கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
உளிவீரனப்பள்ளி
தளி சாலையில் உள்ள
இண்டஸ் TMT தொழிற்சாலை
CSR நிதியில்
மாணவர்களை ஊக்கப்படுத்தும்
திட்டத்தின் கீழ்
( Vidhya Protsaha Yojana)
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
ஓசூர். ஜுலை. 29. –
தேன்கனிக்கோட்டை வட்டம்
தளி சாலை,
உளிவீரனப்பள்ளியில் இயங்கி வரும்
இண்டஸ் டிஎம்டி தொழிற்சாலையின்
சி.எஸ்.ஆர். நிதியில்
மாணவர்களை ஊக்கப்படுத்தும்
திட்டத்தின் கீழ் ( Vidhya Protsaha Yojana)
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வழங்கும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
தளி சாலை உளிவீரனப்பள்ளியில்
பிரபலமான தனியார் தொழிற்சாலையான
இண்டஸ் டிஎம்டி தொழிற்சாலை
இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையின்
சிஎஸ்ஆர் நிதியின் கீழ்
நிறுவனர் மறைந்த
திரு. S.R. சந்தானந்தம்.
அவர்களின் நினைவாக
மாணவர்களை ஊக்கப்படுத்தும் திட்டம்
( Vidhya Protsaha Yojana)
தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும்
கல்வி உதவித்தொகை
வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் 3-வது ஆண்டு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வழங்கும் விழா ஜுலை 29-ம் தேதியன்று
இண்டஸ் டிஎம்டி தொழிற்சாலை
வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு
இண்டஸ் டிஎம்டி தொழிற்சாலையின்
மேலாண் இயக்குநர்
திரு. S.S.ஸ்ரீகாந்த்.
அவர்கள் தலைமை வகித்தார்.
திருமதி.S.S. பத்மபிரியா.
அவர்கள்
குத்துவிளக்கேற்றி விழாவை
தொடங்கி வைத்தார்.
சம்யாடா பவுண்டேன்
நிறுவனர், CEO
திரு. முரளி. M
அவர்கள்
அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக
தளி எம்எல்ஏ
திரு.T. ராமச்சந்திரன்,
ஓசூர் முன்னாள் எம்எல்ஏ
திரு. Y. பிரகாஷ்,
ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு
கல்வி உதவித்தொகை வழங்கி, சிறப்புரையாற்றினார்கள்.
இந்த விழாவில்
கல்வி உதவித்தொகை பெற்ற
மாணவர்கள், பெற்றோர் மற்றும்
இண்டஸ் டிஎம்டி தொழிற்சாலை
நிர்வாகிகள்,தொழிலாளர்கள்
கலந்து கொண்டனர்.
---------------------------------------.