ஜோதி தமிழ்
செய்திகள்
இணையஇதழ்
மலர்-2- இதழ்கள் - 279a
கிருஷ்ணகிரி மாவட்டம்
நோய் தடுப்பு மருந்து துறை
மருத்துவர்களுக்கான
ஆய்வுக் கூட்டம்
கலெக்டர் தலைமை
செய்தி ஆசிரியர் - ஜோதி ரவிசுகுமார்,M.A.
மருத்துவர்களுக்கான
ஆய்வுக் கூட்டம்
கலெக்டர் தலைமை
செய்தி ஆசிரியர் - ஜோதி ரவிசுகுமார்,M.A.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
பொது சுகாதாரம் மற்றும்
நோய் தடுப்பு மருந்து துறை
மருத்துவர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி.ஆகஸ்ட். 5. –
பருவகால மாற்றங்களுக்கேற்ப ஏற்படும்
காய்ச்சல் மற்றும் இதர நோய்களை
மருத்துவர்கள் கண்டறிந்து
உரிய தடுப்பு முறைகளை
கையாள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் அறிவுரை.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
அரசு மருத்துவக் கல்லூரி,
மருத்துவ நலப்பணிகள்,
மாவட்ட சுகாதார துறை பணிகள் மற்றும்
மருத்துவ அலுவலர்களுக்கான
ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
இன்று (05.08.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி
அரசு மருத்துவக்கல்லூரியில் பயன்பெறும் மருத்துவ பயனாளர்கள் குறித்தும்
அவர்களுக்கு வழங்கப்படும்
சிகிச்சைகள் குறித்தும்
கடந்த ஏப்ரல் 2026 முதல் ஜூலை 2026 வரை
நான்கு மாதத்திற்கான
மருத்துவ பணிகள் குறித்து
இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
வருகை தரும் மருத்துவ பயனாளிகளில்
வெளி நோயாளர்கள் சிகிச்சைக்கும்,
உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும்
சிகிச்சை முறைகளில் உள்ள
புள்ளி விவர வேறுபாடுகளை
மிக சரியாக பராமரிக்க வேண்டும்.
மேலும்,
நாய்கடி மற்றும்
பாம்புகடிகளால் பாதிக்கப்பட்ட
நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை
அளிப்பதுடன் எந்த பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்ற விவரம் கண்டறிந்து
மாவட்ட நிர்வாகத்திற்கு
அவ்வப்போது தகவல்
தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக மலை கிராமங்களில் பாதிக்கப்பட்டவர்களா என
ஆய்வு செய்ய வேண்டும்.
குழந்தை இறப்பு விகிதம்
குறைக்க தேவையான
நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்,
இறந்தே பிறக்கும் குழந்தைகளின்
தாய்மார்களை பிரசவ காலத்தில்
முறையான கவனிப்புகள் மூலம்
கண்டறிந்து இறப்பு விகிதத்தை
குறைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
மகப்பேறு இறப்பு கட்டுப்படுத்துதல் குறித்த ஆய்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக இருப்பதற்கேற்றவாறு மாவட்ட சுகாதார துறை மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
மகப்பேறு பிரிவில் அறுவை அரங்கங்கள் மற்றும் அனைத்து பிரிவுகளும் நோய் கிருமி நாசினிகள் தெளித்து தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு
இரும்புச்சத்து மருந்துகள்,
முருங்கை கீரை,
பேரிச்சை பழச்சாறு
உட்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பூரண நலம் பெறுவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்.
சமூக நலத்துறை உதவியுடன்
மூன்றாம் பாலினத்தினருக்கு
அளிக்க வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலம்
சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களுக்கான சிகிச்சைகளை மேம்படுத்த வேண்டும்.
அதன் புள்ளி விவரங்கள் மிகச் சரியாக
வழங்கப்பட வேண்டும்.
கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவ பயனாளிகளை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
9 வயது முதல் 14 வயதுள்ள
பெண் குழந்தைகளுக்கு
பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து
தடுப்பூசி வழங்கிட தக்க நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
புற்று நோய் சிகிச்சை பிரிவில் பயன்பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரண மருந்துகள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
இவை தவறுதலாக
பயன்படுத்தப்படுகின்றனவா
என்பதை மருத்துவர்கள் கண்டறிய வேண்டும்.
பருவ காலத்தின் மாற்றங்களுக்கேற்ப ஏற்படும் காய்ச்சல் மற்றும் இதர நோய்களை கண்டறிந்து தடுப்பு முறைகளை கையாள வேண்டும்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு
வரும் நோயாளர்களுக்கு
முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்
அனைவருக்கும் உரிய உயரிய
சிகிச்சை அளிக்க வேண்டும்.
காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
இயங்கி வரும் காப்பீட்டு மையத்தில் விண்ணப்பித்து காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தலைமையில்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு
மருந்து துறை சார்பாக,
மகப்பேறு பதிவேடு,
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
மகப்பேறு நிதியுதவி,
கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம்,
மக்களைத் தேடி மருத்துவம்,
பள்ளி சிறார் நலவாழ்வு திட்டம்,
தொற்றுநோய் கட்டுப்பாடு,
தடுப்பூசி திட்டம்,
தாய்சேய் நலம்,
தொழுநோய் குடும்ப நலம்,
பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடு,
காசநோய் தடுப்பு,
வட்டார மற்றும்
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
மேம்படுத்துதல் குறித்த
ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில்,
கிருஷ்ணகிரி
அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்
மரு.க.சத்திய பாமா,
இணை இயக்குநர் (நலப்பணிகள்) (பொ)
மரு.எழிலரசி,
மாவட்ட சுகாதார அலுவலர் (பொ)
மரு.அஜிதா,
உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்
மரு.மது,
மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
-------------------------------------------------.