வேப்பனப்பள்ளி சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட
வறண்ட ஏரிகளுக்கு நீர் கொண்டு
செல்வது குறித்தும்,
ஒசூர் வட்டம், சேவகானப்பள்ளி ஊராட்சி,
கொடியாளம் அணைக்கட்டிலிருந்து
நீரேற்று முறையில் 62 ஏரிகளுக்கு
நீர் கொண்டு செல்வது குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.பா.பாலகிருஷ்ணா ரெட்டி
(ஓசூர்)
மற்றும்
திரு.பி.எஸ்.சீனிவாசன்
(வேப்பனப்பள்ளி)
ஆகியோர் இன்று (28.07.2026) நேரில்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி. ஜுலை. 28. –
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பவர்கிரீடு கூட்டரங்கில், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வறண்ட ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்வது குறித்தும்,
ஒசூர் வட்டம், சேவகானப்பள்ளி ஊராட்சி, கொடியாளம் அணைக்கட்டிலிருந்து நீரேற்று முறையில் 62 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பா.பாலகிருஷ்ணா ரெட்டி (ஓசூர்) மற்றும் திரு.பி.எஸ்.சீனிவாசன் (வேப்பனப்பள்ளி) ஆகியோர் இன்று (28.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கெலவரப்பள்ளி அணையின் இடதுபுறக் கால்வாயிலிருந்து வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாறு கிழக்கு உபவடி நிலத்தில் உள்ள வறண்ட சுமார் 30 ஏரிகளுக்கு புதிய வழங்கு கால்வாய் அமைத்து நீர் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து அரசுக்கு கருத்துரு அனுப்பி இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
தொடர்ந்து, ஓசூர் வட்டம், சேவகானப்பள்ளி ஊராட்சி, கொடியாளம் அணைக்கட்டிலிருந்து தென்பெண்ணையாற்றின் நீரை நீரேற்று முறையில் 62 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இத்திட்டத்தின் மூலம் 1968 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.தொடர்ந்து, ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியின்போது, வரப்பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள மனுக்களின் விபரங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது,
ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் திரு.செந்தில் குமார், திரு.எஸ்.அருள்குமரன் (திட்டங்கள் திட்டமிடுதல் (ம) வடிவமைப்பு கோட்டம் சேலம்), உதவி செயற்பொறியாளர்கள் திரு.மோகன்ராஜ், திருமதி.கௌரி, வட்டாட்சியர்கள் திரு.ரமேஷ் (சூளகிரி), திரு.ஜெகதீஸ் குமார் (ஓசூர்) மற்றும் பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
--------------------------------------------------.