கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,
கூட்டுறவுத்துறையுடன் இணைந்து
பல்வேறு பகுதிகளில் குடிமைப்பொருட்கள்
இருக்கும் கிடங்குகள்,
பொருட்களின் தரம் குறித்து
மாண்புமிகு
உணவு மற்றும் உணவுப்பொருள்
வழங்கல் துறை அமைச்சர்
திரு.ப.வெங்கட ரமணன்
அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி. ஜுலை. 26. -
கிருஷ்ணகிரி இராஜாஜி நகர்,
சமூகநீதி பெண்கள் 2 மற்றும்
சமூகநீதி மாணவிகள் விடுதிகளில்,
புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள
நியாயவிலை கடை, சென்னை சாலை,
தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிப கழக கிடங்கு,
ஓசூர் மாநகராட்சி, காந்தி நகர்,
அமுதம் நியாய விலைக்கடை,
ஓசூர் கக்கனூர், ராகி கொள்முதல் நிலையம்,
கெலவரப்பள்ளி அணைக்கட்டு
பகுதியில் வசிக்கும்
இலங்கை வாழ் மக்கள் குடியிருப்பு
பகுதி ஆகியவற்றை
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள்
வழங்கல் துறை அமைச்சர்
திரு.ப.வெங்கட ரமணன்
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.பா.முகுந்தன் (கிருஷ்ணகிரி),
திரு.ந.இளையராஜா (ஊத்தங்கரை)
ஆகியோர் முன்னிலையில்
இன்று (26.07.2026)
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு
உணவு மற்றும் உணவுப்பொருள்
வழங்கல் துறை அமைச்சர்
திரு.ப.வெங்கட ரமணன்
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் ஆணைக்கிணங்க,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,
கூட்டுறவுத்துறையுடன் இணைந்து
பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து,
பொருட்கள் இருக்கும் கிடங்குகள்,
பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி,
ஓசூர்,
தருமபுரி
பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றது.
அதில் கிடங்குகளில் இருந்து செல்ல கூடிய பொருட்கள் எடை குறைவாக வருகிறது எனவும்,
மாதம் மாதம் 20 ஆம் தேதிக்கு மேல் அரிசி மட்டும் உள்ளது மற்ற பொருட்கள் கிடைப்பதில்லை என புகார்கள் வரப்பெற்றுள்ளது.
அதனடிப்படையில்,
இன்று (26.07.2026) கிருஷ்ணகிரி வட்ட வேளான்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கட்டுப்பாட்டில் புதிய வீட்டு வசதி வாரியத்தில் கடை எண்: 30AE013PN நியாயவிலை கடை 1637 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில்
அரிசி,
சர்க்கரை,
பருப்பு,
சமையல் எண்ணெய்
உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து,
கிருஷ்ணகிரி, சென்னை சாலை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில்
அரிசி,
கோதுமை,
சர்க்கரை,
பருப்பு
உள்ளிட்ட பொருட்களின் இருப்பு, தரம்
குறித்து ஆய்வு மேற்கொண்டு,
கிடங்கை தூய்மையாக
பராமரிக்க வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்த பொருட்கள் ஏற்றிக்கொண்டு வரும் லாரிகள் சரியான முறையில் வருகிறதா எனவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
52 மில் பச்சரிசிக்காகவும்,
5 மில் புலுங்கல் அரிசிக்காகவும்
செயல்பட்டு வருகிறது.
அதில் நெல், பருப்பு ஆகியவை உமிநீக்கும் பணிகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து,
ஓசூர் மாநகராட்சி, காந்தி நகர்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், அமுதம் நியாய விலைக்கடையில்
அரிசி,
சர்க்கரை,
பருப்பு,
சமையல் எண்ணெய்
உள்ளிட்ட பொருட்களின் இருப்பு,
குடும்ப அட்டைதாரர்களுக்கு
வழங்கப்பட்ட பொருட்களின் விவரம்
குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து,
ஒசூர் ஊராட்சி ஒன்றியம்,
சேவகானப்பள்ளி ஊராட்சி,
கக்கனூர் கிராமம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்
ராகி கொள்முதல் நிலையத்தை
பார்வையிட்டு, விவசாயிகளுடன்
கலந்துரையாடி,
ராகி கொள்முதல்,
பயன்பெறும் விவசாயிகள் விபரம்,
கொள்முதல் செய்யப்பட்ட தொகை,
விவசாயிகளின் வங்கி கணக்கில்
செலுத்திய தொகை விபரம்
குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையத்தில்
210 விவசாயிகள் பதிவு பெற்று,
195 விவசாயிகளிடம் இருந்து
509.95 டன் மதிப்பில் 10,199 மூட்டைகள்
கொள்முதல் செய்யப்பட்டுள்ளதை
நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து,
கெலவரப்பள்ளி அணைக்கட்டு
பகுதியில் வசிக்கும்
இலங்கை வாழ் மக்கள் குடியிருப்பு
பகுதியில் மக்களை நேரில் சந்தித்து,
அவர்களுக்கு வழங்கப்படும்
குடிமைப்பொருட்கள் முறையாக
வழங்கப்படுகிறதா என்பது குறித்தும்,
அடிப்படை வசதிகள் குறித்து
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும்,
இலங்கை வாழ் மக்கள் குடியிருப்பு
பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில்
அரிசி,
சர்க்கரை,
பருப்பு,
சமையல் எண்ணெய்
உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக,
கிருஷ்ணகிரி இராஜாஜி நகர், முதல் தெரு பகுதியில் உள்ள
சமூகநீதி பெண்கள் -2
மற்றும்
சமூகநீதி மாணவிகள் விடுதிகளில்
நேரில் பார்வையிட்டு,
விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு
காலை, மதியம் மற்றும்
இரவு நேரங்களில் வழங்கப்படும்
உணவு, உணவுகளின் தரம்,
அடிப்படை வசதிகள்,
கழிப்பறை வசதிகள் குறித்து கேட்டறிந்து,
விடுதி மாணவிகள் வாட்டர் ஹீட்டர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்,
பொருட்கள் வைப்பதற்கான அலமாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தையெடுத்து, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இளைஞர்கள் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் அதனால் மாணவர்கள் நல்ல முறையில் படித்து உயர்ந்த நிலைக்கு வந்து நல்ல வேலைவாய்பை பெறவேண்டும் என
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள்
வழங்கல் துறை அமைச்சர்
திரு.ப.வெங்கட ரமணன்
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில்,
மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி.த.மஞ்சுளா,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப.,
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
கூட்டுறவு சங்கங்களின்
இணைப் பதிவாளர்
திரு.நடராஜன்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக
மண்டல மேலாளர்
திரு.தணிகாச்சலம்,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
திரு.சிவக்குமார்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நல அலுவலர்
திரு.அமீர் பாஷா,
வேளாண்மை துறை இணை இயக்குநர்
செல்வி.உமா,
துணை பதிவாளர்
(பொதுவிநியோக திட்டம்)
திரு.சிவகுருநாதன்,
வட்ட வழங்கல் அலுவலர்
திரு.பரிமேல் அழகன்,
வட்டாட்சியர்கள்
திருமதி.ராஜலட்சுமி,
ஜெகதீஷ்குமார்,
பறக்கும் படை வட்டாட்சியர்
திரு.பூவிதன்.
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
------------------------------------------------------.