கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்
தேசிய தோட்டக்கலை வாரிய (NHB)
மானியத் திட்டங்களைப் பயன்படுத்தி
பயன்பெறுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்
கிருஷ்ணகிரி. ஜுலை. 10. -
இந்திய அரசின்
தேசிய தோட்டக்கலை வாரியம்
(National Horticulture Board - NHB)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தோட்டக்கலை பயிர்கள்
118918 ஹெக்டர் பரப்பளவில்
சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் தோட்டக்கலை பயிர்களில்
வர்த்தக ரீதியான நவீன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருமானத்தைப் பெருக்க
இந்திய அரசின்
தேசிய தோட்டக்கலை வாரியம்
(National Horticulture Board - NHB)
பல்வேறு சிறப்பான மானியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களின் கீழ் தகுதியுள்ள
விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்
ரூ. 40 லட்சம் முதல் ரூ. 5.35 கோடி வரை நிதியுதவியை மானியத்தின் மூலம் பெற்றுப்பயனடையலாம் என்று
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார் இஆப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:
1. திறந்தவெளி பழச்சாகுபடி:
மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை, நெல்லி, தென்னை, மாதுளை, சீதா, அத்தி, புளி, இலந்தை, புதினா போன்ற பயிர்களை 5 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 40% மானியத்துடன் ரூ. 40 லட்சம் வரையிலும், 50 ஏக்கருக்கு மேல் சாகுபடி உள்ள பெரிய அளவிலான திட்டங்களுக்கு (Mega Projects) ரூ. 80 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படும்.
2. பசுமைக் குடில் சாகுபடி (Protected Cultivation): மலர்கள் மற்றும் காய்கறிகளைப் பசுமைக்குடில் அல்லது நிழல்வலைக் குடில் முறையில் சாகுபடி செய்ய 50% மானியத்துடன் ரூ. 100 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது.
3. அதிநவீன நாற்றுப்பண்ணை (High-Tech Nursery):
1 ஏக்கர் பரப்பளவில் தரமான நடவுப் பொருட்களை உற்பத்தி செய்ய அதிநவீன நாற்றுப்பண்ணை அமைக்க 50% மானியத்தில் ரூ. 100 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
4. காளான், திசு வளர்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள்:
திசு வளர்ப்பு கூடம் அமைக்க ரூ. 100 லட்சம் வரையிலும், ஒருங்கிணைந்த காளான் உற்பத்தி மையம் அமைக்க ரூ. 90 லட்சம் முதல் ரூ. 102 லட்சம் வரையிலும் 40% விகிதத்தில் மானியம் வழங்கப்படும்.
5. அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை & குளிர்பதன கிடங்குகள்:
விளைபொருட்களைப் பாதுகாக்கப் பயன்படும் பேக் ஹவுஸ் (Pack House) 50% மானியத்திலும் குளிரூட்டப்பட்ட வாகனம் (Refer van), முன்குளிரூட்டப்பட்ட அலகு (Mobile Pre-cooling unit) Cu 35% மானியத்திலும் மற்றும் 5001 MT முதல் 20000 MT கொள்ளவு கொண்ட பெரிய குளிர்பதன கிடங்குகள் (Cold Storage) அமைக்க திட்டத்தின் தன்மைக்கேற்ப ரூ.1.60 கோடி முதல் ரூ. 5.35 கோடி வரை மானியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தனிநபர் விவசாயிகள், விவசாயக் குழுக்கள். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs). சுயஉதவிக் குழுக்கள் (SHGs), கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழில்முனைவோர் இத்திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள். சொந்த நிலம் அல்லது குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலம் கொண்டவர்கள் வங்கி கடன் உதவியுடன் இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள பயனாளிகள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து
வங்கி கடன் பெற்று
தேசிய தோட்டக்கலை வாரியத்தின்
அதிகாரப்பூர்வ இணையதளமான
www.nhb.gov.in மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டங்களை
மத்திய அரசின் வேளாண் உள்கட்டமைப்பு நிதியுடன் (Agri Infrastructure Fund)
இணைத்து கூடுதல் வட்டிச் சலுகைகளையும்
பெற முடியும்.
இது குறித்த கூடுதல் விவரங்களை
தேசிய தோட்டக்கலை வாரியத்தின்
சென்னை மண்டல அலுவலகத்தை
நேரடியாகவோ,
nhbtn32@gmail.com / tn.nhb@gov.in
ஆகிய மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது சென்னை மண்டல துணை இயக்குநர் அவர்களை அணுகியோ பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, நமது மாவட்டத்தைச் சேர்ந்த
தகுதியுள்ள
விவசாயிகள்,
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,
வேளாண் தொழில் முனைவோர்கள்
இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திப் பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------.