15-வது
ஓசூர் புத்தகத் திருவிழா
24.07.2026 முதல் 4.08.2026 வரை
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
15-வது ஓசூர் புத்தகத் திருவிழாவை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி. ஜுலை. 24. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி,
மூக்காண்டப்பள்ளி,
ஹோட்டல் ஹீல்ஸ் கன்வர்சன் ஹாலில், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்
மற்றும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
இணைந்து
24.07.2026 முதல் 04.08.2026 வரை
12 நாட்கள் நடத்தும்
15-வது ஒசூர் புத்தகத் திருவிழாவை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.பா.முகுந்தன் (கிருஷ்ணகிரி),
திரு.இ.சி.கோவிந்தராசன் (பர்கூர்)
ஆகியோர் முன்னிலையில்
(24.07.2026) துவக்கி வைத்து,
புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
"தொட்டுத் தொட்டு பார்த்தால் காகிதம் அதைத் தொடர்ந்து படித்தால் ஆயுதம்"
என்பதை மனதில் வைத்து, இந்த புத்தக திருவிழாவில் அனைவரும் புத்தகம் வாங்கி படிக்கவேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஒசூர் ஓட்டல் ஹீல்ஸ், கன்வர்சன் ஹாலில், இன்று 24.07.2026 முதல் 04.08.2026 வரை 12 நாட்கள் காலை 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் மொத்தம்
103 அரங்குகள், 1 இலட்சம் தலைப்புகளில் கோடிக்கணக்கானப் புத்தகங்களுடன், 3 இலட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு வாங்கும் அனைத்துப் புத்தகங்களையும்
10 சதவிகிதம் கழிவு விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
நாள்தோறும் அரசு பள்ளி மாணவர்கள் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தர பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் வந்து புத்தகங்களை
வாங்கிச் செல்ல பல தன்னார்வலர்களின் உதவியோடு ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும்,
நாள்தோறும்
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
குழந்தைகளின் கண்கவர்
பல்சுவை கலை நிகழ்ச்சிகளும்,
சிந்தனை அரங்கம் நிகழ்வில்
தமிழகத்தின் சிறந்த புத்தக
எழுத்தாளர்கள்,
சொற்பொழிவாளர்கள்,
சமூக செயற்பாட்டாளர்கள்,
மக்கள் விஞ்ஞானிகள்
ஆகியோர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், பட்டிமன்றம்,
பாரம்பரிய நாட்டுப்புற
கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட
பல்வேறு நிகழ்ச்சிகள்
நடைபெற உள்ளது.
மேலும்,
புத்தக சேமிப்புத் திட்டம்,
தமிழகப் புத்தகத் திருவிழாக்களிலேயே
ஓசூர் புத்தகத் திருவிழாவில்
மட்டுமே நடத்தப்படுகிறது.
புத்தக ஆர்வலர்கள்,
நூலகப்பிரியர்கள், எழுத்தாளர்கள்,
சாமானியர்கள், கல்வியாளர்கள்,
தொழிலாளர்கள், மாணவர்கள்,
இல்லத்தரசிகள் அனைவரையும்
ஒருங்கிணைத்து
மாதாமாதம் ரூ.600 செலுத்தி
புத்தகச் சேமிப்புத் திட்டத்தில்
இணைந்து புத்தகத் திருவிழாவில்
புத்தகங்களைப் பெற்று
பயனடைகிறார்கள்.
மகளிர் திறமைகளை
வெளிக்கொணரும் விதமாக
மகளிர் சங்கம் என்ற நிகழ்வு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சங்கமத்தில் மகளிருக்கான
விவாதமேடை, பாட்டுப்போட்டி,
குறு மற்றும் மௌன நாடகம்,
மாறுவேடப்போட்டி
என பலபோட்டிகளும்
அரங்கத்தினுள் உடனடி போட்டியாக
அந்தநாள் ஞாபகம்,
வார்த்தை ஜாலம்,
நடிங்க கண்டுபிடிங்க,
விடுகதைகள் 61601 பல நிகழ்வுகளும்,
அரசுப்பள்ளி மலைவாழ் குழந்தைகளுக்காக அறிவியல் மற்றும்
உளவியல் குறித்த செயல்பாடுகளை ஒருங்கிணைத்து
குழந்தைகளுக்கானச் சங்கமத்தில்
ஜில் ஜாலி கலாட்டா என்ற
குழந்தைகளுக்கான நிகழ்ச்சியும், பெண்களுக்காகவே பிரத்தியேக
ஒரு நாள் நிகழ்வு நடைபெற உள்ளது.
மேலும்,
அரசு பள்ளி மாணவர்கள் படிக்கும் விதமாக அந்த நூலகங்களுக்கு ரூ.2 இலட்சம் வரைக்கும் இந்த புத்தக திருவிழாவில் புத்தகங்கள் வாங்கி அரசு பள்ளிகளில் கொண்டு சேர்க்கப்படும்.
முதல் முதலாக குழந்தைகள் எழுதிய புத்தகங்கள் அனைவரும் பார்க்கும் விதமாக அவர்களே வெளியிட உள்ளனர்.
மேலும்,
எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும்,
பொதுமக்களும் தங்களுடைய கற்பனைகளைக் கைத்திறனால் ஓவியம் ஆக்கும் போட்டி,
மாணவர்களிடையே இருக்கக்கூடிய அறிவியல் மனப்பான்மையை வெளிக்கொணரவும்,
போட்டித் தேர்வுகளில் மாணவர்களை தயார் செய்யவும் வினாடி வினா போட்டி,
மாணவர்களை வாசிப்புப் பழக்கத்தில் ஈடுபடுத்தவும்,
எதிர்காலத்தில் எழுத்தாளர்களாக மாற்ற
கதை எழுதும் போட்டி,
புகைப்படப் போட்டி,
சதுரங்க விளையாட்டு போட்டி
உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது.
மேலும்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
கல்லில் உரைந்த வரலாறு புத்தகம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின்
கோட்டைகள்,
கல்வெட்டுகள்,
பாறை ஓவியங்கள்,
புராதான அகழ்வாராய்ச்சி சின்னங்கள்
குறித்த விவரங்கள் இப்புத்தகத்தில்
இடம் பெற்றுள்ளது.
எனவே,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள், புத்தக வாசிப்பாளர்கள்
ஆகியோர் இப்புத்தக கண்காட்சியில்
கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நூல்களை வாங்கி படித்து பயனடையலாம்.
தொடர்ந்து,
ஊத்தங்கரை மற்றும் கிருஷ்ணகிரி
ஆகிய பகுதிகளிலும் புத்தக் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மூன்று இடங்களில் புத்தக திருவிழா நடத்தப்படும் ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டமாகும்.
பல்வேறு துறை சிறந்து விளங்ககூடிய கிருஷ்ணகிரி மாவட்டம்
வாசிப்பு துறை சிறந்து விளங்கி
பல்வேறு புத்தகங்களை மக்களிடையே சேர்ப்பதற்கு உண்டான முயற்சிகளை
நாம் அனைவரும் எடுப்போம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில்
தாய் மொழியில் கதை எழுதும் போட்டியில்
தேர்வு செய்யப்பட்ட
25 மாணவ, மாணவியர்களின்
புத்தக தொகுப்பை வெளியிட்டார்.
மேலும்,
ஒரே நேரத்தில் செலவு செய்து
அதிகமாக புத்தகம் வாங்க முடியாத
நிலையிலுள்ளவர்களுக்கு
புத்தக சேமிப்புத் திட்டம் மூலம்
400 நபர்கள் மாதாமாதம் ரூ.600 செலுத்தி
புத்தகச் சேமிப்புத் திட்டத்தில்
இணைந்து ரூ.6 இலட்சம் மதிப்பில்
புத்தகங்களை பெற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில்
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகம்மது ஷபீர் ஆலம், இ.ஆ.ப,
உதவி ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய்சைதன்யா ஜாதவ், இ.ஆ.ப.,
ஒசூர் புத்தகத் திருவிழா தலைவர்
திரு.ஆர்.நீலகண்டன்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
திரு.மதன்குமார்,
மாவட்ட நூலக அலுவலர்
திருமதி.சந்தானலட்சுமி,
ஓசூர் அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி முதல்வர்
முனைவர்.பாக்கியமணி,
வட்டாட்சியர்
திரு.ஜெகதீஷ்குமார்,
புத்தகத் திருவிழா
துணைத்தலைவர்கள்
திரு.ஆ.சிவக்குமார்,
திருமதி.மணிமேகலை,
திரு.முருகன்,
புத்தகத் திருவிழா
ஒருங்கிணைப்பாளர்கள்
திரு.சேதுராமன்,
திரு.சந்துரு,
திரு.பாலகிருஷ்ணன்,
திரு.அரிச்சந்திரன்,
திரு.பாரதிதாசன்,
அரிமா.ஆர். ரவிசங்கர்.
பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------------.