கிருஷ்ணகிரி மற்றும்
ஓசூர் பகுதிகளில்
ரூ.4 கோடியே 76 லட்சத்து 73 ஆயிரம்
மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
செல்வி.ச.கீர்த்தனா
அவர்கள் திறந்து வைத்தார்.
கெலவரப்பள்ளி அணைப் பகுதியை
சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம்
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
அவர்கள்
இன்று கோரிக்கை மனுக்களை
பெற்றுக்கொண்டு,
குறைகளை கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி. ஜுலை. 29. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
சென்னப்பள்ளி ஊராட்சியில்,
ரூ.26.82 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள
விவசாயம் சார்ந்த உணவு பதப்படுத்தும்
தொழில் வளாகம்,
ஒசூர் வட்டம்,
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம்,
ஓசூர் மாநகராட்சி,
மூக்காண்டப்பள்ளி,
ஹோட்டல் ஹீல்ஸ் கன்வர்சன் ஹாலில்
நடைபெற்று வரும்
15 -வது ஓசூர் புத்கத் திருவிழாவை
பார்வையிட்டு,
பாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
ரூ.44,01,000 மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள
6 வட்டார அளவிலான ஒருங்கிணைந்த
மறுவாழ்வு சேவை மையங்கள்,
கிருஷ்ணகிரி மாவட்ட
விளையாட்டு வளாகத்தில்,
ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில்
கட்டப்பட்டுள்ள புதிய பாரா
விளையாட்டு அரங்கம் மற்றும்
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,
ரூ.2 கோடியே 82 லட்சத்து 72 ஆயிரம்
மதிப்பில் கட்டப்பட்டுள்ள
12 புதிய வகுப்பறைகளை
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
செல்வி.ச.கீர்த்தனா
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.பாலகிருஷ்ணா ரெட்டி (ஓசூர்),
திரு.பா.முகுந்தன் (கிருஷ்ணகிரி)
ஆகியோர் முன்னிலையில்
(29.07.2026) திறந்து வைத்தார்.
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
செல்வி.ச.கீர்த்தனா
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை
மற்றும் வேளாண் வணிகத்துறையின்
மூலம்
சூளகிரி வட்டம், சென்னப்பள்ளியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.26.82 கோடி மதிப்பீட்டில் விவசாயம் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழில் வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வளாகத்தில் விவசாயம் சார்ந்த உணவு தொழில்முனைவோர்கள் பொதுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் 5000 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு,
2500 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, தரம்பிரிப்பு மையம், 60 மெ.டன் எடைமேடை மற்றும் நிர்வாக அலுவலகம் ஆகிய கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு பதப்படுத்தப்பட்ட காய்கறிகள்,
பழங்கள், தக்காளிகூழ் மற்றும்
பால்சார்ந்த பொருட்களுக்கான
தொழில் தொடங்கிட GRG Fine Foods Pvt Ltd
என்ற நிறுவனத்திற்கு
30 ஆண்டுகளுக்கு காலியிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிறுவனம் தங்களுக்கு தேவையான கட்டுமானம் மற்றும் இயந்திரங்களை தேர்வுசெய்து அமைத்துக் கொள்ளலாம்.
இதற்கான மின்வசதிகள், சாலைகள் ஆகியவை அரசே அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ள 2500 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புகிடங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வாடகைக்கு விடப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து,
ஓசூர் வட்டம்,
கெலவரப்பள்ளி அணை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூரு நகரிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத மற்றும் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கெலவரப்பள்ளி அணையில் கலப்பதால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கர்நாடக எல்லைப்பகுதியான சொக்கரசன்பள்ளியில் மாதந்தோறும் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது.
மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை கடிதம் எழுதி, கர்நாடக அரசின் மூலம் கழிவுநீர் கலப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. மேலும்,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் குறைகள் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து,
ஒசூர் வட்டம், பாகலூர்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,
வேப்பனப்பள்ளி வட்டம்,
நாச்சிக்குப்பம் அரசு ஆரம்ப
சுகாதார நிலையம் (ரூ.6,65,000),
ஓசூர் வட்டம், பாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (ரூ.7,50,000),
தளி வட்டம், தளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (ரூ.5,36,000),
அஞ்செட்டி வட்டம், அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (ரூ.10,20,000),
மத்தூர் வட்டம், மத்தூர் அரசு மருத்துவமனை (ரூ.7,65,000),
காவேரிப்பட்டிணம் வட்டம், பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (ரூ.6,65,000)
ஆகிய 6 இடங்களில் இரண்டாம் கட்டமாக ரூ.44,01,000 மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான
பராமரிப்பு மறுவாழ்வு சேவைகள்,
ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகள்
மேற்கொள்ளும்
தமிழ்நாடு உரிமைகள் திட்டம்
(TN-RIGHTS) ன் கீழ்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில்
17 ஒருங்கிணைந்த மறுவாழ்வு
சேவை மையங்கள்
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக
7 ஒருங்கிணைந்த சேவை மையங்கள்
திறந்து வைக்கப்பட்டு
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இம்மையங்களில் மாற்றுத்திறாளிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையில்
இயன்முறை சிகிச்சை,
சிறப்பு கல்வி,
உளவியல் ஆலோசனை,
ஆக்குபேஷன் தெரபி,
பேச்சு மற்றும் மொழி தெரபி
மற்றும்
பார்வை குறைபாடுகளை கண்டறிதல்
போன்ற பயிற்சிகள்
மோற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மூலம் சேவை மையங்களுக்கு வர இயலாத மாற்றுத்திறாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து,
ஒசூர் மாநகராட்சி, மூக்காண்டப்பள்ளி,
ஹோட்டல் ஹீல்ஸ் கன்வர்சன் ஹாலில்,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்
இணைந்து நடத்துகிற
15-வது ஓசூர் புத்தகத் திருவிழாவில்
அமைக்கப்பட்டுள்ள
புத்தக அரங்குகளை பார்வையிடப்பட்டது.
இன்று
ஜூஜூவாடி
அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆர்.வி.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
பாகலூர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
மூக்காண்டப்பள்ளி
அரசு உயர்நிலைப்பள்ளி,
சீத்தாராம் நகர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
பெத்தபேலகொண்டப்பள்ளி
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு
போக்ஸ்சோ சட்டம் விழிப்புணர்வு
குறித்த புத்தகங்களை வெளியிடப்பட்டு,
மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும்,
புத்தகத் திருவிழா குழுவின் சார்பில், குளோபல் கால்சியம் நிறுவனம் சமூக பொறுப்பு நிதியின் மூலம் இன்று 6 அரசு பள்ளியின் நூலகங்களுக்கு தலா ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புத்தகத் திருவிழா குழுவின் மூலம் 20 பள்ளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து,
கிருஷ்ணகிரி மாவட்ட
விளையாட்டு வளாகத்தில்,
ரூ.1.50 கோடி மதிப்பீட்டில்
கட்டி முடிக்கப்பட்டுள்ள
புதிய பாரா விளையாட்டு அரங்கம்
இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பாரா விளையாட்டு அரங்கில், உள் விளையாட்டு அரங்கம், கழிப்பறைகள் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வசதிகள் மூலம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பான மற்றும் தரமான சூழலில் பயிற்சி பெற முடியும்.
மேலும், இவ்வரங்கம் தொடர்ச்சியான பயிற்சி, திறமைக்கண்டறிதல், திறன் மேம்பாடு மற்றும் புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்க பெரிதும் துணைபுரியும்.
இதன்மூலம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தொடர்ந்து,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,
நபார்டு திட்டத்தின் கீழ்,
ரூ.2 கோடியே 82 லட்சத்து 72 ஆயிரம்
மதிப்பில் கட்டப்பட்டுள்ள
12 புதிய வகுப்பறைகள்
மாணவர்களின் பயன்பாட்டிற்காக
திறந்து வைக்கப்பட்டுள்ளது என
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
செல்வி.ச.கீர்த்தனா
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்
திரு.வி.புருஷோத்தமன்,
வேளாண்மைத்துறை
இணை இயக்குநர் (பொ)
செல்வி.உமா,
நீர்வளத்துறை செயற்பொறியாளர்
திரு.செந்தில் குமார்,
இணை இயக்குநர் (நலப்பணிகள்)
மரு.மோகனபானு,
துணை இயக்குநர் (வேளாண் வணிகம்)
திரு.மோகன்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
திரு.மதன் குமார்,
மாற்றுத்திறனாளி நல அலுவலர்
திரு.முருகேசன்,
மாவட்ட விளையாட்டு மற்றும்
இளைஞர் நலன் அலுவலர்
திரு.நடராஜமுருகன்,
வட்டாட்சியர்கள்
திரு.ஜெகதீஸ் குமார்,
திரு.ரமேஷ்,
திருமதி.ராஜலட்சுமி,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.வெங்கடேசன்,
திரு.முகம்மது சிராஜூதின்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------------------------.