சரக அளவிலான
போட்டிகளில்
பேடரப்பள்ளி அரசுப்பள்ளி
முதலிடம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் சரக (ஒன்றியம்) அளவிலான
விளையாட்டு போட்டிகளில்
முதலிடம் பெற்ற
பேடரப்பள்ளி அரசுப்பள்ளி
மாணவர்களுக்கு
தலைமையாசிரியர்
திரு.பொன்நாகேஷ்
மற்றும்
ஆசிரியர்கள் பாராட்டு.
ஓசூர் சரக அளவிலான போட்டிகளில்
உற்சாகமாக பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள்☝️
-------------------------------------------------
ஓசூர். ஆகஸ்ட். 12. –
ஓசூர் சரகம் (ஒன்றியம்) அளவிலான
விளையாட்டு போட்டிகளில்
முதலிடம் பெற்ற
பேடரப்பள்ளி அரசுப்பள்ளி
மாணவர்களுக்கு
தலைமையாசிரியர்
திரு. பொன்நாகேஷ்
மற்றும்
ஆசிரியர்கள்
சான்றிதழ்கள், பதக்கங்கள், பரிசுகள்,
வழங்கி பாராட்டி,
மாவட்ட அளவிலான போட்டிகளில்
வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.
புகழ் - ஷாட் புட் முதலிடம்
------------------------------------------------
மாவட்டத்தில் சிறந்த
அரசுப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
பேடரப்பள்ளி, 3-வது வார்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப்பள்ளியில்1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை 825 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நல்லொழுக்கத்துடன்,
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இதனால் இந்த அரசுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறந்த அரசுப்பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது.
பாராட்டு விழா
இந்த அரசுப்பள்ளியில்
ஓசூர் சரக (ஒன்றியம்) அளவிலான
விளையாட்டு போட்டிகளில்
வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ்
செயல்பட்டு வரும்
அரசு, அரசு உதவி பெறும் மற்றும்
தனியார் பள்ளிகளில்
பயிலும் மாணவா்களை
ஊக்கப்படுத்தும் வகையில்
பள்ளி, ஒன்றிய, மாவட்ட,
மாநில அளவில்
38 மாவட்டங்களில் 25 வகையான
விளையாட்டுப் போட்டிகளை
11,14,17& 19 வயதுக்கு உட்பட்ட
மாணவ, மாணவியருக்கு
தனித்தனியாக நடைபெற்று வருகிறது.
பவன் குமார் - சிலம்பத்தில் முதலிடம்
----------------------------------------------------------
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் சரக (ஒன்றியம்) அளவிலான
போட்டிகள் நடத்துவதற்கு
நடப்பாண்டு சீதாராம் நகர்
அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி
ஆசிரியர்கள் பொறுப்பு வகித்தனர்.
கடந்த ஒரு மாதமாக ஸ்போர்ட்ஸ்,
கேம்ஸ்,அத்தலெட்டிக்ஸ் சரக அளவில்
வெவ்வேறு விளையாட்டு
மைதானங்களில் நடைபெற்றது.
நேற்று அதியமான் கல்லூரியில்
தடகள விளையாட்டு போட்டிகளுடன் நிறைவடைந்தது.
கௌதம் குணா மற்றும்
சரண்.
Tennikoit -ல் முதலிடம்
---------------------------------------------------
அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
பேடரப்பள்ளியில்
25 மாணவ மாணவியர்கள்
டென்னிகாய்ட் ,
சிலம்பம்,
வாலிபால்,
த்ரோபால்
கேரம்போர்டு
மற்றும்
தடகளப் போட்டிகளில்
கலந்து கொண்டனர்.
இதில் சரக அளவில்
எட்டாம் வகுப்பு மாணவர்களான
கௌதம் குணா,
சரண்.
டென்னிகாய்ட் விளையாட்டிலும்,
ஷாட் புட் விளையாட்டில்
மாணவன்
புகழ்.
ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.
ஆறாம் வகுப்பு மாணவன்
பவன்குமார்
சிலம்பம் போட்டியில்
முதல் பரிசு பெற்றுள்ளார்.
மாணவர்
கௌஷிக்
மற்றும்
மாணவி
தனுஸ்ரீ
லாங் ஜம்ப் விளையாட்டில்
மூன்றாம் இடம் பெற்றனர்.
மாணவர்
தீபு குமார்.
400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்
மூன்றாவது இடம் பெற்றுள்ளார்.
பரிசு - பாராட்டு
முதலிடம் பெற்ற
நான்கு மாணவர்களுக்கும்
மூன்றாம் இடம் பெற்ற
மூன்று மாணவர்களுக்கும்
இன்று பள்ளி இறைவணக்க கூட்டத்தில்
தலைமை ஆசிரியர்
திரு. பொன்நாகேஷ்
அவர்கள்
மாணவர்களை பாராட்டி கௌரப்படுத்தி
பாராட்டு சான்றிதழையும்
பதக்கங்களையும் மற்றும்
பரிசுகளையும் வழங்கினார்.
மாவட்ட அளவிலான
விளையாட்டுப் போட்டிகளில்
கலந்து கொண்டு வெற்றி வாய்ப்பை
இழந்த மாணவர்களையும்
பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த விளையாட்டுகளுக்கு
பாதுகாப்பாக மாணவர்களை
வழி நடத்திய உடற்கல்வி ஆசிரியை
திருமதி விஜயலட்சுமி,
ஓவிய ஆசிரியர்
திரு. பெரியசாமி.
அவர்களையும் தலைமை ஆசிரியர்
பாராட்டி கௌரவித்தார்.
மாவட்ட அளவில் வெற்றி பெற
வாழ்த்து
இந்தப் போட்டிகளில்
கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற
அனைத்து மாணவர்களையும்
பள்ளியில் பணியாற்றி வரும்
24 ஆசிரியர்களும் பாராட்டி
உற்சாகப்படுத்தி
மாவட்ட அளவில் வெற்றி பெற்று
பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்
என்று வாழ்த்தினார்கள்.
நன்றி
விளையாட்டுகளில்
பங்குபெற ஒத்துழைப்பு நல்கிய
பெற்றோர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
-------------------------------------------.
Hosur Zonal Sports Meet 2026-2027
Honouring to the Winners
UNDER 14 8th Class Students
PUMS BEDARAPALLI
⭐ Tennikoit - Gowtham Guna & Charan( first place )
⭐ Silambam - Pavan Kumar( first place )
⭐ Shot put - Pugazh (first place)
⭐ Long jump -Gowshik & Tanushree (third place)
⭐ Running race 400 MB Deepu Kumar
(Third place )
💐💐💐💐💐💐💐💐
--------------------------------------------------.