அரசுப்பள்ளி
மாணவர்களுக்கு
புத்தகங்கள் நன்கொடை
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
15-வது ஓசூர் புத்தகத்திருவிழா அரங்கில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மற்றும்
அனைத்து ஓசூர் அரிமா சங்கங்கள்
இணைந்து
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு
புத்தகம் வழங்கும் விழா
ஓசூர். ஜுலை. 31. –
ஓசூர் மாநகராட்சியில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மற்றும்
அனைத்து ஓசூர் அரிமா சங்கங்கள்
இணைந்து
10 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு
(நூலகங்களுக்கு)
தலா 10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள்
வழங்கும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சியில் இயங்கி வரும்
அனைத்து அரிமா சங்கங்கள் சார்பில்
சமுதாயத்தில் நலிவடைந்த
மக்களின் முன்னேற்றத்துக்காக
பல்வேறு நலத்திட்ட
உதவிகள் செய்யப்படுகிறது.
குறிப்பாக
அனைத்து ஓசூர் அரிமா சங்கங்களின் சார்பில்
அரசுப்பள்ளி, அரசு மருத்துவமனைகளுக்கு
தேவையான உபகரணங்களை
நன்கொடையாக வழங்குவது,
ரத்த தானம் முகாம்கள்,
இலவச கண் சிகிச்சை
மருத்துவ முகாம்கள் நடத்துவது
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட
உதவிகள் செய்யும் பணியில்
அனைத்து ஓசூர் அரிமா சங்கங்களின்
நிர்வாகிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மற்றும்
அனைத்து ஓசூர் அரிமா சங்கங்கள்
இணைந்து
ஓசூர் ஹில்ஸ் ஹோட்டல்
அரங்கில் நடைபெற்று வரும்
ஓசூர் புத்தகத்திருவிழாவில்
(24-07-2026 முதல் 4-08-2026வரை)
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு
புத்தகங்கள் நன்கொடையாக
வழங்கும் விழா நடைபெற்றது.
ஓசூர் 15-வது புத்தகத்திருவிழா அரங்கில்
ஜுலை 31-ம் தேதி காலை 11 மணிக்கு
நடந்த இந்த விழாவில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
ஓசூர் புத்தகத்திருவிழா தலைவர்
திரு. ஆர். நீலகண்டன்
முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
ஓசூர் புத்தகத்திருவிழா
ஒருங்கிணைப்பாளர்
முனைவர் ஆர். சேதுராமன்
துவக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஓசூர் புத்தகத்திருவிழா துணைச்செயலாளர்
திரு.ஜெ. ஹரிச்சந்திரன்
அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்கள்
மாவட்ட ஆளுநர்,
அரிமா.P.பொன்னுசாமி,
முன்னாள் மாவட்ட ஆளுநர்
அரிமா. T. ரவிவர்மா,
ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த விழாவில்
ஓசூர் மாநகராட்சியில் உள்ள
10 அரசுப்பள்ளிகளின் நூலகங்களுக்கு
தலா 10 ஆயிரம் மதிப்புள்ள
புத்தகங்கள் நன்கொடையாக
வழங்கப்பட்டது.
இந்த விழாவில்
ஓசூர் அரிமா சங்கம் - எலைட் -
தலைவர்.
அரிமா.K.நாகேந்திர கிருஷ்ணப்பா,
ஓசூர் அரிமா சங்கம் - ஹில்ஸ் –
தலைவர்
அரிமா. A.சுப்பிரமணியன்,
ஒசூர் அரிமா சங்க - மேக்னம். -
தலைவர்
அரிமா.S.வினோத்குமார்.
ஓசூர் அரிமா சங்கம் - இம்பேக்ட் –
தலைவர்.
அரிமா. D.சரவணன்,
ஓசூர் அரிமா சங்கம் - கேலக்ஸி –
தலைவர்.
அரிமா. Dr.M. நாகராஜன்,
ஓசூர் அரிமா சங்கம் - ஓசூர் லேக் –
தலைவர்.
அரிமா. M.பாண்டியன்,
ஓசூர் அரிமா சங்கம் – ரோஸ்சிட்டி –
தலைவர்.
அரிமா.N.கோபிநாத்,
ஓசூர் அரிமா சங்கம் – சிப்காட் –
தலைவர்.
அரிமா. A.கணேசன்,
ஆகிய அனைத்து ஓசூர் அரிமா சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புத்தகம் வழங்கும் நிகழ்வு ஒருங்கிணைப்பு
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்,
ஓசூர் புத்தகத்திருவிழா
துணைத்தலைவர்
அரிமா. R. ரவிசங்கர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஓசூர் புத்தகத்திருவிழா
திரு. A. சிவக்குமார்.
ஆகியோர் விழா ஒருங்கிணைப்பு பணிகளை
சிறப்பாக செய்தனர்.
இந்த விழாவில்
புத்தகத்திருவிழா நிர்வாகிகள்,
அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-------------------------------------------.