அட்மா திட்டத்தில்
இயற்கை விவசாயம் பற்றி
விவசாயிகளுக்கு
ஒரு நாள் பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் வட்டம்
எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில்
இயற்கை விவசாயம் பற்றி
அட்மா திட்டத்தில்
விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
ஓசூர். ஆகஸ்ட். 18. -
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் வட்டாரத்தில்
வேளாண்மைத்துறையின் மூலம்
மாநில விரிவாக்கத் திட்டங்களின்
உறுதுணை சீரமைப்புத்
திட்டத்தின் கீழ்
எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில்
இயற்கை விவசாயத்தின்
முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி
40 விவசாயிகளுக்கு உள்மாவட்ட அளவிலான
ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது.
இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர்,
திருமதி.அ.புவனேஸ்வரி.
அவர்கள்
துவரை சாகுபடி தொழில்நுட்பஙகள்,
வரப்பு பயிர்,
ஊடுபயிர்
செய்வதன் பயன்கள்,
தரமான விதைகளை தேர்ந்தெடுத்து
விதைநேர்த்தி செய்து விதைகளை
விதைப்பதின் மூலம்
பயிர் விளைச்சலை
அதிகபடுத்தலாம் எனவும்
விவசாயிகளுக்கான
தனித்துவ அடையாள அட்டை
பதிவு செய்வதின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
அதியமான் வேளாண் கல்லூரி,
உதவி பேராசிரியர்,
திரு.லலித்குமார்
அவர்கள்
இயற்கை விவசாயத்தில்
செயற்கை உரங்களை தவிர்த்து
இயற்கை உரங்கள் மூலம்
விளைச்சல் அதிகப்படுத்தும்
தொழில்நுட்ப முறைகள் பற்றியும்,
பஞ்சகாவியா,
ஜீவாமிருதம்
தயாரிப்பு பற்றியும்,
துவரையில் 2 சதவீத டீ.ஏ.பி கரைசல்
தெளிப்பதின் பயன்கள் பற்றியும்,
மண்ணின் வளத்தை மேம்படுத்த
நுண்ணூட்ட உரங்கள் மற்றும்
உயிர் உரங்கள் பயன்படுத்துவதன்
முக்கியத்துவம் மற்றும்
பயன்கள் பற்றியும்,
மஞ்சள் வண்ண அட்டை,
சூரிய விளக்கு பொறி
பயன் படுத்துவதன் மூலம்
தீமை செய்யும் பூச்சிகளை
கட்டுப்படுத்தலாம் எனவும்
விளக்கமளித்தார்.
உதவி வேளாண்மை அலுவலர்
திரு.சுந்தர்ராஜ்
அவர்கள்
துவரை,
கேழ்வரகு (ராகி)
சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும்
மானிய விவரங்கள் பற்றி
விவசாயிகளுக்கு கூறினார்.
மேலும் அட்மா திட்ட வட்டார
தொழில்நுட்ப மேலாளர்
திருமதி.சுகுணா
அட்மா திட்ட செயல்பாடுகள்,
பயன்கள் பற்றியும் கூறினார்.
மேலும்
பயிற்சியில் கலந்து கொண்ட
விவசாயிகளுக்கு
இயற்கை விவசாயத்தின்
பயன்கள் பற்றிய
துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை
உதவி தொழில்நுட்ப மேலாளர்
செல்வி.காவியா
மற்றும்
திருமதி.கலையரசி
அவர்கள் செய்தார்கள்.
---------------------------------------------.