கனிம வளங்கள்
வெளிமாநிலங்களுக்கு
எடுத்துச் செல்ல தடை
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து
வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள்
எடுத்து செல்வதை கண்டறியப்பட்டால்
தொடர்புடைய குவாரிகளையும் அல்லது
தொடர்புடைய கிரஷர்கள் மீதும்
கடுமையான நடவடிக்கை எடுத்து
சீல் வைக்கப்படும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்
ஓசூர். ஜுலை. 29. -
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர், ஜுஜுவாடி சோதனை சாவடியில்,
கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு
எடுத்து செல்வதை தடுக்கும் வகையில்
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று(28.07.2026)
சோதனைச் சாவடியை
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதுமட்டுமில்லாமல்,
இன்று குவாரி மற்றும் கிரஷர் ஒனர் அசோசியேஷனை அழைத்து, கண்டிப்பான முறையில் வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்றும்,
மீறி எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் தொடர்புடைய குவாரிகள் மீதும் அல்லது தொடர்புடைய கிரஷர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அவர்களும் நம்முடைய அரசிற்கு அனைத்து விதமான ஒத்துழைப்பும் வழங்குவோம் என்றும், வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை எடுத்துச் செல்ல மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இருப்பினும் கனிமவளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு,
ஏற்கனவே 15 சோதனை சாவடியில் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மீதம் இருக்கக்கூடிய சோதனை சாவடியில் காவல்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை ஆகிய துறைகளால் அமைக்கப்பட்ட குழுவானது,
எந்த வாகனங்களும் நம்முடைய எல்லை தாண்டி வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்லாதவாறு பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,
இன்னும் முன்னெச்சரிக்கையாக தொழில்நுட்ப ரீதியாக MIMAS போர்ட்டல் மூலமாக கனிம அனுமதி சீட்டு கொடுத்து வருகிறோம்.
அந்த MIMAS போர்ட்டலில் இருக்கக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும், கிட்டத்தட்ட 484 வாகனங்கள் ஜிபிஎஸ் பொறுத்தப்பட்டு கனிமங்களை கொண்டு செல்வதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, ஜிபிஎஸ் Tag இருக்கக்கூடிய வாகனங்கள் நம்முடைய எல்லை தாண்டி செல்கிறா என்பதை ஆய்வு செய்யப்படும்.
அப்படி ஏதாவது வாகனங்கள் எல்லை தாண்டி சென்றால், அந்த வாகனத்தை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல்,
அந்த வாகனம் எந்த கிரஷர்லிருந்து பொருள் ஏற்றி சென்றதுன்னு பார்த்து, அந்த கிரஷர் மேலேயே நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசுடைய இந்த உத்தரவானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடுமையாக அமல்படுத்துவது மட்டுமல்லாமல்,
கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை முழுமையாக தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இவ்வாய்வில்,
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர்
திரு.ஈஸ்வரமூர்த்தி,
துணை காவல் கண்காணிப்பாளர்
திரு.பாலகிருஷணன்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
-------------------------------------------------------.