கேழ்வரகு
துவரை
பயிர் காப்பீடு
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டார விவசாயிகளுக்கு
பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
வேளாண்மை உதவி இயக்குநர்
திருமதி. அ.புவனேஸ்வரி
அவர்கள் தகவல்
ஓசூர். ஜுலை. 28. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் வட்டாரத்தில்
பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ்
நடப்பு பருவத்தில்
ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்குள்
பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இது குறித்து ஓசூர் வட்டார
வேளாண்மை உதவி இயக்குநர்
திருமதி.அ.புவனேஸ்வரி
அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளில் இருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில்
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது நிலவும் எல்-நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவ மழை இயல்பை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அதனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில்
2026 காரீப் பருவத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஓசூர் வட்டாரத்தில்
கேழ்வரகு (ராகி)
துவரை
பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கேழ்வரகு(ராகி) பயிருக்கு
ஒரு ஏக்கருக்கு ரூ.255/-,
துவரை பயிருக்கு
ஒரு ஏக்கருக்கு ரூ.374/-
மட்டும் செலுத்தி காப்பீடு
செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்வதற்கான
கடைசி நாள் 17.08.2026 ஆகும்.
கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமும் அல்லது மக்கள் கணினி மையம் மூலமும் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிர் காப்பீடு செய்ய
தேவைப்படும் ஆவணங்கள்
சிட்டா,
ஆதார்,
வங்கி கணக்கு புத்தகம்,
அடங்கல்.
மேலும் விபரம் அறிய,
அருகில் உள்ள வட்டார வேளாண்மை
விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இவ்வாறு ஒசூர் வட்டார
வேளாண்மை உதவி இயக்குநர்
திருமதி.அ.புவனேஸ்வரி
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------.