மக்கள் தொடர்பு
திட்ட முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி வட்டம்,
பேரிகை உள்வட்டம்,
கும்பளம் கிராமத்தில்,
மக்கள் தொடர்பு திட்ட முகாமில்
141 பயனாளிகளுக்கு
ரூ.25 லட்சத்து 69 ஆயிரத்து 047 மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார்.
ஓசூர். ஆகஸ்ட். 12. –
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்,
ஒரு வீடு கட்டுவதற்க்கு
ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து
ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளார்.
கோரிக்கையின் மீதான விவாதங்கள்
செப்டம்பர் மாதம் முடிந்த பிறகு
மாவட்டத்திற்குகென வீடுகள்
கட்டுவதற்கான ஒதுக்கீடு செய்யப்படும்.
அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு வீடு கட்டுவதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி வட்டம், பேரிகை உள்வட்டம்,
கும்பளம் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
இன்று (12.08.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் அறிவுறுத்தலின்படி,
பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி
அரசின் திட்டங்கள் மூலம்
பயன்பெறும் வகையில்
பொதுமக்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு
அருகிலேயே கோரிக்கை மனுக்கள் பெறுதல்,
நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
குறித்து துறை சார்ந்த அலுவலர்கள்
விளக்கம் அளிக்கும் வகையில்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மாதந்தோறும் நடத்தப்படுகிறது.
இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து
கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு,
தகுதியான மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
333 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
அதில் கும்பளம் கிராம பஞ்சாயத்து
மிகவும் வித்தியாசமான
ஒரு கிராம பஞ்சாயத்து.
ஒவ்வொரு கிராமத்திலும் 10 சதவிகிதம்
புறம்போக்கு நிலம் உள்ளது.
கும்பளம் கிராமத்தில்
2757 ஹெக்டேர் பரப்பளவில்
1,910 ஹெக்டேர் பரப்பளவு கிட்டத்தட்ட
முக்கால்வாசி புறம்போக்கு
நிலமாக உள்ளது.
இக்கிராமத்தில் வசிக்கும் மக்களிடம்
பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அதில், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள்
தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கும்
பட்டா இல்லை,
விவசாய நிலத்துக்கும் பட்டா இல்லை
என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து
மாவட்ட வன அலுவலர்களிடம்
கலந்துரையாடி
பட்டா வழங்க கருத்துரு தயார் செய்து,
உயர்நீதிமன்ற அனுமதியுடன்
வழங்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
ஒரு வட்டாட்சியர் தலைமையில்
தனியா ஒரு குழு அமைக்கப்பட்டு,
அதன் மூலமாக முதல் கட்டமாக
தமிழ்நாடு அரசுக்கு
பரிந்துரை கருத்துரு அனுப்புவதற்கு
உண்டான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேப்போல் இங்கு வசிக்கும் மக்கள் பழங்குடியினராக இருக்கும் பட்சத்தில்
2005-க்கு முன்பு குடியிருப்பதற்கான
குடும்ப அட்டை,
மின்சார கட்டண ரசீது,
பதிவு செய்யப்படாத ஒரு பத்திரம்
இவற்றில் ஏதேனும் ஒன்று இருக்கும்
பட்சத்தில் வன உரிமை வழங்கப்படும்.
வன உரிமை மூலம் பொதுமக்கள் வீடு கட்டிக் கொள்ளலாம்.
வங்கியில் கடனுதவி பெறலாம்.
அதே மாதிரி பழங்குடியினர் இல்லாதவர்
என்ற பட்சத்தில்
1975-க்கு முன்பு குடியிருப்பதற்கான
குடும்ப அட்டை,
மின்சார கட்டண ரசீது,
பதிவு செய்யப்படாத ஒரு பத்திரம்
இவற்றில் ஏதாவது ஒன்றை
ஆதாரமாக பயன்படுத்தி
வன உரிமை வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
3,752 மக்களிடமிருந்து
வன உரிமைக்கான
விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
வன உரிமை வழங்குவதற்கான
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும்,
வன உரிமை யாருக்காவது
விடுபட்டிருந்தால் உடனடியாக
தங்களுடைய கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கலாம்.
இம்மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில்
141 பயனாளிகளுக்கு
ரூ.25 லட்சத்து 69 ஆயிரத்து 047 மதிப்பில்
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு
விவசாயிகள் உட்பட அனைத்து வகை
மக்களும் பயனடையும் வகையில்
பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல்
செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்,
ஒரு வீடு கட்டுவதற்க்கு
ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து
ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளார்.
மானிய கோரிக்கையின் மீதான
விவாதங்கள் செப்டம்பர் மாதம்
முடிந்த பிறகு
மாவட்டத்திற்குகென வீடுகள்
கட்டுவதற்கான ஒதுக்கீடு செய்யப்படும்.
அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு
வீடு கட்டுவதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேபோல்
விவசயாத்திற்காக வேளாண்மை பொறியியல் துறை சார்பாக,
சொட்டுநீர் பாசனம்,
பசுமை குடில் (Polyhouse),
நிழல் வலை (Shade net),
சூரிய ஒளியில்
இயங்கக்கூடிய சூரிய மின் பம்ப்,
சூரிய மின்வேலி
உள்ளிட்டவை மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதி காடுகளை ஒட்டி உள்ளதால் காட்டுப்பன்றிகள் வோளண் பயிர்களை சேதப்படுத்தாதவாறு சூரிய மின் வேலி அமைத்து, தங்களது வேளாண் பயிர்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
அதேப்போல கோவை வேளாண் பல்கலைக்கழகம் காட்டுப்பன்றிகளை விரட்ட ஒரு இயற்கை மருந்தை தயார் செய்துள்ளனர்.
இம்மருந்தை தெளிப்பதன் மூலம் அப்பகுதியில் காட்டுப்பன்றிகள் வராமல் இருக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையினால் போதிய அளவில் நீராதாரம் கிடைக்கிறது.
மேலும், இன்று காலை
புக்கசாகரம் கிராமத்தில்
தனியார் நிறுவனத்தின்
சமூக பொறுப்பு நிதியின் கீழ்,
34 ஏக்கர் பரப்பளவில்
மரக்கன்றுகள் நடும் பணிகள்
துவக்கி வைக்கப்பட்டள்ளது.
அதேப்போல
தென்பெண்ணையாற்றில் வரும் தண்ணீர் ஆலியாளம் அணைக்கட்டு வழியாக கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணைக்கு செல்கிறது.
தற்போது கொடியாளம் அணைக்கட்டு பகுதியில் ஒரு நாளைக்கு 100 கனஅடி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சூளகிரி பகுதியில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரை நிரப்பி விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் கருத்துரு தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், சூளகிரி பகுதியில் உள்ள துரை ஏரி மற்றும் சின்னாறு அணைக்கு தென்பெண்ணை ஆற்றிலிருந்து நீர்வரத்து கால்வாய் 98 கனஅடி தான் உள்ளது.
இதனை மேலும் கூடுதலாகஇக்கால்வாய்களில் நீர்செல்லும் வகையில் கால்வாய்களை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சின்னாறு அணையிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள மாரச்சந்திரம் அணைக்கட்டுக்கு வழியாக படேதலவாய் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை விவசாயம் மூலம் வளமிக்க மாவட்டமாக மாற்ற முடியும்.
எனவே இந்த கும்பளம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மக்கள் தொடர்பு திட்ட முகாமில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக,
36 பயனாளிகளுக்கு
பட்டாவிற்கான ஆணைகள்,
முதலமைச்சரின்
உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்,
30 பயனாளிகளுக்கு
ரூ.8 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில்
விபத்து, இயற்கை மரணம் உதவித்தொகை
மற்றும் திருமணம் உதவித்தொகை
பெறுவதற்க்கான ஆணைகள்,
மாவட்ட வழங்கல் துறை சார்பாக,
10 பயனாளிகளுக்கு
மின்னணு குடும்ப அட்டைகள்,
வேளாண்மைத்துறை சார்பாக,
10 பயனாளிகளுக்கு ரூ.53 ஆயிரம் மதிப்பில் வேளாண் இடுபொருட்களும்,
சமூக பாதுகாப்பு திட்டம் சார்பாக,
14 பயனாளிகளுக்கு
ரூ.22 ஆயிரத்து 200 மதிப்பில்
ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள்
விதவை ஓய்வூதிய உதவித்தொகைக்கான ஆணைகள்,
வருவாய் துறை சார்பாக,
18 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகள், 16 பயனாளிகளுக்கு கணினி சிட்டா பதிவேற்றத்திற்கான ஆணைகள்,
தோட்டக்கலைத்துறை சார்பாக,
2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 567 மதிப்பில் நீர்சேகரிப்பு தொட்டி மற்றும் நுண்ணுயிர் பாசம் அமைப்பதற்கான ஆணைகள்,
மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை சார்பாக,
4 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 280 மதிப்பில் காதொலி கருவிகள் என மொத்தம் 141 பயனாளிகளுக்கு
ரூ.25 லட்சத்து 69 ஆயிரத்து 047 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை,
வேளாண்மைத் துறை,
தோட்டக்கலைத்துறை,
ஒருங்கிணைந்த குழந்தைகள்
வளர்ச்சி திட்டம்
ஆகிய துறைகளில்
செயல்படுத்தப்பட்டு வரும்
திட்டங்களின் செயல்விளக்க
கண்காட்சியை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில்,
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
மாற்றுத்திறனாளி நல அலுவலர்
திரு.முருகேசன்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நல அலுவலர்
திரு.அமீபாஷா,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
திரு.முருகேசன்,
வேளாண் பொறியியல் துறை
செயற்பொறியாளர்
திருமதி.நிர்மலதா,
வேளாண்மைத் துறை
இணை இயக்குநர் (பொ)
செல்வி.உமா,
தோட்டக்கலைத்துறை
இணை இயக்குநர் (பொ)
திருமதி.குணவதி,
உதவி இயக்குநர் (நில அளவை)
திரு.ஜெயகிருஷ்ணன்,
மாவட்ட சமூக நல அலுவலர்
திருமதி.சக்தி சுபாசினி,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ் பாபு,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திருமதி.முகுந்தா,
தனி வட்டாட்சியர்கள்
திருமதி.சித்ரா
திருமதி.அம்மு,
துணை வட்டாட்சியர்கள்
திரு.வெற்றிவேல்,
திரு.கோகுல கண்ணன்,
வருவாய் ஆய்வாளர்
திரு.இளங்கோ,
கும்பளம் கிராம நிர்வாக அலுவலர்
திரு.சக்திவேல்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
------------------------------------------.