கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சியின்
புதிய வணிக வளாக கட்டிட முகப்பில்
ஓசூர் மாநகர தந்தை
முன்னாள் எம்எல்ஏ
திரு. கே. அப்பாவுபிள்ளை
அவர்களின்
சிலை திறப்பு விழா
ஒசூர், ஆக. 9. -
ஓசூர் மாநகர தந்தை
திரு.கே. அப்பாவு பிள்ளை
சிலை திறப்பு விழா
ஒசூர் பேருந்து நிலையம் அருகில்
கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்தில்
முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன்
அவர்களின் தந்தையும்,
ஒசூர் மாநகரத் தந்தை எனப் போற்றப்படும்
திரு கே.அப்பாவு பிள்ளை
அவர்களின்
மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள
சிலையின் திறப்பு விழா
நடைபெற்றது.
ஓசூர் புதிய வணிக வளாக கட்டடிடத்தில்
ஆகஸ்ட் 8-ம் தேதியன்று நடந்த
இந்த சிலை திறப்பு விழாவில்
ஒசூர் மாநகர மேயர்
திரு. எஸ்.ஏ.சத்யா. Ex.MLA.
தலைமை வகித்தார்.
மாநகராட்சி ஆணையர்
திரு. முகமத் ஷபீர் ஆலம்,
முன்னாள் எம்எல்ஏ
திரு. கே.ஏ.மனோகரன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில்
ஒசூர் மாநகரத் தந்தை எனப் போற்றப்படும்
திரு. கே.அப்பாவுபிள்ளை
அவர்களின் சிலையை
ஒசூர் மாநகர மேயர்
திரு. S.A. சத்யா. Ex.MLA.
திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில்
மாநகாட்சி சுகாதாரக்குழுத் தலைவர்
திரு. N.S.மாதேஸ்வரன்,
வரி விதிப்புக் குழுத் தலைவர்
திரு. சென்னீரப்பா,
கவுன்சிலர்கள்
திருமதி.இந்திராணி,
திரு.வெங்கடேஷ், திரு. தேவிமாதேஷ்,
ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலாளர்
திரு. முனிராஜ்,
காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்டத் தலைவர் திரு. முரளிதரன்,
காங்கிரஸ் நிர்வாகிகள்
திரு. சத்தியமூர்த்தி, திரு.கோதண்டன்,
திரு.மோகன், திரு.தயாளன்,
திரு.லோகநாதன், திரு.தங்கவேல்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
--------------------------------------------------.
K.அப்பாவு பிள்ளை
பேருந்து நிலையம்
முன்னாள் எம்எல்ஏ
திரு. கே.அப்பாவு பிள்ளை
அவர்கள்
பல கோடி மதிப்பிலான
5 ஏக்கர் நிலத்தை தானமாக
ஓசூர் பேருந்து நிலையம் கட்ட கொடுத்ததால்
அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம்
என பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------.