தானிய களங்கள்
அமைக்க
50% மானியம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
விவசாயிகள் தானிய களங்கள்
50% மானியத்தில் அமைக்க
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஆகஸ்ட். 5. -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
விவசாயிகள் தானிய களங்கள்
50% மானியத்தில் அமைக்க
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
நிலக்கடலை,
எள்,
தேங்காய்
போன்ற எண்ணெய் வித்துக்கள்
அதிக பரப்பளவில்
பயிரிடப்பட்டு வருகின்றன.
பெரும்பாலும். இத்தகைய பயிர்களைச்
சாகுபடி செய்யும் சிறு விவசாயிகள்,
தங்கள் கிராமங்களில்
இடவசதி இல்லாத காரணத்தினால்,
சாலை ஓரங்களிலேயே
விளைபொருட்களைக் காயவைக்கின்றனர்.
இது போக்குவரத்திற்கு
ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.
அதனை கருத்தில் கொண்டு
2026-27 வரும் நிதியாண்டிற்கு
நெல்/ தானியங்களை பாதுகாக்க
அடித்து உலர்த்தி வைக்கவும்
உழைப்பின் செலவு குறைத்திடவும்,
தானிய இழப்பீட்டை தடுக்கவும்
மற்றும்
விவசாயிகளின் வருமானத்தை
அதிகரிக்கும் நோக்கத்துடனும்
நெல் அடிக்கும் களம்
(Threshing floor)
50% மானியத்தில் விவசாயிகளுக்கு
அமைத்து தர அரசாணை பெறப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு ஏற்றவாறு வயல்களில் களங்களை 100 சதுர மீட்டரருக்கு (10மீX10மீ) அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தானியக் களங்கள் அமைப்பினை தெரிவு செய்து கொள்ளலாம்.
தனிநபர் விவசாயிக்கு களங்கள் அமைக்கும் செலவுத் தொகையில் 50% அரசு மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.80 லட்சம் அரசு பின்னேற்பு மானியமாக வழங்கிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன்
சிட்டா.
அடங்கல்,
வரைபடம்,
ஆதார் நகல்,
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஆகியவற்றுடன் கீழ்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு,
செயற்பொறியாளர் அலுவலகம்,
வேளாண்மை பொறியியல் துறை,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
கிருஷ்ணகிரி.
போன்: 04342-232959.
உதவி செயற்பொறியாளர் அலுவலகம்,
வேளாண்மை பொறியியல் துறை,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
கிருஷ்ணகிரி.
உதவி செயற்பொறியாளர் அலுவலகம்,
வேளாண்மை பொறியியல் துறை,
சென்னத்தூர் அஞ்சல்,
சாணசந்திரம்,
இராயக்கோட்டை ரோடு,
ஓசூர்.
-----------------------------------------------.