இலவச மாண்டிசோரி
ஆங்கில வழிக் கல்வி
அமீகா அறக்கட்டளை சார்பாக,
ஒசூர் வட்டத்திற்குட்பட்ட
சித்தனப்பள்ளி மற்றும்
மடிவாளம் அங்கன்வாடி மையங்களில்
இலவச மாண்டிசோரி அடிப்படையிலான
ஆங்கில வழிக் கல்வி திட்டத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.
ஓசூர். ஆகஸ்ட். 13. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் ஊராட்சி ஒன்றியம்,
கெலவரப்பள்ளி ஊராட்சி,
சித்தனப்பள்ளி மற்றும்
நல்லூர் ஊராட்சி,
மடிவாளம் அங்கன்வாடி மையங்களில்
இலவச மாண்டிசோரி முறையிலான
ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (13.08.2026)
துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது:
அமீகா அறக்கட்டளை
தற்போது கிராமப்புறங்களில் உள்ள
குழந்தைகளுக்கு இலவச,
உலகத் தரமான மாண்டிசோரி
அடிப்படையிலான
ஆங்கில வழிக் கல்வியை
வழங்கி வருகிறது.
அமீகா அறக்கட்டளை
தொடங்கப்பட்டதிலிருந்து நாளதுவரை
3,400 -க்கும் மேற்பட்ட குழந்தைகளின்
வாழ்க்கையில் நேர்மறையான
மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,
தமிழ்நாடு மற்றும்
கர்நாடக மாநிலங்களில்
6 புதிய அங்கன்வாடி கட்டிடங்களை
கட்டியதுடன், 17 அங்கன்வாடி மையங்களைப் புதுப்பித்துள்ளது.
இதன் மூலம், தரமான ஆரம்பக் குழந்தைப்
பருவக் கல்வியை வழங்குவதற்கான
பாதுகாப்பான,
குழந்தைகளுக்கு உகந்த மற்றும்
சிறந்த கற்றல் சூழல்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.
டைட்டன் கம்பெனி லிமிடெட் தனது சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் ஒரு பகுதியாக,
அமீகா அறக்கட்டளை மற்றும்
ஒருங்கிணைந்த குழந்தைகள்
வளர்ச்சித் திட்டத் துறையுடன் இணைந்து,
ஒசூர் வட்டத்தில் உள்ள
சுண்ணாம்பு ஜீபி,
சின்ன எலசகிரி
நல்லூர்
அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இலவச, உலகத் தரம் வாய்ந்த மாண்டிசோரி முறையிலான ஆங்கில வழிக் கல்வியை வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து,
இன்று கெலவரப்பள்ளி ஊராட்சி சித்தனப்பள்ளி மற்றும் நல்லூர் ஊராட்சி, மடிவாளம் ஆகிய இரண்டு புதிய அங்கன்வாடி மையங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கூடுதல் அங்கன்வாடி மையங்களில் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம்,
இந்த ஆண்டு 670-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உலகத் தரமான கல்வியைப் பெற உள்ளனர்.
மேலும், ஓசூர் பகுதியில் உள்ள 5 அங்கன்வாடி மையங்களில் சுமார் 150 குழந்தைகள் இலவச உலகத் தரம் வாய்ந்த ஆரம்பக் கல்வியைப்
பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்த கல்வித் திட்டம்
அமீகா அறக்கட்டளை,
ஒருங்கிணைந்த குழந்தைகள்
வளர்ச்சித் திட்டத் துறை மற்றும்
டைட்டன் கம்பெனி லிமிடெட்
நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது.
அமீகா அறக்கட்டளை நிறுவனத்திற்கு
மாவட்ட நிர்வாகம் சார்பாக,
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, பெற்றோர் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
அமீகா அறக்கட்டளையின்
அறங்காவலர்கள்
திருமதி.லட்சுமி ராமமூர்த்தி,
திரு.எம்.ஆர்.தர்மராஜன்,
அமீகா அறக்கட்டளையின் பொது மேலாளர்
திருமதி.கோமதி,
டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின்
சமூகப் பொறுப்பு(CSR) மேலாளர்
திரு.வைரவேல்,
ஒருங்கிணைந்த குழந்தைகள்
வளர்ச்சித் திட்ட அலுவலர்
திருமதி.சுமதி,
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்
திருமதி.நித்யா,
மேற்பார்வையாளர்
திருமதி. உதயசெல்வி,
தலைமை ஆசிரியர்
திரு.வி.எம்.குமார்,
மற்றும் பெற்றோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
----------------------------------------------.