80 -வது சுதந்திர தின விழா
கிருஷ்ணகிரி வட்டாரம்,
கங்கலேரி ஊராட்சி,
கேந்திரியா வித்யாலயா பள்ளி மைதானத்தில்
கிராம சபை கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
இன்று (15.08.2026) நடைபெற்றது.
கிருஷ்ணகிரி. ஆகஸ்ட். 15. –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
வெற்றி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ்,
வீடு கட்டுவதற்கான தொகையை
ரூ.5 இலட்சமாக உயர்த்தி உள்ளார்கள் என
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி வட்டாரம்,
கங்கலேரி கிராம ஊராட்சி,
கேந்திரியா வித்யாலாயா பள்ளி வளாகத்தில்,
80 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,
கிராம சபை கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் இன்று (15.08.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய நாட்டின்
80 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
333 ஊராட்சிகளில்
இன்று கிராமசபை கூட்டம்
நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்தும், வளர்ச்சியடைந்த
பாரதம் - கிராம வேலை உறுதி
மற்றும் வாழ்வாதார திட்டம் குறித்தும்,
கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் பற்றிய விழிப்புணர்வு குறித்தும்,
கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிப்பில் சமூக பங்கேற்பு குறித்தும்,
வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணிகள் குறித்த விழிப்புணர்வு, கிராம அளவில் வளர்ச்சியடைந்த பாரதம் -கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்ட செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வது குறித்தும்,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும்,
சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல் குறித்தும்,
ஜல் ஜீவன் திட்டம் குறித்தும்,
தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் குறித்தும்,
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, தமிழ்நாடு உயிரியல் பன்முகத்தன்மை வாரியம்,
பிரதம மந்திரி கிரிஷி
சிஞ்சாய் யோஜனா திட்டம்
குறித்தும்,
சபாசார் வலைத்தளம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிராமங்களின் வளர்ச்சியை கிராமங்களே முடிவு செய்ய வேண்டும் என்று
மகாத்மா காந்தியடிகள்
கூறியதற்கேற்ப 73-வது மற்றும் 74-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு,
கிராமங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.
சுயாட்சி அதிகாரத்தின்
முக்கியமான ஒரு பங்கு
கிராம சபை கூட்டம்.
இக்கிராம சபை கூட்டத்தில்,
இக்கிராமத்தில் கடந்த ஒரு வருடத்தில் வரப்பெற்ற வரவுகள் மற்றும் செலவுகள் குறித்தும்,
இக்கிராமத்தின் வளர்ச்சி திட்டத் தேவை குறித்தும் விவாதிக்கப்படும்.
இக்கிராமத்தில் ரூ.9,23,142 மொத்த வரவும், ரூ.9,24,279 மொத்த செலவும், ரூ.1000 -க்கும் குறைவான வருவாய் பற்றாக்குறை உள்ளது.
நிதி மேலாண்மையில் இக்கிராமம் சிறப்பாக செயல்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இக்கிராமத்தில் ரூ.33,840 குடிநீர் கட்டணம், ரூ.25,630 வீட்டு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கட்டக்கூடிய வீட்டு வரி மூலம் சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க பயன்படுத்தப்படுகிறது.
கிராமத்தின் சொந்த வருவாய் மிக முக்கியம். மேலும், சுய சான்றிதழ் மூலமாக திட்ட ஒப்புதலில் ரூ.3,10,000 வருமானம் வரப்பெற்றுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் வழிகாட்டுதலின்படி,
05.08.2026 அன்று நடைபெற்ற
பட்ஜெட் உரையில்,
வெற்றி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ்,
வீடு கட்டுவதற்கான தொகையை
ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பு இலவச வீடு வழங்கும் திட்டத்தில்
ரூ.3,50,000 வழங்கப்பட்டது (90 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கழிப்பறைக்கான ரூ.12,000 உட்பட).
முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும்
70,000 வீடுகள் கட்டப்பட உள்ளன.
இக்கிராமத்தில் பட்டா இருந்து
வீடு இல்லாதவர்கள் அல்லது ஓட்டு வீடு/கூரை வீட்டில் வசிப்பவர்கள் குறித்து விரைவில்
மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இக்கிராமத்தில் உள்ள
அனைத்து கார்டுதாரர்களும்
கண்டிப்பாக 125 நாள் வேலை செய்து,
கூடுதலாக வழங்கப்படும்
25 நாட்களுக்கான பணிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதேப்போல் ஊரக வளர்ச்சிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல முக்கியத்துவங்களை வழங்கியுள்ளார்.
அதில் கிராமப்புறத்துக்கு அதிகாரம் அளித்தல், மாற்றம் மற்றும் மறுமலர்ச்சிக்கான முன்னெடுப்பிற்காக TN - வெற்றி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ்,
கிராமத்தை குடிநீர் தேவையில்
தன்னிறைவு பெற்ற
கிராமமாக மாற்றப்படும்.
ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு தூயகுடிநீர் 55 லிட்டர் வழங்கப்படும்.
அதேப்போல் சாலை ஓரம், நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பையால் வரக்கூடிய கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தின் நீரை மாசுபடுத்துகிறது. அந்த நிலத்தடி நீரை பயன்படுத்தும்போது உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
அவ்வாறு செய்யாமல், தூய்மை பணியாளர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கே நேரடியாக வருகை தந்து குப்பைகளை பெறும்போது மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.
மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து,
அவற்றை விற்று பணமாக பெறப்படுகிறது. மேலும், TN - வெற்றி திட்டத்தின் கீழ், சாலை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
கணக்கெடுப்பு தொடங்கப்பட உள்ளது. பொதுமக்கள் பஞ்சாயத்து செயலரை அணுகி விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டிலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் 85,777 பட்டாக்கள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் (மயானம், பாதை, நீர்நிலை புறம்போக்கு தவிர்த்து) 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்கள்,
அதற்குச் சான்றாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அல்லது மின்சாரக் கட்டண ரசீது இவற்றில் ஏதாவது ஒன்று சமர்ப்பித்தால் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இம்மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதேப்போல், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (விபி -ஜி.ராம்ஜி VB-G RAM G) திட்டத்தின் கீழ், 125 நாட்கள் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
இந்த பணிக்கான ஊதியம் மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகிதத்தில் வழங்கப்படுவதால், வேலை செய்ததற்கான ஊதியம் உடனடியாக வழங்கப்படும்.
அதேப்போல் நீர் மேலாண்மைக்காக வி.பி. ஜி.ராம்ஜி திட்டத்தின் மூலம் குளங்கள் மற்றும் நீர்நிலைகள் அமைக்கப்படும்.
பொதுமக்கள் குளம் வெட்டுதல் மற்றும் புதியதாக கால்வாய் ஏற்படுத்துவதற்கான வேலை கேட்கும்பட்சத்தில் அவற்றை வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.
இக்கிராமத்தில் உள்ள அனைத்து கார்டுதாரர்களும் கண்டிப்பாக 125 நாள் வேலை செய்து, கூடுதலாக வழங்கப்படும் 25 நாட்களுக்கான பணிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதேப்போல் ஊரக வளர்ச்சிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல முக்கியத்துவங்களை வழங்கியுள்ளார்.
அதில் கிராமப்புறத்துக்கு அதிகாரம் அளித்தல், மாற்றம் மற்றும் மறுமலர்ச்சிக்கான முன்னெடுப்பிற்காக TN - வெற்றி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், கிராமத்தை குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றப்படும். ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு தூயகுடிநீர் 55 லிட்டர் வழங்கப்படும்.
அதேப்போல் சாலை ஓரம், நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பையால் வரக்கூடிய கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தின் நீரை மாசுபடுத்துகிறது.
அந்த நிலத்தடி நீரை பயன்படுத்தும்போது உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அவ்வாறு செய்யாமல், தூய்மை பணியாளர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கே நேரடியாக வருகை தந்து குப்பைகளை பெறும்போது மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.
மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து, அவற்றை விற்று பணமாக பெறப்படுகிறது. மேலும், TN - வெற்றி திட்டத்தின் கீழ், சாலை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
அதேப்போல் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு சிங்கப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மூலதன மானியம் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
100 நாள் பணிசெய்யும் அனைத்து மகளிரும் மகளிர் சுயஉதவிக் குழுவில் சேர்ந்து கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இக்குழுவில் சேர்ந்த உடன் முதலாவதாக சுழல் நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அடுத்து, சமூக முதலீட்டு நிதி ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் குறைவான வட்டி (6%-க்குள்) மானியத்தில் கடனாக வழங்கப்படுகிறது. அதன்பிறகு வங்கி இணைப்பு ஏற்படுத்தி தரப்படும்.
அதுமட்டுமல்லாமல், ஆவின், கூட்டுறவு வங்கிகளில் 5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அடையாள அட்டை இருக்கும்பட்சத்தில் பேருந்துகளில் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை 25 கிலோ வரை இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
தகுதியுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களிடமிருந்துதான் அரசாங்கமே கொள்முதல் செய்யும் என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள், கேந்திரியா வித்யாலாயா பள்ளி வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,
இந்துசமய அறநிலையங்கள்
துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
கிருஷ்ணகிரி வட்டம்,
காட்டிநாயனப்பள்ளி அருள்மிகு ஆஞ்சநேய சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
கண்ணம்பள்ளி அருள்மிகு வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில்,
ஓசூர் நகர் (ம) வட்டம் அருள்மிகு சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில்,
தேன்கனிக்கோட்டை வட்டம், பேளகொண்டப்பள்ளி அருள்மிகு பசுவேஸ்வரர் திருக்கோயில்,
ஊத்தங்கரை நகர் (ம) வட்டம், அருள்மிகு காசிவிஸ்வநாதர் மற்றும் லட்சுமி நாராயணசுவாமி திருக்கோயில்,
ஊத்தங்கரை வட்டம், அனுமந்தீர்த்தம் அருள்மிகு அனுமந்தீஸ்வரர் திருக்கோயில்
ஆகிய 6 திருக்கோயில்களில் பொது விருந்து மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,
திட்ட இயக்குநர்கள் திருமதி.சூ.உமா மகேஸ்வரி (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), திருமதி.ச.சுசீலாராணி (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) திரு.மா.வடிவேலன், திரு.தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி.ஏஞ்சலின் பொன்ராணி,
வேளாண்மை பொறியியல் செயற்பொறியாளர் திருமதி.நிர்மலதா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திருமதி.குணவதி (பொ), கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் திரு.மகேந்திரன்,
நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு.சபரிநாதன், வட்டாட்சியர் திருமதி.ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சரவணன், கங்கலேரி ஊராட்சி செயலர் திரு.சிவக்குமார்
மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை அலுவலர்கள், பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
-------------------------------------------.