ஆரோக்கிய அன்னையின்
பிறந்த நாள் விழா
கொடியேற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரியில் நூற்றாண்டுகள்
பழமைவாய்ந்த ஆலயத்தில்
புனித ஆரோக்கிய
அன்னையின் பிறந்த நாள் விழா
கொடியேற்றத்துடன்
கோலாகலமாக தொடங்கியது.
ஓசூர். ஆக. 31. -
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மத்திகிரியில் உள்ள
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
புனித ஆரோக்கிய அன்னை
ஆலயத்தில் அன்னையின் பிறந்தநாள்
விழாவை முன்னிட்டு
இறைமக்களின் கொடி பவனியுடன்
கொடியேற்றம் நடைபெற்றது.
நூற்றாண்டுகள்
பழைமையான ஆலயம்
1924-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள
நூற்றாண்டுகள் பழமையான
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ம் தேதியன்று
ஆரோக்கிய அன்னையின்
பிறந்தநாள் விழா, தேர் பவனியுடன் சிறப்பாக
கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
நடப்பாண்டு ஆரோக்கிய அன்னையின்
பிறந்த நாளை விழா முன்னிட்டு
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31-ம் தேதி)
மாலை 6 மணிக்கு
கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடி பவனி
புனித ஆரோக்கிய அன்னை
பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
மத்திகிரி கன்னியர் இல்லம் முதல்
புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் வரை
அன்னையின் கொடி பவனி நடைபெற்றது.
இந்த பவனியில்
பங்கு தந்தையர்கள்,
பங்கு குழுவினர்,
பாடல் குழுவினர்,
வின்சென்ட் தே பால் சபையினர்,
இறை மக்கள்,
கொடி ஏந்தி,
அன்னையின் அருள்பாடி
பவனியாக வந்து கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றனர்.
புனித ஆரோக்கிய அன்னை
பிறந்த நாள் விழா
கொடியேற்றம் நிகழ்வில்
ஓசூர் மறை வட்ட முதன்மை குரு
அருட்பணி பெரியநாயகம்,
அவர்கள்
பங்கு தந்தை
அருட்பணி போஸ்கோ மதலைமுத்து
அவர்கள்
ஆகியோர் முன்னிலையில்,
அரூர் மறைவட்டம் பங்கு தந்தை
அருட்பணி ஜாக்சன் லூயிஸ்
அவர்கள்
தலைமை வகித்து கொடியேற்றி வைத்து,
ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள்
பெருவிழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஆலயத்தில்
நவநாள் திருப்பலி,
சிறப்பு மறையுரையுடன்
இறை வழிபாடு
நடைபெற்றது.
பெரிய தேர் பவனி
ஆரோக்கிய அன்னையின்
பிறந்தநாள் தினமான
செப்டம்பர் 8-ம் தேதி அன்று
பெரிய தேர்திருவிழா
நடைபெற உள்ளது.
இந்த கொடியேற்றம் விழாவில்
அருட்சகோதரிகள்,
பங்கு குழுவினர்,
பாடல் குழுவினர்,
மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு
புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
வண்ண விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அறுசுவை உணவு.
அன்னையின் கொடியேற்றும் விழாவில்
பங்கேற்ற அனைவருக்கும்
அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
----------------------------------------------------.