தமிழ்நாடு, ஆந்திரா மற்றும்
கர்நாடகா மாநிலங்களுக்கு
இடையே ஆன பூச்சிகளால்
பரவும் நோய்களுக்கான
சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்
குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும்
நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர்
டாக்டர் A. சோமசுந்தரம்.
அவர்கள் தலைமை.
கிருஷ்ணகிரி. ஜுலை. 07. –
தமிழ்நாடு ஆந்திரா மற்றும் கர்நாடகா
மாநிலங்களுக்கு இடையே ஆன
பூச்சிகளால் பரவும் நோய்களுக்கான
சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்
குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்
ஓசூர் IVCZ நிறுவனத்தில்
ஜூலை 7 அன்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும்
நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர்
டாக்டர் A. சோமசுந்தரம்.
அவர்களின் தலைமையில்
நடந்த இந்த கூட்டத்தில்
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா
மாநிலங்களின்
கூடுதல் இயக்குனர்கள்,
திட்ட அலுவலர்கள்,
எல்லை மாவட்ட சுகாதார அலுவலர்கள்,
மாவட்ட நோய் கண்காணிப்பு அலுவலர்கள்
மற்றும்
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில்
எல்லை மாவட்டங்களுக்கு
இடையே பூச்சிகளால் பரவும் நோய்களை
சிறப்பாக கையாளுதல் உரிய நேரத்தில்
தகவல் பரிமாற்றம் செய்தல்
குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு
உரிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
--------------------------------------------.