ஓசூர் மேக்னம்
அரிமா சங்கம்
மாபெரும்
ரத்ததானம் முகாம்
(24-07-26 To 03-08-26)
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மேக்னம் அரிமா
சங்கம் சார்பில்
15-வது புத்தகத்திருவிழாவில்
மாபெரும் ரத்த தானம் முகாம்
120 யூனிட் ரத்தம் நன்கொடை
ஓசூர் சிப்காட் அரிமா சங்க
ரத்த வங்கி மருத்துவ குழு பங்கேற்பு
ஓசூர். ஆகஸ்ட். 4. -
120 யூனிட்
ரத்த தானம்
ஓசூர் 15-வது புத்தகத்திருவிழாவில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
சார்பில் நடந்த
மாபெரும் ரத்த தானம் முகாமில்
வாசகர்கள் பங்கேற்று
120 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சியில்
மேக்னம் அரிமா சங்கம்
இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் சார்பில்,
அரசுப்பள்ளி,
அரசு மருத்துவமனைகளுக்கு
தேவையான உபகரணங்களை வழங்குவது,
ரத்த தானம் முகாம்கள்,
இலவச கண் சிகிச்சை
மருத்துவ முகாம்கள் நடத்துவது
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட
உதவிகள் செய்யும் பணியில்
சிறப்பாக சேவையாற்றி
வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில்
ஓசூர் ஓட்டல் ஹில்ஸ் அரங்கில்
ஜுலை 24-ம் தேதி முதல்
ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடந்த
ஓசூர் 15-வது புத்தகத் திருவிழாவில்
மாபெரும் ரத்த தானம் முகாம்
நடைபெற்றது.
ஜுலை 24-ம் தேதி முதல்
ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடந்த
இந்த ரத்த தானம் முகாமை
ஓசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா. S.வினோத்குமார்
தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்த ரத்த தானம் முகாமில்
ஓசூர் சிப்காட் அரிமா சங்கம்
ரத்த வங்கி மருத்துவர் தலைமையிலான
குழுவினர் பங்கேற்று,
ரத்த தானம் பெறும் பணியில் ஈடுபட்டனர்.
ரத்த தானம் வழங்கும்
கொடையாளர்களின்
உடலின் ரத்த அழுத்தம்,
சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டு,
ரத்த தானம் பெறப்பட்டது.
இந்த ரத்த தானம் முகாமில்
புத்தகத்திருவிழாவுக்கு வருகை தந்த
ஆண், பெண் வாசகர்கள்
ஆர்வத்துடன் பங்கேற்று
ரத்த தானம் வழங்கினர்.
இந்த முகாமில் மொத்தம் 120 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
ரத்த தானம் வழங்கியவர்களுக்கு
சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும்
ஆப்பிள்,
வாழைப்பழம்,
பிஸ்கெட்,
பழரசம்
ஆகியவை வழங்கப்பட்டது.
தானமாக பெறப்பட்ட
120 யூனிட் ரத்தம்
ஓசூர் சிப்காட் அரிமா சங்க
ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.
இந்த மாபெரும் ரத்த தானம் முகாமில்
ஓசூர் 15-வது புத்தகத்திருவிழா நிர்வாகிகள்
மற்றும்
ஓசூர் மேக்னம் அரிமா சங்க
ஒருங்கிணைப்பாளர் மற்றும்
புத்தகத்திருவிழா துணைத்தலைவர்
அரிமா. R. ரவிசங்கர்,
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா. R. சிவநேசன்,
செயலாளர்(செயல் திட்டம்)
அரிமா R. சரவணன்,
பொருளாளர்
அரிமா S. ரவீந்திரன்,
ரத்த தானம் முகாம் தலைவர்
அரிமா. பிரபு கிருஷ்ணன்,
ரத்த தானம் துணைத்தலைவர்
அரிமா. மனோஜ் அன்பு.
ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
------------------------------------------.