ஓசூர் 15-வது புத்தகத்திருவிழா
(24-07-2026 To 04-08-2026)
3.50 லட்சம் பார்வையாளர்கள்,
ரூ.92லட்சம் மதிப்பிலான
1.50 லட்சம் புத்தகங்கள் விற்பனையுடன்
15-வது ஓசூர் புத்தகத்திருவிழா
நிறைவு.
ஓசூர். ஆகஸ்ட். 5. -
ஓசூர் நகரில்
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்
மற்றும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
இணைந்து
ஓசூர் - பெங்களூரு தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள
ஹில்ஸ் ஹோட்டல் அரங்கில்
கடந்த ஜுலை 24-ம் தேதி தொடங்கி
ஆகஸ்ட் 4-ம் தேதி வரை
12 நாட்களாக நடைபெற்று வந்த
15-வது புத்தகத் திருவிழாவில்
ரூ.92 லட்சம் மதிப்புள்ள
புத்தகங்கள் விற்பனை மற்றும்
சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் உட்பட
3.50 லட்சம் பார்வையாளர்கள்,
1.50லட்சம்புத்தகங்கள் விற்பனை,
புத்தகத்திருவிழா ரத்த தானம் முகாமில்
120 யூனிட் ரத்தம் நன்கொடை
உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுடன்
15-வது புத்தகத்திருவிழா நிறைவடைந்தது.
இந்த புத்தகக்கண்காட்சியில்
அமைக்கப்பட்டிருந்த 103 அரங்குகளில்
பிரபலமான பதிப்பகங்கள் சார்பில்
அறிவியல்,
வரலாறு,
இலக்கியம்,
கதைப்புத்தகங்கள்,
குழந்தை இலக்கியங்கள்
என சுமார் 1 லட்சம் தலைப்புகளில் கோடிக்கணக்கானப் புத்தகங்கள்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
10 சதவிகிதம் தள்ளுபடி
இங்கு வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும்
10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டது.
இந்த புத்தகங்களை பார்வையிட
நாள்தோறும் ஆயிரக்கணக்கான
வாசகர்கள் வருகை தந்து
தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிச்சென்றனர்.
இலவச பேருந்து வசதி
புத்தகத்திருவிழாவின்
அனைத்து நாட்களிலும்
புத்தக அரங்குகளை பார்வையிட
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
பயிலும் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட
மாணவ, மாணவிகள்
இலவச பேருந்துகளில்
அழைத்துவரப்பட்டனர்.
அனைத்து மாணவர்களும் வரிசையில் சென்று புத்தகங்களை பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
கோளரங்கம்
மேலும் புத்தகத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த கோளரங்கத்தை நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகத்துடன் பார்வையிட்டனர்.
மாணவர்கள் புத்தகங்களை
வாங்கிச் செல்ல வசதியாக
பல தன்னார்வலர்களின் உதவியோடு
ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள்
வழங்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள்
மேலும், நாள்தோறும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை குழந்தைகளின் கண்கவர் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிந்தனை அரங்கம்
நிகழ்வில்
தமிழகத்தின் சிறந்த புத்தக எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள் விஞ்ஞானிகள் ஆகியோர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
புத்தக சேமிப்புத் திட்டம்,
தமிழகப் புத்தகத் திருவிழாக்களிலேயே
ஓசூர் புத்தகத் திருவிழாவில் மட்டுமே
நடத்தப்படுகிறது.
புத்தக ஆர்வலர்கள், நூலகப்பிரியர்கள், எழுத்தாளர்கள், சாமானியர்கள், கல்வியாளர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாதாமாதம் ரூ.100 செலுத்தி புத்தகச் சேமிப்புத் திட்டத்தில் இணைந்து புத்தகத் திருவிழாவில் புத்தகங்களைப் பெற்று பயனடைந்தனர்.
மகளிர் சங்கமம்
மகளிர் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக மகளிர் சங்கமம் என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மகளிர் சங்கமத்தில் மகளிருக்கான விவாதமேடை, பாட்டுப்போட்டி, குறு மற்றும் மௌன நாடகம், மாறுவேடப்போட்டி என பலபோட்டிகளும் நடைபெற்றது.
அரங்கத்தினுள் உடனடி போட்டியாக
அந்தநாள் ஞாபகம்,
வார்த்தை ஜாலம்,
நடிங்க கண்டுபிடிங்க,
விடுகதைகள்,
பல நிகழ்வுகளும்,
அரசுப்பள்ளி
மலைவாழ் குழந்தைகளுக்காக
அறிவியல் மற்றும் உளவியல் குறித்த செயல்பாடுகளை ஒருங்கிணைத்து குழந்தைகளுக்கானச் சங்கமத்தில்
ஜில் ஜாலி கலாட்டா
என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியும்,
பெண்களுக்காகவே பிரத்தியேக
ஒரு நாள் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
புத்தகம் நன்கொடை
மேலும், அரசு பள்ளி மாணவர்கள் படிக்கும் விதமாக அந்த நூலகங்களுக்கு ரூ.2 லட்சம் வரைக்கும் இந்த புத்தக திருவிழாவில் புத்தகங்கள் வாங்கி அரசு பள்ளிகளில் கொண்டு சேர்க்கப்பட்டது.
இந்த புத்தகத் திருவிழாவில்
குழந்தை எழுத்தாளர்கள்
முதல் முதலாக குழந்தைகள் எழுதிய புத்தகங்கள் அனைவரும் பார்க்கும் விதமாக அவர்களே வெளியிட்டனர்.
மேலும், எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும், பொதுமக்களும் தங்களுடைய கற்பனைகளைக் கைத்திறனால்
ஓவியம் ஆக்கும் போட்டி,
மாணவர்களிடையே இருக்கக்கூடிய அறிவியல் மனப்பான்மையை வெளிக்கொணரவும்,
போட்டித் தேர்வுகளில் மாணவர்களை தயார் செய்யவும்
வினாடி வினா போட்டி,
மாணவர்களை வாசிப்புப் பழக்கத்தில் ஈடுபடுத்தவும்,
எதிர்காலத்தில் எழுத்தாளர்களாக மாற்ற
கதை எழுதும் போட்டி,
புகைப்படப் போட்டி,
சதுரங்க விளையாட்டு போட்டி
உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
மேலும் இந்த புத்தகத்திருவிழாவில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
சார்பில்
ரத்த தானம் முகாம்
நடத்தி வாசகர்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புத்தகங்களை பார்வையிட
வருகை தந்த வாசகர்கள் மூலமாக
120 யூனிட் ரத்தம் நன்கொடையாக
சேகரிக்கப்பட்டு,
ஓசூர் சிப்காட் அரிமா சங்க
ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.
இந்த 15-வது புத்தகத் திருவிழா
ஏற்பாடுகளை
புத்தகத் திருவிழா குழு தலைவர்
திரு. நீலகண்டன்,
துணைத்தலைவர்கள்
திரு.ஆ.சிவக்குமார்,
திருமதி.மணிமேகலை,
திரு.முருகன்,
அரிமா. ஆர். ரவிசங்கர்,
புத்தகத் திருவிழா
ஒருங்கிணைப்பாளர்கள்
திரு.சேதுராமன்,
திரு.சந்துரு,
திரு.பாலகிருஷ்ணன்,
திரு.அரிச்சந்திரன்,
திரு.பாரதிதாசன்,
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
---------------------------------------------.