80-வது சுதந்திர தினவிழாவில்
சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறை சார்பில்,
பெண்களுக்கான சிறப்பான
சமூக சேவைக்காக,
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சரிடம்
சிறந்த சமூக சேவகர் விருதினை பெற்ற
ஓசூர் ஆராதனா அறக்கட்டளை நிறுவனர்
ஈ. ராதா அவர்களுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி. ஆகஸ்ட். 19. –
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
15.08.2026 அன்று சென்னையில் நடைபெற்ற
சுதந்திர தின விழாவில்,
சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறை சார்பில்,
பெண்களுக்கான சிறப்பான சமூக சேவைக்காக,
சிறந்த சமூக சேவகர் விருதினை
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த
ஈ. ராதா அவர்களுக்கு
வழங்கியதையடுத்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்களிடம் 18-08-2026 அன்று காண்பித்து
வாழ்த்து பெற்றார்.
உடன், மாவட்ட சமூக நல அலுவலர்
திருமதி. சக்தி சுபாசினி
ஓசூர் சமுக சேவகர்
திரு. லட்சுமணன்.
சமுக சேவகர்
திரு. தாமஸ்,
உள்ளிட்ட பலர் உள்ளனர்.
------------------------------------------.