கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
AI தொழில்நுட்பம்
அறிமுகம்
தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
10-15 வினாடிகளில் பொதுமக்களின்
மனுக்களை பதிவேற்றம் செய்யும்
AI தொழில்நுட்ப பயன்பாட்டின்
செயல்பாடுகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
இன்று பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி. ஆக. 24. -
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
இன்று (24.08.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
தெரிவித்ததாவது:
AI தொழில்நுட்பம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று,
மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்
நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து,
500 முதல் 800 வரை கோரிக்கை
மனுக்கள் பெறப்படுகின்றது.
பொதுமக்களின் சிரமங்களைப் குறைக்கவும், அவர்கள் அளிக்கும் மனுவினை
உடனுக்குடன் பதிவேற்றம்
செய்வதற்காகவும்,
இன்று
AI தொழில்நுட்பம்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2025 -க்கு முன்பு மனு எழுதுவதற்கு பொதுமக்கள் தனி நபர்களிடம் ரூ.50 வழங்கி வந்தனர்.
பொதுமக்கள் சிரமமின்றி மனுக்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் 6 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இலவசமாக மனு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் மனு எதுவும் எடுத்து வராத பட்சத்தில், அவர்களுடைய கோரிக்கையை குரல் வழி உள்ளீடு (Voice Dictation) மூலமாக ஒரு மனுவாக மாற்றித் தரும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை நிலம் தொடர்பு, சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, கழிப்பறை வசதி, வீடு மற்றும் இதர நலத்திட்ட மனுக்கள் என பிரிக்கப்பட்டு, அவற்றை செயலி மூலம் பதிவேற்றம் செய்து, அந்த மனுவிற்கான குறியீடு எண்களை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக மனுக்களை பதிவேற்றம் செய்ய 1 நிமிடம் 20 வினாடி எடுத்துக்கொள்கிறது.
ஆனால் ஏஐ தொழில் நுட்பத்தில் 10 15 வினாடியில் பதிவேற்றம் செய்து, முதல்வரின் முகவரி செயலின் மூலம் மனுக்களுக்கான குறியீடு எண் பெறப்பட்டு, அதற்கான ஒப்புகை சீட்டு மனுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில்நுட்பம் பயன்படுத்தி மனுக்கள் பெறும் முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறையை தொடர்ந்து மூன்று முதல் நான்கு வாரம் செயல்படுத்தும்போது, இதில் உள்ள திருத்தங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்யப்படும்.
மேலும், இத்திட்டம் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் சமர்பித்து, தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இன்று (24.08.2026) நடைபெற்ற
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்
பொதுமக்களிடம்,
வீட்டுமனைப் பட்டா,
விலையில்லா தையல் இயந்திரம்,
சலவைப் பெட்டி,
முதியோர் உதவித்தொகை,
சாலை வசதி,
மின் இணைப்பு மற்றும்
மகளிர் உரிமைத்தொகை,
மாற்றுத்திறனாளிகளுக்கான
உதவித்தொகை
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து
736 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில்
பெற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில்
தகுதியான மனுக்கள் மீது
துறை சார்ந்த அலுவலர்கள்
உடனடி நடவடிக்கை எடுக்கவும்,
தகுதியில்லாத மனுக்களுக்கு
உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு
தெரிவிக்க வேண்டும் என
துறை சார்ந்த அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்,
ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம்
மனுக்களை ஸ்கேன் செய்து,
உடனுக்குடன் கணினியில்
பதிவேற்றம் செய்யும் பணிகளை
பார்வையிட்டார்.
முன்னதாக,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
மாற்றுத்திறனாளிகளுக்கான
சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து
கோரிக்கை மனுக்களை
பெற்றக்கொண்டார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி.த.மஞ்சுளா,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.முருகேசன்,
தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
திருமதி.அபிநயா
மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
---------------------------------------------.