கிருஷ்ணகிரி மாவட்டம்
தோட்டக்கலைத் துறை
ஓசூர் வட்டாரம்
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்
நடப்பு 2026 குறுவை பருவத்தில்
தக்காளி
மற்றும்
உருளைக்கிழங்கு
தோட்டக்கலை பயிர்களுக்கு
விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள
ஓசூர் தோட்டக்கலை உதவி இயக்குநர்
திருமதி. சிவசங்கரி.
அவர்கள் வேண்டுகோள்.
ஓசூர். ஜுலை. 20. -
தோட்டக்கலைத் துறை ஓசூர் வட்டாரம்
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்
நடப்பு 2026 குறுவை பருவத்தில்
தக்காளி மற்றும் உருளைகிழங்கு
தோட்டக்கலை பயிர்களுக்கு
பொது சேவை மையங்கள்
தொடக்க வேளாண் கடன்
கூட்டுறவு சங்கங்கள் மற்றும்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்
விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள
ஓசூர் தோட்டக்கலை உதவி இயக்குநர்
திருமதி. சிவசங்கரி.
அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் உத்தரவின்படி
2026-27ஆம் ஆண்டில்
பிரதம மந்திரி
பயிர் காப்பீட்டுத் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
தற்போது நிலவும் எல் - நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை
இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்
என எதிர்பார்க்கப்படுவதால்,
குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள்
பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு,
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை
பாதுகாக்கும் வகையில்,
2026 குறுவை பருவத்தில்,
தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு
பயிர்களுக்கு
ஓசூர்,
பாகலூர்,
மத்திகிரி,
ஆகிய குறுவட்டங்களுக்கு
காப்பீடு செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை
25.06.2026 முதல் விவசாயிகள்
தேசிய பயிர்க் காப்பீட்டு
இணையதளத்தில் காப்பீடு
செய்து கொள்ளலாம்.
ஓசூர் வட்டாரத்தில்
குறுவை சாகுபடியில்
தக்காளி காப்பீட்டு தொகை
ஏக்கருக்கு ரூபாய் 1857/-
மற்றும்
உருளைகிழங்கு பயிருக்கு ரூபாய் 924 /-
காப்பீடு செய்வதற்கான
கடைசி நாள் 31.08.2026 ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் பயிர்க்கடன்
பெறும் விவசாயிகள்
அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை
தொடக்க வேளாண்மை கடன்
கூட்டுறவு சங்கங்கள் மற்றும்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள்
பொது சேவை மையங்கள்
(இ-சேவை மையங்கள்) அல்லது
தேசிய பயிர்க் காப்பீட்டு
இணையதளத்தில்
(https://pmfby.gov.in) உள்ள
"விவசாயிகள் கார்னர்" வாயிலாக
நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி எக்காரணத்திற்காகவும்
நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவுசெய்யும்போது
முன்மொழிவு விண்ணப்பத்துடன்,
பதிவு விண்ணப்பம்,
கிராம நிர்வாக அலுவலர் வழங்கும்
அடங்கல் /விதைப்பு அறிக்கை
கணக்கு புத்தகத்தின் (Bank pass book)
முதல் பக்க நகல்,
ஆதார் அட்டை (Aadhaar Card) நகல்
ஆகியவற்றை இணைத்து
கட்டணத் தொகையை செலுத்திய பின்
அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டு,
அதில் தாங்கள் காப்பீடு செய்த
பயிர் மற்றும் அதற்கான கிராமம் /
குறுவட்டம் உள்ளிட்ட விவரங்கள்
சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா
என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு
தொடர்பு கொள்ள
உதவி தோட்டக்கலை அலுவலர்கள்
திரு. திருவேங்கடம்.
ஓசூர் குறுவட்டம், (8825423133),
திரு.வெங்கடாசலம்.
மத்திகிரி குறுவட்டம், (9629828928).
திரு.ஸ்ரீதர்.
திரு.திருமுருகன் .
பாகலூர் குறுவட்டம், (8098981209) (9865655186).
ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என
ஓசூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------.