த
ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
இன்று (16.07.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து,
ஒசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்,
மூக்காண்டப்பள்ளி சிப்காட் பகுதியில் உள்ள
ஹோட்டல் ஹீல்ஸ் -ஒசூர் கன்வர்சன் ஹாலில்,
15 வது ஓசூர் புத்தகத் திருவிழா
24.07.2026 முதல் 04.08.2026 வரை
12 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில்
மொத்தம் 110 அரங்குகள்
அமைக்கப்படவுள்ளது.
மேலும்
கோடிக்கணக்கானப் புத்தகங்கள்
இடம் பெறவுள்ளன.
நாள்தோறும்
குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்,
பல்வேறு தலைப்புகளில்
பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகள்,
நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள்,
குழந்தைகளுக்கான கண்கவர்
பல்சுவை நிகழ்ச்சிகள்
மற்றும்
ஓவியம்,
கலைத்திறன்,
வினாடி வினா,
கதை எழுதுதல்,
புகைப்படம்,
சதுரங்கம்
உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது.
புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக நமது ஒசூரில் மிகப் பெரிய மக்கள் திருவிழாவாக புத்தக கண்காட்சி கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
மாணவர்களை புத்தக வாசிப்பவர்களகவும்,
புத்தக வாசிப்பின் மூலம்
தலை சிறந்தவர்களாக உருவாக்குவதே
இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
எனவே,
நமது மாவட்டத்தில் உள்ள பள்ளி,
கல்லூரி மாணவர்கள் மற்றும்
பொதுமக்கள் இந்த புத்தக திருவிழாவை பார்வையிட்டு அரிய தகவல்களுடன் கூடிய புத்தங்களை வாங்கி
பயன்பெற வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
இணைந்து நடத்தும்
15-வது ஒசூர் புத்தகத் திருவிழா -2026
குறித்த விளம்பர பதாகையை
வெளியிட்டார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி.மஞ்சுளா,
திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)
திருமதி.சுசீலாராணி,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.முருகேசன்,
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
திரு.ஷாஜகான்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
திரு.சு.மோகன்,
வட்டார போக்குவரத்து அலுவலர்
திரு.ஈஸ்வர மூர்த்தி.
துணை காவல் கண்காணிப்பாளர்
திரு.பாலகிருஷ்ணன் (ஓசூர்),
தனி வட்டாட்சியர் மேலாண்மை)
திரு.வெங்கடேசன்,
புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்
திரு.சேதுராமன்,
திரு.ஆ.சிவக்குமார்,
திரு.நீலகண்டன்,
அரிமா ஆர்.ரவிசங்கர்.,
திருமதி.கோ.சாந்தி
மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
------------------------------------------------------.