ஏலுமிச்சங்கிரி வேளாண்மை
அறிவியல் மையத்தின்
செயல்பாடுகள் மற்றும்
செயல் விளக்கத் திடல்களை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி. ஆகஸ்ட். – 6. -
கிருஷ்ணகிரி வேளாண்மை
அறிவியியல் மையம்
சார்பில்,
ரூ.2 லட்சம் மதிப்பிலான
மரசெக்கு எண்ணெய்
எடுக்கும் இயந்திரத்தை,
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்,
சின்னமணவாரணப்பள்ளி
கிராமத்தில் உள்ள
தமிழ்நாடு மாநில
ஊரக வாழ்வாதார இயக்கம் சார்ந்த
வேப்பிலைக்காரி சுயஉதவிக்குழு பயனாளிகளுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்,
மல்லிநாயனப்பள்ளி ஊராட்சி,
எலுமிச்சங்கிரி ICAR -
வேளாண்மை அறிவியல் மையத்தின்
செயல்பாடுகள் மற்றும்
செயல் விளக்கத் திடல்களை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (06.08.2026)
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை இன்று நேரில் பார்வையிட்டார்.
வேளாண்மை அறிவியல் மையத்தால் பிரபலப்படுத்தப்படும் தொழில்நுட்பங்களான
மாவிற்கான இலை வழி ஊட்டச்சத்து,
பழ ஈ இனக்கவர்ச்சி பொறி,
கால்நடை தீவன விதைகள்,
மூடாக்கு பயிர் விதைகள்
(பூனைக்காலி) மற்றும்
கால்நடைகளுக்கான புற ஒட்டுண்ணி
தெளிப்பான் (நானோமெத்திக்கான்) பற்றி
வேளாண்மை அறிவியல் மையத்தின்
முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர்
முனைவர் T.சுந்தர்ராஜ்
அவர்கள் விளக்கிக் கூறினார்.
மேலும், வேளாண்மை அறிவியல்
மையத்தில் உள்ள அனைத்து
செயல் விளக்கத் திடல்களையும்
பார்வையிட்டார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல்
மைய வளாகத்தில்,
தென்னங்கன்று நடவு செய்தார்.
மேலும்,
கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியியல்
மையம் சார்பில்,
பட்டியல் இன துணைத் திட்டத்தின்
கீழ் (SCSP) சுமார்
ரூ.2 லட்சம் மதிப்பிலான,
மரசெக்கு எண்ணெய்
எடுக்கும் இயந்திரம்
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்,
சின்னமணவாரனப்பள்ளி
கிராமத்தில் உள்ள
தமிழ்நாடு மாநில
ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
சார்ந்த
வேப்பிலைக்காரி சுயஉதவிக்குழு
பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி
வளாகத்தில்,
பட்டாசு விற்பனை சங்கம் சார்பாக,
சமூக பொறுப்பு நிதியிலிருந்து
புதியதாக கட்டப்பட்டு வரும்
6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின்
கட்டுமான பணிகளை
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)
திருமதி.பா.ஏஞ்சலின் பொன்ராணி,
தொழில்நுட்ப வல்லுநர்கள்
திரு.உதயன் (உளவியல்),
திரு.ரமேஷ் பாபு (தோட்டக்கலை),
திரு.ரமேஷ் (கால்நடை அறிவியல்),
திரு.குணசேகர் (மண்ணியல்),
திரு.செந்தில் குமார் (வேளாண் விரிவாக்கம்),
திருமதி.பூமதி (மனையியல்),
வட்டாட்சியர்
திருமதி.ராஜலட்சுமி,
வேளாண் உதவி அலுவலர்கள்
திரு.அருள்தாஸ்,
செல்வி.பவித்ரா.
மற்றும் வேளாண் அறிவியல் மைய
விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
--------------------------------------------.