ஓசூர் வட்டம்
அட்மா திட்டத்தில்
தோட்டக்கலைப் பயிர்களில்
உயர் அடர்த்தி நடவு முறை
தொழில்நுட்பங்கள் பற்றி
விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
ஓசூர். ஜுலை. 17. -
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் வட்டாரத்தில்
வேளாண்மைத்துறையின் மூலம்
மாநில விரிவாக்கத் திட்டங்களின்
உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ்
பி.முதுகானப்பள்ளி கிராமத்தில்
தோட்டக்கலைப் பயிர்களில்
உயர் அடர்த்தி நடவு முறை
தொழில்நுட்பங்கள் பற்றி
40 விவசாயிகளுக்கு
உள்மாவட்ட அளவிலான
ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது.
ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர்,
திருமதி.அ.புவனேஸ்வரி
அவர்கள்
துவரை சாகுபடி தொழில்நுட்பங்கள்,
வரப்பு பயிர்,
ஊடுபயிர் செய்வதன் பயன்கள்,
மண்ணின் வளத்தை மேம்படுத்த
நுண்ணூட்ட உரங்கள் மற்றும்
உயிர் உரங்கள் பயன்படுத்துவதன்
முக்கியத்துவம் மற்றும்
பயன்கள் பற்றியும்,
தரமான விதைகளை தேர்ந்தெடுத்து
விதைநேர்த்தி செய்து
விதைகளை விதைப்பதின் மூலம்
பயிர் விளைச்சலை
அதிகபடுத்தலாம் எனவும்,
விவசாயிகளுக்கான
தனித்துவ அடையாள அட்டை
பதிவு செய்வதின் முக்கியத்துவம் மற்றும்
பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு
விரிவாக விளக்கமளித்தார்.
அதியமான் வேளாண் கல்லூரி,
உதவி பேராசிரியர்,
திருமதி.ரோகினி
அவர்கள்
தோட்டக்கலைப் பயிர்களில்
உயர் அடர்த்தி நடவு முறை
தொழில்நுட்பங்கள் பற்றியும்,
மஞ்சள் வண்ண அட்டை,
சூரிய விளக்கு பொறி
பயன் படுத்துவதன் மூலம்
தீமை செய்யும் பூச்சிகளை
கட்டுப்படுத்தலாம் எனவும்,
மண் மாதிரி சேகரித்தலின்
முக்கியத்துவம்,
மண் மாதிரி சேகரிக்கும்
தொழில்நுட்ப முறைகள் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
உதவி தோட்டக்கலை அலுவலர்
திரு.ஸ்ரீதர்
அவர்கள்
காய்கறிப் பயிர்கள் சாகுபடி
தொழில்நுட்பங்கள் மற்றும்
மானிய விவரங்கள் பற்றி
விவசாயிகளுக்கு கூறினார்.
மேலும்
அட்மா திட்ட வட்டார
தொழில்நுட்ப மேலாளர்
திருமதி.சுகுணா
அட்மா திட்ட செயல்பாடுகள்,
பயன்கள் பற்றியும் கூறினார்.
மேலும்
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை
உதவி தொழில்நுட்ப மேலாளர்
செல்வி.காவியா
மற்றும்
திருமதி.கலையரசி
அவர்கள் செய்தார்கள்.
இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட
விவசாயிகள் கலந்து கொண்டனர்.
----------------------------------------------.